Sunday, July 2, 2017

நம்பூதிரிகள் பல்பு வாங்கிய கதை:


சோழர் ஆட்சியின் கடைசி காலகட்டத்தில் 1246–1279-ல்  3ஆம் ராஜேந்திரசோழன், காலத்தில் சோழ சாம்பிராச்சியம், வெறும் தஞ்சை நகரை சுற்றி உள்ள பகுதிகளை மட்டுமே கட்டுக்குள் வைத்திருந்தது, மற்ற எல்லா பகுதிகளும் தனி அரசுகள் ஆகிவிட்டன.
அதே சமயத்தில் 1268 - 1310-ல் மதுரையை ஆண்டு வந்த மன்னன் மாறவர்மன் குலசேகர பாண்டியன், அவனுக்கு 2 மகன்கள், முதல் மகன் சடவர்ம சுந்தர பாண்டியன், இரண்டாவது மகன் சடவர்ம வீர பாண்டியன் இளைய மகன், அரசனின் ஆசைநாயகிக்கு பிறந்தவன், வழக்கத்தை மாற்றி அரசன் வீர பாண்டியனை வாரிசாக அறிவிக்கின்றான்,
கடுப்பான சுந்தரபாண்டியன் தந்தையை கொன்று 1310-ல் மன்னன் ஆகிறான். வீர பாண்டியன் சில மந்திரிகள் தளபதிகளை சேர்த்துக்கொண்டு போராட, பெரும் உள்நாட்டு கலகம் ஏற்பட்டு சுந்தர பாண்டியன் துரத்தி அடிக்கப்படுகிறான்
தப்பி ஓடிய சுந்தரபாண்டியன் டில்லி அலாவுதீன் கில்ஜியிடம் மதுரையை மீட்க உதவி கேட்கிறான். எம்.ஜி.ஆர். நடித்த மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் வேறு ஒருவன், அவன் இந்த பாண்டியனுக்கு முன்பு 1216–1238-ல் 3ஆம் குலோத்துங்கனிடம் நேரடியாக மோதி வென்றவன்.
கில்ஜி சுந்தர பாண்டியனுக்கு உதவ மாலிக்காபூரை அனுப்பிவைக்கிறான், (மாலிக்காபூர் தானாக வரவில்லை, இவர்களாக வேட்டிக்குள் விட்டுக்கொண்டது) . வந்து வீரபாண்டியனை வென்ற பின், மாலிக்காபூர், சுமார் 1 வருட காலம் மதுரையை வச்சு செஞ்சிட்டு அப்புறம் தான் திரும்பி போனான். (அந்த நேரத்தில் மீனாட்சி கோயிலின் லிங்கத்தை குளத்தில் போட்டு மறைத்து வைத்தனர், இன்றும் அந்த லிங்கத்தை கோயில் பிரகாரத்தில் தனியாக வைத்திருப்பார்கள்)
பாண்டியநாட்டில், சோழநாட்டில் எங்கும் வறுமை, பஞ்சம், இப்போ நம்ம ஹீரோக்களான பார்ப்பனர்கள் என்ன செய்வார்கள் என்று உங்களுக்கே தெரியும், வேறு என்ன வசதியானவர்கள் வாழும் வேறு ஊருக்கு முட்டை கட்டுவது தான், இங்கே ஏய்த்து பிழைக்க எந்த வழியும் இல்லை, மக்களிடம் வசதி இருந்தால் தானே பார்ப்பானுக்கு குடுத்து ஏமாற முடியும்.
இந்த சூழலில், கும்பகோணம், தஞ்சை மதுரை நகர பார்ப்பனர் சிறு சிறு கூட்டங்களாக திருவனந்தபுரம், கொச்சி, பாலக்காடு போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.
ஆனால் அங்கே ஏற்கனவே இருந்த நம்பூதிரிகள் இவர்களை கோயிலுக்குள்ளே கூட விட வில்லை, எனவே திரும்பி போகவும் வழியில்லாமல், அங்கேயே ஜோதிடம் ஜாதகம் பார்ப்பது போன்ற தொழில்களில் ஈடுபட்டனர். அப்படியே காலம் தள்ளினர்.
சுமார் கி.பி1500-ல் பாலக்காடு, கொச்சி ராஜாவுக்கு கீழ் இருந்த சிற்றரசு, அதன் இளவரசன் சேகரி வர்மன், ஒரு காட்டுவாசி பெண்ணை காதலித்தான், சும்மா பொழுதுபோக்கு அல்ல, அவளை அரசி ஆக்க முடிவுசெய்யும் அளவுக்கு உண்மையான காதல்.
ஆனால் நம்பூதிரிகள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை, அவளை வேண்டுமானால் ஆசைநாயகியாக வைத்துக்கொள்ள யோசனை சொன்னார்கள்,
அவளை மனைவியாக்கி அரசியாக்க நினைத்த சேகரி வர்மன், என்ன செய்வது என தெரியாமல் தவித்தான், அங்கே செட்டிலாகியிருந்த தமிழ்நாட்டு அய்யர்களிடம் யோசனை கேட்டான்,
அதற்கு இந்த ஐயர்கள், எல்லா நம்பூதிரிகளையும் பாலக்காட்டிலிருந்து விரட்டினால் தாங்கள் எல்லா கோயில் வேலைகளையும் செய்வதாகவும், மன்னன் விருப்பப்படி திருமணமும் செய்து வைப்பதாக சொன்னார்கள்.
சேகரி வர்மனும் எல்லா நம்பூதிரிகளையும் பாலக்காட்டிலிருந்து விரட்டினான், அதனால் தான் மொத்த கேரளாவிலும் பாலக்காட்டில் மட்டும் கோயில்களில் ஐயர்கள் பூஜை செய்வார்கள், மற்ற எல்லா இடங்களிலும் நம்பூதிரிகள் பூஜை செய்வார்கள்
இது தான் நம்பூதிரிகள் பல்பு வாங்கிய கதை. இந்த கிளைமாக்ஸில் ஒரு ஆன்டி கிளைமாக்ஸ் என்னவென்றால்
ஐயர்கள், இனிமே எல்லாமே நாமதான் என்று நினைத்திருக்க காட்டுவாசி பெண் ராணி ஆனபின், தன் மக்களின் பாரம்பரிய கண்ணகி வழிபாடான பகவதி வழிபாட்டினை பிரபலப்படுத்தி, ஐயர்களின் சிவன் பூஜைக்கு ஆப்பு வைத்து, இவர்களுக்கும் பல்பு கொடுத்துவிட்டாள்.
ஆக மாறவர்மன் குலசேகரன் மதுரையில் ஆசைநாயகி வைத்த காரணத்தால், பாலக்காட்டில் நம்பூதிரிகளும் அய்யர்களும் பல்பு வாங்கினார்கள்.
இதை தென்னமரத்தில் தேள் கடிச்சா பனைமரத்துல நெறிகட்டிச்சாம் என்றும் சொல்லலாம்
இல்லையென்றால் தசாவதாரத்தில் கமல் சொன்னது போல பட்டர்பிளை எபெக்ட் ஆப் கேயாஸ் தியரி என்றும் சொல்லலாம்

1 comment:

  1. இங்கிருந்து போய் தங்கியிருந்தவர்கள் எப்படி அரசனுக்கு யோசனை சொல்லுமளவுக்கு பெரியாளானார்கள். அதுவும் அவர்களின் பேச்சைக் கேட்டு காலம் காலமாக ஆதிக்கம் செலுத்தும் நம்பூதிரிகளை விரட்டும் அளவிற்கா ஒரு மன்னன் அவர்களுக்கு அடி பணிந்தான் ?

    ReplyDelete

Book Wrapper

இந்த நூலை  வாங்க  விரும்பினால்  இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்     விலை ரூ.200 மட்டுமே