Sunday, July 2, 2017

கேரளா தரவாடு இல்லங்கள்


சில வாரங்களுக்கு முன் சாதி பெயர் சேர்த்து கொள்ளலாமா கூடாதா என்ற தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட கேரளாவை சேர்ந்த ஒரு நபர்,
தன் பெயருக்கு பின் எதோ ஒரு பறம்பில் என முடியும் அடைமொழி சாதி பெயராக இருந்ததாகவும் அது தன் பூர்விக வீட்டின் பெயர் என்று தெரிந்து கொண்டு தனக்கு ஒரு பூர்விக வீடு அதன் பெருமையாக அந்த பெயர் அடையாளம் வேண்டாம் என்று அதை பயன் படுத்துவதை விட்டுவிட்டதாக சொன்னார், அவரை பாராட்டும் அதே நேரம் அந்த பெயரின் பின்னிருக்கும் பார்ப்பன புரட்டை பற்றி பார்ப்போம் - சற்று நீளமான வரலாறு சார்ந்த பதிவு
சுந்தர சோழர் இறந்தபின் 957 CE, அவரது அண்ணன் மகனும், தன் சித்தப்பாவுமான உத்தமசோழரே (மதுராந்தக உத்தம சோழன் என்றும் அழைக்கப் படுவார்) அரசராக வேண்டும் என்று கூறி அவர் அரசர் ஆக எல்லா வேலைகளும் செய்தவர் ராஜராஜன்,என அழைக்கப்படும் அருண்மொழிவர்மன்
பின்னர் தன் அண்ணன், ஆதித்த கரிகாலன் படுகொலைக்கு காரணம், மதுராந்தகனின், நெருங்கிய வட்டமான மந்திரிகள், தளபதிகள் போன்ற எல்லா முக்கிய அரசு பதவிகளையும் அக்கிரமித்து இருந்த, ஆபத்துதவிகள், என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த முன்குடுமி சோழிய பார்ப்பனர் தான் என்று அறிந்த பின், கிட்ட தட்ட ஒரு புரட்சி போல ஆட்சியை கைப்பற்றினான் (சித்தப்பா மாமனார் வீடான பாண்டிய நாட்டிற்கு ஓடிவிட்டதாக சேதி)
அந்த கொலையில் சம்பந்தப்பட்ட பார்ப்பனர் கூட்டத்தை மொத்தமா, 4-5-ஆவது சுற்றம், அல்லது அவர்களுக்கு எந்த வகையில் சொந்தமாக இருந்தாலும் மொத்தமாக குடும்பத்துடன் எல்லா சொத்துக்களையும் பிடுங்கிவிட்டு நாட்டை விட்டு துரத்திவிட்டான் - சுமார் 1000 நபர்கள் இருக்கலாம் என்பர் (சிட்டிசன் பட இயக்குனர், இதை தழுவியே இறுதி காட்சி வைத்திருப்பார்)
வெளியேறிய அந்த பார்ப்பனர் சேரநாட்டில் புத்த பள்ளிகளில் தஞ்சம் புகுந்தனர். பவுத்தர்கள் வழிபாட்டு இடங்களை பள்ளி என்றும், பயிலும் இடங்களை சாலை என்றும் அழைப்பர். அதில் அந்தக்காலத்தில் மிகவும் புகழ் பெற்றது காந்தழுர் சாலை என அழைக்கப்பட்ட களரி பயிற்று (தஞ்சை பகுதியில் குத்து வரிசை, சீனாவில் குங் பூ) என அழைக்கப்பட்ட சண்டை பயிற்சி சாலை. அங்கு இருந்து கொண்டு, தலைமறைவாக வாழும் மதுராந்தகனின் தலைமையை மறுபடியும் தஞ்சையில் கொண்டு வர சதித்திட்டம் திட்ட தொடங்கினர்
கண்ணகிக்கு சிலை எடுத்ததாக சொல்லப்படும் சேரன் செங்குட்டுவன் காலத்திலிருந்தே சேர மன்னர்கள் பவுத்தத்தை தழுவியவர்கள், ராஜராஜனின், முதல் மகள் பவுத்தத் துறவி ஆனதில், இளவரசன் ராஜேந்திரனுக்கு, பவுத்தர்கள் மீது ஒருவித காழ்ப்புணர்ச்சி உண்டு, இப்போது, தஞ்சை பார்ப்பனர் காந்தளூர்சாலையில் அடைக்கலம் புகுந்து சதியில் ஈடுபட, அது மேலும் கோபத்தை கிளற, ஒரு பெரும் படையுடன், சேர நாட்டின் மீது படையெடுத்து சென்று, மொத்தமாக சேரர்களை அழித்தான், காந்தழுற்சாலை(இப்போது விழிஞ்சம் தீவு என்று அந்த இடம் அழைக்கப் படுகிறது) பயிற்சிக்கூடத்தை தரைமட்டமாக்கினான். (ராஜராஜனும், ராஜேந்திரனும் பார்ப்பன ஆதிக்கத்தை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் மற்றும் ஒரு பதிவில்)
அங்கிருந்து தப்பியோடிய பார்ப்பனர், சில காலம் தலைமறைவாக வாழ்ந்தனர், சோழர்களின் கண்காணிப்பு சற்றே மட்டுப்பட்ட பின்னர், சேர நாட்டில் இருந்த சில குறுநில மன்னர்களை தஞ்சம் புகுந்தனர், இவர்கள் முதலில் சமணர்களாக இருந்து, பின்னர் இந்த முன்குடுமி சோழிய பார்பனரால் வேதமதத்திற்கு மாறியவர்கள், சமண மதத்தில் இருந்த நால்வகை வருணங்களுடன் வேதமதத்திற்கு மாறியவர்கள்.
அதன் பின் சுமார் 11-12ஆம் நூற்றாண்டில் உருவான கதைகள் தான் பரசுராமன் கேரளத்தை(கோடாலியை) வீசி அந்த நிலப்பரப்பை பார்ப்பனருக்கு கொடுத்த கதை மற்றும் மகாபலியை பாதாளத்திற்கு அனுப்பிய கதைகள்.
இந்த காலகட்டத்தில் தான், மன்னனிடம் தன் நெருக்கத்தையும் இருப்பையும் உறுதி செய்ய அவர்கள் எடுத்த முயற்சியும் நடவடிக்கையும் அத்துணை கேவலமானது.
அதுவரை பார்ப்பனர் என்று தங்களை அழைத்துவந்தவர்கள், அதன் பின் நம்பூதிரி என்று மாற்றிக்கொண்டனர், தங்கள் சோழ தேச விரோதத்தை தமிழர் விரோதமாக சேர மக்களிடம் விதைத்தனர், சேரர் (மலைச்சாரல் - சாரல் - சேரல்) என்ற பெயரை கேரளம் என்று மாற்றி, அவர்கள் பேசிய தமிழை சம்ஸ்கிருதம் கலந்து கொச்சை ஆக்கி அதை மலையாளம் என்று அழைக்க வைத்தனர்.
பின்னர் அரசனிடம், தாங்கள் அரசனிடம் தங்கள் விசுவாசத்தை நிருபிக்கும் விதமாக ஒரு பெரும் தியாகம் செய்வதாக அறிவித்தனர், அது என்னவென்றால், தங்கள் குடும்பத்தில் பிறக்கும் முதல் ஆண் குழந்தைக்கு மட்டுமே தங்கள் பார்ப்பன இனப் பெண்ணை மணம் முடிப்பதாகவும் அடுத்து பிறக்கும் எந்த ஆண் குழந்தைக்கும் திருமணம் செய்ய போவதில்லை, அவர்கள் அனைவரும் அரச மற்றும் இறைவன் சேவைக்கு மட்டுமே என்றும் அறிவித்தனர்.
அரசன் அவர்களின் விசுவாசத்தில் ஆடிப்போய்விட்டான், அவர்கள் எது செய்தாலும் சரி என்று ஆணையிட்டான்.
இதன் பின்னர் தான் அவர்களின் உண்மை முகம் வெளிவந்தது, அம்மன்னரிடம் வேலை செய்த போர்விரர்கள், தளபதிகள் போன்ற போர் தொழில் புரிவோர் எல்லாம் நாயர்கள் (அதில் பல பட்டப்பெயர்கள் உண்டு மேனன், பொதுவாள், என்பன போல) என அழைக்கப்பட்டனர்,
இப்போது நம்பூதிரிகள் அரசனிடம், தாங்கள் மன்னருக்கு விசுவாசத்தை நிரூபித்தது போல நாயர்களும் நிரூபிக்கவேண்டும் என சொன்னார்கள்.
அது எப்படி என்றால், நாயர் வீரர்கள் போர்க்களத்தில் இருக்கும் பொது, குடும்பம், தன் மகன் நினைவு வந்தால், உயிருக்கு பயந்து புறமுதுகு காட்டி ஓடி வந்துவிட வாய்ப்பு உள்ளது, அதனால் அவர்களுக்கு குடும்பத்தின் மீது பற்று இல்லாமல் செய்தால் தமிழரை, சோழரை அழிப்பது எளிது
அதனால், எல்லா நாயர்களும் திருமணம் செய்யும் பொது, அந்த மணப்பெண்ணை, நம்பூதிரி குடும்பத்தில் உள்ள 2-3ஆவது ஆண்மகனுக்கு (பார்ப்பன பெண்ணை திருமணம் செய்துகொள்ளாத அரசனுக்கு ஊழியம் செய்ய நேர்ந்து விடப்பட்ட) முதலில் திருமணம் செய்துகொடுத்துவிட்டு பின் அவன் திருமணம் செய்துகொள்ளவேண்டும்,
இதன் மூலம் திருமணம் ஆகாத நம்பூதிரி ஆண்களுக்கும் இல்லறவாழ்கை கிடைக்கும், இந்த நாயர் பெண்களுக்கு பிறக்கும் குழந்தை எந்த தந்தைக்கு பிறந்தான் என்று யாருக்கும் தெரியாது என்பதால், அவள் கணவன்மார் யாரும் குடும்ப பாசம் இல்லாமல் அரச விசுவாசம் ஒன்றே குறிக்கோளாய் வாழ்வார்,
இந்த குடும்ப அமைப்பை உறுதி செய்ய அரசன், நாயர் பெண்களுக்கு திருமணத்தின் போது ஒரு பெரிய வீடும் பெரிய குடும்பத்திற்கான உணவுக்கான நிலங்களும் கொடுக்க வேண்டும், இந்த வீடுகள் தான் தரவாடுகள் என அழைக்கப் படுகிறது, (தரூர், குஞ்சப்பரம்பில் போன்றவை)
இந்த குடும்ப அமைப்பு மருமக்கத்தாயம் அதாவது மருமகன்கள் வந்து வாழும் வீடுகள், ஒரு தரவாடில் 4 பெண்கள் இருந்தால், அங்கே 8 - 12 மருமகன்கள் அங்கே இருப்பார்கள். மொத்த சொத்துக்களும் இருப்பதிலேயே மூத்த பெண்ணின் முதல் கணவனின் கட்டுப்பாட்டில் இருக்கும், அந்த குடும்ப சொத்தை உறுப்பினர்கள் எல்லோரும் பயன்படுத்தலாம் ஆனால் யாரும் விற்கமுடியாது. பெண் பிள்ளைகள் அங்கேயே இருப்பர், ஆண்பிள்ளைகள் திருமணம் ஆகி வேறு தரவாட்டிற்கு போய்விடுவார்கள்.
மருமக்கத்தாயம் என்ற இந்த முறை 1920, 1925 1933 பின்னர் இறுதியாக 1975-இல் கேரளா மாநில கூட்டு குடும்ப (தடை) சட்டத்தின் மூலமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது
கேரளாவில் மருமக்கத்தாயம் முறையில் பெண்கள் பல ஆண்களை மணக்கலாம் என்பது அவர்களின் சுதந்திரம் அல்ல, அவர்களின் மீது அரசனால் குறிப்பாக நம்பூதிரிகளால் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறை
மொத்தத்தில் சோழ தேச பார்ப்பனர்களின் வக்கிர ஆசைகளும், மதத்தின் பெயரால் அவர்கள் சேர மக்களின் மீது திணித்த அடக்குமுறையே மருமக்கத்தாயம் ஆகும்.
இந்த தரவாட்டு பெயர் என்பது பெருமை அல்ல அவலத்தின் அடையாளம், சோழ தேசத்தில் இருந்த தாசிகள் அமைப்பின் வேறு ஒரு பரிமாணம்

12 comments:

  1. Replies
    1. மேலும் தகவல் வேண்டும்

      Delete
  2. Replies
    1. அது என்னுடைய யூடியுப் பதிவு தான் தோழர்

      Delete
  3. அருமை.பார்ப்பான் ஒரு சதிகாரன்

    ReplyDelete
  4. மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் அடிமையாக இருக்க செய்த சதிகள்.. கொடுமை

    ReplyDelete
  5. இந்த வரலாறுகளை நீங்கள் எங்கிருந்து எடுத்தீர்கள் என்னும் மூல புத்தகங்களின் பட்டியல் தரவில்லை.அது உங்களின் எழுத்துக்களுக்கு இன்னும் வழு சேர்க்கும்

    ReplyDelete
  6. உங்களை நேரடியாக தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.இன்னும் நிறைய செய்திகளை அறிய விருப்பம்.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. நம்பூதிரிகளையும் சோழர் கணக்கில் எழுதாதீர்கள்...... நம்பூதிரிகள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று தெளிவாக வரலாற்று ஆய்வாளர்களால் நிறுவப்பட்டுள்ளது..... உங்கள் காணொளியிலேயே நீங்கள் காட்டும் பேப்பர் கட்டிங்கில் கூட வடக்கில் இருந்து வந்தவர்கள் தான் அவர்கள் என அந்த கோவால்கர் கூட கிளைம் செய்கிறார்... நீங்கள் உங்கள் பிளாகில் கூட நம்பூதிரிகள் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் என தவறாக தான் எழுதி உள்ளீர்கள். நம்பூதிரிகள் வடக்கில் இருந்து சேர நாடு வந்தவர்கள் தான் தமிழகத்தில் இருந்து சென்ற பிராமணர்கள் என்று மீண்டும் மீண்டும் ஏன் நீங்கள் வரலாறை திரிப்பு வேலை செய்கிறீர்கள். வரலாற்றை வரலாறாக சொல்லுங்கள் கட்டுக் கதைகளை அள்ளி வீச வேண்டாம்.. அனைவரும் முட்டாள்கள் அல்ல..

    ReplyDelete

Book Wrapper

இந்த நூலை  வாங்க  விரும்பினால்  இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்     விலை ரூ.200 மட்டுமே