திருப்பதி கோயிலுக்கும் விஜயநகர பேரசுக்கும் உள்ள சம்பந்தம், அதன் பின்னனியில் இருந்த ஒரு சுவையான காதல் கதை மற்றும் வழக்கமான பார்ப்பன புரட்டும் பற்றியது இந்த பதிவு (அந்த காதல் இன்றைய கோயிலின் வரலாற்றையே மாற்றியிருக்கும்)
விஜயநகர பேரரசு உண்மையில் பார்த்தால் ஒரே மன்னர் வம்சம் கிடையாது, அது 1336 - 1485 வரை சங்கம வம்சம், 1485-1491 வரை சாலுவ வம்சம், 1491-1542 வரை துளுவ வம்சம் மற்றும் 1542 - 1646 வரை அரவிடு வம்சம் என 4 வம்சங்களால், சுமார் 310 வருடங்கள் விஜநகரத்தை தலைநகரமாக கொண்டு ஆளப்பட்டது.
இதில் நம் கதாநாயகன் மன்னன் கிருஷ்ணதேவராயன், இவரது தந்தை நரச நாயகன், உண்மையில் தெலுங்கு தாய்மொழியாய் கொண்டவர் இல்லை, கர்நாடகத்தில்(தற்போதைய கூர்க்) துளு என்ற மொழியை தாய்மொழியாய் கொண்டவர், அவர் தலைமை தளபதியாக வேலை பார்த்த கடைசி சாலுவ வம்ச மன்னனான நரசிம்ம ராயனுக்கு வாரிசு இல்லாத காரணத்தால் மன்னன் ஆனார்.
நரச நாயகனுக்கு, மூன்று மகன்கள், முதலாமவன் வீர நரசிம்ம ராயன் மனைவிக்கும், இரண்டாமவன் கிருஷ்ணதேவ ராயன், மூன்றாமவன் அச்சுதராயன், இருவரும் வழக்கம் போல ஆசைநாயகிக்கும் பிறந்தவர்கள்.
நரச நாயகன், இறந்த பின் வீர நரசிம்ம ராயன் மன்னன் ஆன பின், தம்பியின் புகழ் மக்களின் பத்தியில் பரவுவதை ஏற்க முடியாமல், கிருஷ்ணதேவ ராயனை குருடனாக்கி விட்டால் தன 8 வயது மகனுக்கு பட்டம் ஏற எந்த தடையும் இருக்காது என ரகசியமாக முயற்சி செய்ய, இதை மனம் ஏற்காத மந்திரி திம்மண்ணா (என்ற) அப்பாஜி, கிருஷ்ணதேவ ராயனை ரகசியமாக தப்புவித்து, இரண்டு ஆட்டு கண்களை மன்னனிடம் காட்டி ஏமாற்றிவிடுகிறார்.
தப்பி சென்ற கிருஷ்ணதேவ ராயன், பல ஊர்களில் மாறுவேடத்தில் சுற்றித்திரிகிறான். அந்த காலகட்டத்தில் ஒரு கிராமத்தில், ஊர் பெயர் தெரியவில்லை, மைசூருக்கு அருகில் என்பார்கள், ஒரு அழகிய நாட்டிய பெண்ணின் மீது காதல் கொண்டு அவளோடே வாழ்ந்து வருகிறான், சில மாதங்களில் நோய்வாய்ப்பட்டு இருந்த அண்ணன் வீர நரசிம்ம ராயன் இறந்துவிட, அவன் மகன் 8வயது சிறுவன் என்பதால், மந்திரி அப்பாஜி (முதலில் கிருஷ்ணதேவ ராயனை தப்பிக்கவைத்தவர்) கிருஷ்ணதேவ ராயனை தேடி வந்து அழைத்து சென்று மன்னனாக்குகிறார். மன்னன் ஆனவுடன் கிருஷ்ணதேவராயன் செய்த முதல் வேலை அண்ணன் மகனை கொன்றது தான். ஆனால் போகும் பொது தன காதலியிடம் விரைவில் வந்து மணந்து கொண்டு அவளை பட்டது ராணி ஆக்குவேன் என உறுதி அளிக்கிறான்.
இது தெரிந்த அப்பாஜி முதல் வேலையாக தன் ஆட்களிடம் அவளை கொன்றுவிட கட்டளையிட்டு விட்டுத்தான் போகிறார், ஆனால் இளகிய மனம் படைத்த ஒரு நல்ல வீரன் அவளை தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேவதாசியாக விற்றுவிடுகிறான். அதாவது விபச்சார தொழிலுக்கு விற்றுவிடுகிறான்.
மன்னன் ஆனா கிருஷ்ணதேவராயன், அண்டை நாட்டு அரசியல் பகை காரணங்களுக்காக 4 பெண்ணைகளை திருமணம் செய்கிறான், அவர்களில் திருமலாதேவியை பட்டத்து ராணியாக அறிவிக்கிறான், இருப்பினும் தன் காதலை மறக்காமல் ஆட்களை அனுப்பி காதலியை தேடிக்கொண்டே இருக்கிறான்.
கடைசியாக அவள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருப்பதை கண்டு பிடித்து, அங்கே செல்கிறான். ஆனால் அவனது ராஜகுரு வியாசதீர்த்தர், அரசன் தேவதாசியை மணக்க முடியாது அவள் கடவுளுக்கு அர்பணிக்கப்பட்டவள் என எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
சிறிது யோசனைக்கு பின் கிருஷ்ணதேவராயன், உங்களால் முடியாது என்றால் விட்டுவிடுங்கள், நான் வைணவ மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாறி விடுகிறேன், உங்களுக்கு சீர் செய்து பெருமாள் கோயில் கட்டி தருவதாக சொன்ன திருப்பதி மலை கோயிலை சிவன் கோயிலாக கட்டி சைவ மதத்தினருக்கு கொடுத்துவிடுகிறேன் என்றான்.
திடுக்கிட்டு போன ராஜகுரு வியாசதீர்த்தர், ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் ஏதேனும் செய்ய வழி இருக்கிறதா என்று பார்க்கிறேன் என்று சொல்லிச்சென்றார்.
மறுநாள் தான் வேடிக்கை, அல்லது பார்ப்பன திருட்டு தந்திர புத்தி, அரசனை சந்தித்த ராஜகுரு, நீங்கள் அப்படியெல்லாம் சைவ மதத்துக்கு போக வேண்டாம், நாங்களே வழி கண்டுபிடித்துவிட்டோம்,
ஒரு பெண்ணை தேவதாசி ஆக்கும் போது, அந்த கோயிலின் பார்ப்பன பூசாரி தான் அவளுக்கு தாலி காட்டுவான், அப்படி கட்டும் போது, ஒரு வாளை அவளின் கணவனாக அடையாளம் சொல்லி அந்த வாளின் சார்பாக தான் அவளுக்கு தாலி கட்டுவான், அதன் பின் தான் அவள் ஒரு தாசியாக எல்லோருக்கும் பொதுவாக மாறுவாள்,
எனவே அந்த வாளை எடுத்து உடைத்து விட்டால் அவளுக்கு கணவன் இறந்தவன் ஆகிவிடுவான், அதன் பின் நீங்கள் அந்த பெண்ணை மணந்து கொள்ளலாம் என்று ராஜகுரு வியாசதீர்த்தர் கூறினார்.
பின்னர் ராஜகுரு சொன்னது போல எல்லா சாங்கியத்தையும் செய்த மன்னன் கிருஷ்ணதேவராயன், விபச்சார வாழ்க்கைக்கு கொடூரமாக தள்ளப்பட்ட தன் காதலியை திருமணம் செய்து, அவளை, விஜயநகர பேரரசின் முதல் பட்டத்து ராணியாகவும், திருமலாதேவியை இரண்டாம் பட்டத்து ராணியாகவும், அறிவித்தான்.
அதன் பின் திருப்பதி கோயிலுக்கு பல தானங்கள் செய்தான், கடைசியாக, தன் இரு பட்டத்து ராணிகளுடன் தன் சிலையையும் சேர்த்து மூன்று பேரும் அங்கு வணங்குவது போல சிலை செய்து வைத்தான்.
இன்றும் திருப்பதி நீங்கள் சென்றால் இவர்கள் மூவரின் வெண்கல சிலையை பார்க்கலாம், ஒரு ஆள் உயரம் இருக்கும் மூன்று சிலைகளும். பெயர்களும் எழுதியிருக்கும், கிருஷ்ணதேவராயன், சின்னமாதேவி, திருமலாதேவி என்று.
அதில் சின்னமாதேவியின் சிலையின், இரண்டு தோள்களிலும் சங்கு சக்கர சின்னம் இருக்கும். (நம்மில் 40 வயதுக்கு மேற்பட்டவர்க்கு அம்மை தழும்பு இருக்கும் இடத்தில்)
அந்த காலத்தில் தேவதாசியாக ஒரு பெண்ணை கோயிலுக்கு தந்து அல்லது விற்றுவிட்டால் அவள் அந்த கோயிலிலிருந்து தப்பி ஓடிவிட்டாலும் அவளை மற்ற ஊரில் அடையாளம் கண்டு கொள்ள, சிவன் கோயில் தாசிக்கு இருத்தோளில் திரிசூலமும், விஷ்ணு கோயில் தாசிக்கு சங்கு சக்கிரமும் அடையாளமாக சூடு வைக்கப்படும்
இதில் வேடிக்கை என்னவென்றால், திருப்பதி கோயில் உண்மையில் ஒரு பவுத்த கோயில், அந்த கடவுளின் பெயர் மலையப்பன், மலையப்பன் ஒரு பவுத்த துறவி,
இன்றும், இலங்கையிலிருந்து புத்த துறவிகளும், ஏன் அந்த நாட்டு ஜனாதிபதி வரை எல்லா பவுத்தரும் அங்கு வந்து வணங்கி செல்வது அதனால் தான். பின் ஒரு பவுத்த துறவி ஏன் இந்து கோயிலுக்கு வரவேண்டும் என்று எண்ணி பாருங்கள்
பாலாஜி (குழந்தை), வெங்கடாசலபதி(வேங்கட மலையின் தலைவன்), வெங்கடேஸ்வரன்(வேங்கடத்தின் கடவுள்), ஏழுமலையான்(ஏழுமலைகளை சேர்ந்தவன் அல்லது உரிமை உடையவன்), ஸ்ரீனிவாசன்(மரியாதைக்கு உரியவன் வாழ்விடம்), கோவிந்தன்(பசுவின் விந்தில் இருந்து பிறந்தவன், பசுவுக்கு எப்படி விந்து வரும் என்று கேட்டால் நீங்கள் தேசத்துரோகியாக கருதப்படுவீர்கள்) சேஷாத்திரி(மலைகளில் சுற்றி அலைபவன்) ஆக இந்த பெயர்கள் எதுவுமே மஹாவிஷ்ணுவை குறிக்கும் பெயர்கள் அல்ல (முதலில் மலைக்கும் மஹாவிஷ்ணுவுக்குமே எந்த சம்பந்தமும் இல்லை) எல்லா பெயர்களும் மலையப்பர் என்ற பவுத்த துறவியின் காரணப்பெயர்கள்.
கிருஷ்ணதேவராயன், இந்த கோயிலை, வைணவ பார்ப்பனர் வசம் ஒப்படைத்தாலும், பெருவாரியான மக்கள் மலையப்ப சாமி என்றே வணங்கியதால் அதை மாற்றவில்லை. இன்றும் திருப்பதி கோயில் கடவுளின் அதிகாரப்பூர்வமான பெயர் மலையப்ப சாமி தான்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து தன காதலியை மீட்ட கிருஷ்ணதேவராயன், ஆண்டாள் எழுதிய திருப்பாவை நூலை அமுக்தமால்யதா என்ற பெயரில் தானே தெலுங்கில் மொழிபெயர்த்தார் என்பது ஒரு சிறப்பு செய்தி.
வியப்பு மேலிடுகிறது. இதையெல்லாம் பக்தர்கள் கேள்விப்பட்டால், என்ன மாதிரியான உணர்வுகளை அடையக்கூடும் என்று சிந்திக்கிறேன். அவர்களுக்குத்தான் அப்படி ஒரு ஆர்வமே வரப்போவதில்லையே ! இதுவரை வரலாறு படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்கள் மூலமாக எளிமையான நயமான தகவல்கள் கிடைக்கப் பெற்றேன்
ReplyDeleteVery nice matter....and
ReplyDeleteஏழுமலைவாசா என்னை ஆளும் சீனிவாசா என்றே கூறப்படுகிறதே!!
ReplyDelete