திருப்பதி
கோயில் உண்மையில் ஒரு புத்த மத விகாரம் (புத்தகோயில்), என்றோம் பின் முதல்
மூன்று பகுதிகளில், அது தொடர்பான இந்து மத பின்னணி புராண இதிகாச கதைகளையும், இலக்கியங்களில்
சான்றுகளையும், வரலாற்று கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் ஆராய்ந்தோம்,
அவை
மூலம் நாம் இதுவரை அறிந்தது, ராமானுஜர் காலத்துக்கு முன் திருப்பதி ஒரு பெருமாள்
கோயில் அல்ல என்பதே,
மேலும்
நம் வாதத்திற்கு வலுசேர்க்க என்ன சான்றுகள் உள்ளன என்று பார்ப்போம்
ஒரு
நாட்டின் வரலாற்றை வெறும் கல்வெட்டுகள், செப்பேடுகளை வைத்து
மட்டுமே முடிவுசெய்ய முடியாது, ஏனெனில் அந்த அரசர்கள் ஒருசில நேரம் தங்கள் கருத்தை
நிறுவ சற்று உயர்வு நவிற்சியாக எழுதிவைக்க வாய்ப்புகள் உண்டு. எனவே இந்த வரலாற்று
சான்றுகளை சரிபார்க்க வரலாற்று ஆசிரியர்கள் கடை பிடிக்கும் முறை, பிற நாட்டு
வரலாற்று சான்றுகளை பொருத்தி பார்ப்பது தான்.
உதாரணமாக
ஒரு சோழனின் கல்வெட்டில் “இலங்கை சென்று மாபெரும் வெற்றி” என எழுதியிருந்தால், அதே
காலகட்டத்தில் இலங்கையில் அதே காலகட்டத்தை சேர்ந்த ஏதாவது ஒரு வரலாற்று சான்றில்,
அந்த சோழன் வெற்றி பெற்றான் என்று கூட இருக்கவேண்டாம், குறைந்த பட்சம் வந்துவிட்டு
சென்றான் என்றாவது இருக்கவேண்டும். அப்போது தான் சோழனின் கல்வெட்டு உறுதியான
சான்றாக ஏற்க முடியும்.
திருப்பதி
கோயில் ராமானுஜருக்கு முன் விஷ்ணு கோயில் அல்ல அதற்கு சரியான சான்றுகளே இல்லை
என்று எத்தனை முறை நாம் ஆணித்தரமாக நிருபித்தாலும்,
அது திருப்பதி
விஷ்ணு கோயில் அல்ல என்பதை மட்டுமே நிறுவும், அது ஒரு விஷ்ணு கோயில் அல்ல என்பது அது ஒரு புத்தமத கோயில் என்பதற்கான சான்று
அல்ல
அப்படி
என்றால் திருப்பதி ஒரு புத்தமத கோயில், என்பதற்கு என்ன சான்று உள்ளது
கிபி 2-ஆம் நூற்றாண்டில், திருவேங்கடத்தை
தலைநகராக கொண்டு ஆட்சி செய்தவன் ஒரு களப்பிரர் மன்னன், அவனது பெயர் புல்லி, அவனுக்கும்
இந்த கோயிலுக்கும் என்ன சம்பந்தம் என்று நாம் ஆராய்வோம். முதலில் புல்லி ஒரு
பவுத்த மன்னன் அதை பற்றிய விபரங்கள் “களப்பிரர் - தமிழகத்தின் முதல் குடியாட்சி”
என்ற எனது முந்தைய பதிவில் காணலாம்
அகநானூறு
பாடல் எண்- 295ல் புலவர் மாமூலனார் (திருமூலர் அல்ல) சொல்வது
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்பக்
குன்று கோடு அகையக் கடுங்கதிர் தெறுதலின்
என்றூழ் நீடிய வேய்படு நனந்தலை
நிலவு நிற மருப்பின் பெருங்கை சேர்த்தி
வேங்கை வென்ற வெருவரு பணைத்தோள்
ஓங்கல் யானை உயங்கி மதம் தேம்பிப்
பல் மர ஒருசிறைப் பிடியொடு வதியும்
கல்லுடை அதர கானம் நீந்திக்
கடல் நீர் உப்பின் கணஞ்சால் உமணர்
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ முரம்பு இடித்து
அகல் இடம் குழித்த அகல் வாய்க் கூவல்
ஆறு செல் வம்பலர் அசைவிட ஊறும்
புடையல் அம் கழல் கால் புல்லி குன்றத்து
நடை அருங்கானம் விலங்கி நோன் சிலைத்
தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர்
பிழி ஆர் மகிழ்நர் கலி சிறந்து ஆர்க்கும்
மொழி பெயர் தேஎம் இறந்தனர் ஆயினும்
பழி தீர் மாண் நலம் தருகுவர் மாதோ
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் புரையும்
அம் கலுழ் கொண்ட செங்கடை மழைக்கண்
மணங்கமழ் ஐம்பால் மடந்தை நின்
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே.
சுருக்கமான
பொருள்:
தோழி
நீ உன் காதலன் வேறு மொழி பேசும் வடுகர் நாட்டுக்கு சென்றுள்ளான், அந்த வடுகர்கள்,
எப்போதும் குடி போதையில் இருப்பார்கள், கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாமல் கத்தி
கூச்சல் இடுபவர்கள்.
அங்கே
செல்ல புல்லிகுன்றத்தை கடந்து செல்லவேண்டும், அந்த குன்றத்தின் தலைவன் புல்லியின் வீரர்கள்,
மிக கடுமையானவர்கள், அவர்களை கடந்து
செல்வது எளிது அல்ல, அந்த மலையில், வணிகர்கள் தங்கள் மாடுகளுக்கு தேவையான
தண்ணீருக்காக பல கிணறுகளை வெடி வைத்துள்ளார்கள், அவர்கள் செல்லும் வழியில் கள்வர்
பயம் உண்டு, மெல்லிய தோளை உடைய உன்னால் அத்துணை கடினங்களை தாங்க முடியாது சற்று
பொருத்திரு உன் காதலன் தன பணி முடித்து வந்து உன்னை சேர்ந்து உன்னை பலவாறு
கொண்டாடுவான்
இந்த
பாடலின் மூலம் புல்லிகுன்றம், புல்லி என்ற மன்னனின் மலையை நாம் அறிகிறோம், சரி
இந்த புல்லிகுன்றம் தான் வேங்கடமலையா. என்று கேட்டால்
அகநானூறு
பாடல் எண்- 209ல் புலவர் கல்லாடனார் என்ன சொல்கிறார் என்று பார்போம்
தோளும் தொல்கவின் தொலைந்தன நாளும்
அன்னையும் அருந்துயர் உற்றனள் அலரே
பொன் அணி நெடுந்தேர்த் தென்னர் கோமான்
எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன்
நேரா எழுவர் அடிப்படக் கடந்த
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என
ஆழல் வாழி தோழி அவரே
மாஅல் யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர்
அறை இறந்து அகன்றனர் ஆயினும் நிறை இறந்து
உள்ளார் ஆதலோ அரிதே செவ்வேல்
முள்ளூர் மன்னன் கழல் தொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி
நிலைபெறு கடவுள் ஆக்கிய
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே.
சுருக்கமான
பொருள்:
தோழி,
தலைவியிடம் சொல்கிறாள், தலைவியே நீ நீடுவாழ்வாய், உன் கரங்கள் அதன் பழைய பொலிவை
இழந்துவிட்டது, உன் தாயின் கவலை மேலம் மேலும் அதிகமாகிவிட்டது. நமது பகுதியில் உன்
உடல் நிலையை பற்றிய புரளிகள், ஆலங்கானத்து (தலையாலங்கானம்)
போரில் தோளுடன், போரிட்ட பாண்டியன் செழியனின் படைகள் எழுப்பிய ஓசையை விட சத்தமாக
பரவுகிறது.
நீ
அழாதே தலைவி, நம் தலைவன் அடர்ந்த மூங்கில் காடுகளை கொண்ட வேங்கட மலையை தாண்டி
சென்றான், அது பல யானைகளை கொண்டு வீரமாக போரிடும் மன்னன் புல்லிக்கு சொந்தமானது
அவ்வளவு
தொலைவில் அவன் இருந்தாலும், முல்லூர் மன்னன் காரி, மன்னன் ஓரியை கொன்று, ஒரிக்கு
சொந்தமான கொல்லி மலையை சேரமன்னனுக்கு கொடுத்தானே, அந்த பலாமரங்கள் அடர்ந்த காடுகளை
உடைய கொல்லி மலையில் உள்ள கொல்லி சிலையைவிட (எதோ ஒரு பெண் தெய்வமாக இருக்கலாம்
அல்லது பிற்காலத்தில் இந்த சிலையை கண்ணகி என்றும் மாற்றியிருக்கலாம்) அழகானவள்,
அப்படியிருக்கும் போது, நம் தலைவனுக்கு உன் சிந்தனை வராமல் இருக்குமா, அவன்
எப்போதும் உன்னை பற்றிதான் நினைத்துகொண்டு இருப்பான் கலந்காது இரு என்று
சொல்கிறாள் தோழி.
இந்த
இரண்டாம் பாடலின் மூலம் நாம் புல்லிகுன்றம், புல்லி என்ற மன்னனுக்குதான் சொந்தம்,
அது மட்டுமல்ல இந்த புல்லிகுன்றம் தான் வேங்கடமலை என்றும் சந்தேகம் இன்றி
அறிகிறோம்.
சரி
வேங்கடமலை, தான் புல்லிகுன்றம், அதற்காக திருப்பதி எப்படி புத்த கோயில் இருந்தது
என்று ஏற்பது.
கிபி 600-களில்,
சீனாவிலிருந்து வந்த யாத்திரிகர் யுவாங் சாங் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
யுவாங்
சாங், சீனாவிலிருந்து இந்தியா வந்ததன் முக்கிய நோக்கமே, மகாயான புத்தம் என்ற
பெயரில் அவரது நாட்டில் புத்த மதத்தில், பல குளறுபடிகள் நடக்க தொடங்கிவிட்டதால்,
நேரடியாக தானே இந்தியா வந்து புத்தரின் போதனைகளை பற்றி மூல நூல்களை கற்று, புத்த
வழிபாட்டு தலங்களை நேரில் கண்டு, புத்தரின் உண்மையான போதனைகளை தன் நாட்டுக்கு
கொண்டு செல்லவே அவர் வந்தார்.
ஆனால்
பாவம் அவர் இந்தியா வந்த கிபி 600 காலகட்டத்தில் அவருக்கு மிஞ்சியது பெரும்
ஏமாற்றமே, அவர் தனது நாட்டில் படித்த புத்தகங்களில் சொல்லப்பட்ட பல புத்த
கோயில்களை மடங்களை, அவர் நேரில் வந்து பார்த்தபோது, கிட்டத்தட்ட எல்லா மடங்களும்,
புத்த கோயில்களும் பார்பனரின் தூண்டுதலின் பேரில் அரசர்களால் அழிக்கப்பட்டு, புத்த
துறவிகள் மடாலயங்களிருந்து துரத்தப்பட்டு விட்டதாக சொல்கிறார்.
பல
புத்த மடாலயங்கள், அங்கிருந்த துணை தெய்வங்களை தவிர காப்பாற்ற யாரும் இல்லாமல்
இருந்தன என்கிறார்.
அவர்
தேடிவந்த புத்த கோயில்களை பற்றி சொல்லும் போது, அமரராம புத்தர் கோயில் (இன்றைய
அமராவதி ஆந்திராவின் புதிய தலைநகர்), பீமாபுரா, தகரெமி, பலகொல்லனு, திராக்ஷரம ஆகிய
கோயில்கள் விஷ்ணு கோயிலாக ஏற்கனவே மாறிவிட்டன என்கிறார். (இப்போது அவை எந்த ஊர்
கோயில்கள் என்று சரியாக தெரியவில்லை)
தற்போதைய
உத்தரபிரதேசத்தில் உள்ள மதுரா நகரில் மட்டும் புத்த மடாலயம் அப்படியே இருந்ததது
என்கிறார். இவருக்கு முன் கிபி 400-ல் இந்தியா வந்த
மற்றுமொரு சீன யாத்திரிகர் பாகியான், இந்த நகரை மயில் நகரம் என்கிறார், அப்போது
அங்கே 20 புத்த கோயில்களும் 5 பிராமண கோயில்களும் இருந்தன என்கிறார்.
இந்த
மதுரா நகரில் தான், உபகுப்தர் என்ற புத்த துறவி, அசோகர் உட்பட 18,000-பேரை புத்த மதத்துக்கு மாற்றினர் என்று மிலிந்தபன்ஹா
என்ற நூலில் சொல்லப்படுகிறது.
கிருஷ்ணா நதிக்கரை பகுதியான தன்யகட்டகா-வில் பூர்வசைலம், அவரசைலம் மடாலயங்கள்
ஆளரவமற்று இருந்தது என்கிறார், அஜந்தா குகையில் இதற்கு முன் மனிதர்களே அங்கு வாழ்ந்ததில்லை
என்பது போன்ற அமைதி நிலவியது என்கிறார்
இன்றைய
மத்திய பிரதேசத்தில் உள்ள, உஜ்ஜெயின் நகரத்தை அப்போது ஒரு பிராமண மன்னன் ஆண்டு
வந்தான், என்றும் அவன் புத்த மதத்தினரை வெகுவாக வெறுத்தான் என்றும் சொல்கிறார்.
மிருச்சியகடிகை
என்ற மற்றொரு புத்த நூலில் உஜ்ஜெயின் மன்னனின் மருமகன் சமவாககன் என்பவன் புத்த
துறவிகளை கண்டால் அவர்களை வண்டியில் மாடுகளுக்கு பதிலாக பூட்டி சவுக்கால் அடித்து
வண்டி ஒட்டுவான் என்று சொல்கிறது
ஆக
யுவான் சாங் இந்தியா வந்த ஆறாம் நூற்றாண்டு என்பது புத்த மதம் பிராமணர்களால் கடும்
கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, சிறிது சிறிதாக அழிந்து கொண்டிருந்த கால கட்டம் என்பது
தெளிவாக தெரிகிறது.
யுவான்
சாங், தென் இந்தியாவில், குறிப்பாக மூன்று புத்த மடாலயங்களை இடங்களை தேடிவந்ததாக
சொல்கிறார்.
1.தண்யகாட்டகா
2. ஸ்ரீபர்வதா
3. பொட்டல்கா
இவற்றில்
தண்யகாட்டகா – தற்போதைய அமராவதி என்றும், ஸ்ரீபர்வதா - தற்போதைய நாகர்ஜுனகொண்டா
என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கண்டு சொல்லிவிட்டனர்.
மூன்றாவதாக
சொன்ன பொட்டல்கா, பற்றி சரியா சொல்லமுடியவில்லை.
மேலே நாம் சொன்ன புல்லிகுன்றமே யுவாங் சாங் சீன மொழியில் குறிப்பிடும்
பொட்டல்கா-வாக இருக்கலாம் என்பது சில ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அது சரி தானா
என்று நாமும் முடிவுக்கு வருவதற்கு முன் யுவாங் சாங், பொட்டல்கா பற்றி என்ன
சொல்கிறார் என்று பாப்போம்.
மலையா
மலைகளின் கிழக்கே இருக்கிறது பொ-டோ-லோ-கியா (பொட்டல்கா). இந்த மலையில் உள்ள
பாதைகள் மிகவும் ஆபத்தானவை, பல வழுக்கும் பாதைகள் நிறைந்த, அடர்ந்த காடுகள் உள்ள
பள்ளத்தாக்குகளை கொண்டது இந்த மலை. மலையின் மேலே ஒரு சுனையில் இருந்து ஒரு ஆறு
புறப்பட்டு வருகிறது, அது மலையில் இருந்து கீழே வரும் தூரத்தை போல இருபது மடங்கு
தூரம் பயணித்து தென்கிழக்கே கடலில் கலக்கிறது. மலையின் மேலே ஒரு பெரிய குளம், மிக தெளிவான தண்ணீருடன் இருக்கிறது,
அந்த குளத்தின் அருகே கல்லால் செய்யப்பட ஒரு அரண்மனை இருக்கிறது அதில் தேவர்கள்
வசிக்கிறார்கள்.
இந்த
மலைகோயிலில் அவலோகிதீஸ்வரர் வாசம் செய்கிறார். இந்த போதிசத்துவரை காண ஆவல் கொண்ட
பக்தர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மலையில் கடுமையான பயணம் செய்து மேலே
சென்று அவரை காண்கின்றனர்.
இந்த
மலையின் வடகிழக்கே சென்றால் வரும் கடற்கரையிலிருந்து நாம் சாங்-கியா-லோ (இலங்கை)
தீவுக்கு செல்லமுடியும், அந்த தீவை அங்குள்ள மக்கள் சிம்ஹலா என்று அழைக்கிறார்கள்.
மேலே
சொன்ன வர்ணனைகள் மிக சரியாக திருப்பதிக்கு பொருந்துவதை நம்மால் காண முடியும்
1575–1634-ல், திபெத்தில் வாழ்ந்த தலாய் லாமா
தாரநாதர். இவர் தான் எழுதிய “இந்தியாவில் புத்த மத வரலாறு” என்ற புத்தகத்தில்
சொல்வது என்னவென்றால்.
ஆச்சாரியர் திக்நாகர், காஞ்சி
நகருக்கு அருகே உள்ள சிங்கவாகதம் என்ற ஊரில் பிறந்தார் நாகதத்தரிடம், ப்ரவஜ்யா
என்னும் சந்நியாசம் வாங்கினார். திக்நாகர் உபாசகர் என்பவருடன் சேர்ந்து காஞ்சிக்கு
அருகே இருந்த பொட்டல்கா-வில்
அவலோகிதீஸ்வரரை காண சென்றார்,
ஏனெனில்
உபாசகருக்கு மட்டுமே பொட்டல்கா மலை மேலே ஏறி செல்லும்
கடினமான பாதை தெரியும்.
Bstan-'gyur என்ற மற்றுமொரு திபெத்திய புத்த நூலில் “ஸ்ரீமத் பொட்டல்கா பத்தாரக்கர்” (அவலோகிதீஸ்வரர்) பற்றி
தனியே “பொட்டல்கா
காமன பத்திரிக்கா” என்று ஒரு தனி பகுதியே உண்டு
காஞ்சிக்கு அருகே யுவான் சாங்
சொல்லும் வர்ணனைகளுக்கு பொருந்தும் ஒரே மலை திருப்பதி மட்டுமே.
அதாவது பொட்டல்கா என்னும்
புல்லிகுன்றமே, திருவேங்கடம், அங்கிருக்கும்
சிலை அவலோகிதீஸ்வரர், என்ற போதிசத்துவரின் சிலை என்பது இவை மூலம்
தெளிவாகிறது.
திருப்பதி
ஒரு புத்த கோயில்தான், விஷ்ணு கோயில் அல்ல என்பதற்கான மேலும் விளக்கங்களையும் சான்றுகளையும்,
மகாவமிசம் நூல் என்ன சொல்கிறது போன்றவற்றை ஐந்தாம் பகுதியில் காண்போம்.
No comments:
Post a Comment