சென்னையில்
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் (உத்தமர் காந்தி சாலை) கடந்து செல்லும் போது
எல்லோரும் மேலே படத்தில் உள்ள கட்டிடத்தை பார்த்திருப்பீர்கள்.
பொதுவாக
இந்த துறையை பற்றி திட்டாத இந்துக்களே தமிழ் நாட்டில் கிடையாது,
இந்த
திராவிட இயங்கங்களை பார்த்தீர்களா எல்லா இந்து கோயில்களையும் அரசு கட்டுப்பாட்டில்
எடுத்துகொண்டு, கோடிக்கணக்கில்
வசூலாகும் இந்துகளின் பணத்தை அரசாங்கத்தின் மூலம் கொள்ளை அடிகிறார்கள்.
இவர்களுக்கு தைரியம் இருந்தால் சர்சுகளையும், மசூதிகளையும் அரசு கட்டுப்பாட்டில்
எடுக்க வேண்டியது தானே, என்பது
தான் இவர்களால் முக்கியமாக வைக்கப்படும் குற்றச்சாட்டு.
மற்றும்
ஒரு பார்பன புரட்டு என்று தலைப்பில் சொல்லியிருக்கிறதே, இந்த இந்து
அறநிலையத்துறை என்பதே திராவிட இயக்கங்களின் திருட்டுத்தனம் என்று எல்லோரும்
சொல்லும் போது இங்கே பார்பன புரட்டு எங்கே இருந்தது வந்தது என்று நீங்கள்
கேட்கலாம்
இந்து அறநிலையத்துறையின் உண்மையான வேலை என்ன இதில் பார்பன புரட்டு எப்படி வந்தது என்பதே இந்த கட்டுரை.
இந்து அறநிலையத்துறையின் உண்மையான வேலை என்ன இதில் பார்பன புரட்டு எப்படி வந்தது என்பதே இந்த கட்டுரை.
மக்கள்
வைக்கும் முதல் குற்றச்சாட்டு,
சர்சுகளையும், மசூதிகளையும் அரசு
கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டியது தானே என்பது, அரசாங்கம் அவைகளை ஏன்
தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கவில்லை என்றால், சர்ச்சுகளை
கட்டுப்படுத்த அவர்களிடம் CSI, Diocese Arch Bishop என்று அவர்களிடம் ஒவ்வொரு
பிரிவுக்கு, பல
சட்ட திட்டங்களுடன் கூடிய அமைப்புகள் உள்ளன, மசூதிகளையும் இதே போல
கட்டுப்படுத்த Waqf Board என்ற அமைப்பு, பல சட்ட திட்டங்களுடன்
உள்ளது, எந்த
சர்ச்சிலும், மசூதியிலும், கலெக்ஷனை அந்த
பாதிரியாரோ, மவுல்வியோ
வீட்டுக்கு கொண்டு செல்ல முடியாது. தினசரி வசூல் உரிய சாட்சிகளின் முன் சரி
பார்க்கப் பட்டு கணக்கில் எழுத்தப்படும்
இந்த
எல்லா அமைப்புகளும் இந்திய அரசாங்கத்தின் ட்ரஸ்ட்-களின் சட்டவிதிமுறைகளின் கீழே
வருகிறது.
எனவே
அரசாங்கம் தைரியம் இல்லை என்பதால் சர்சுகளையும், மசூதிகளையும் அரசு
கட்டுப்பாட்டில் கொண்டுவராமல் இருக்கவில்லை, அங்கே செயல்பாடுகள்
விதிமுறைக்கு உட்பட்டு இருப்பதால் மேற்கொண்டு எதுவும் செய்ய தேவையில்லை என்றுதான்
விட்டுவிட்டது.
மக்கள்
வைக்கும் இரண்டாம் குற்றச்சாட்டு,
திராவிட
இயங்கங்கள் எல்லா இந்து கோயில்களையும் அரசு கட்டுப்பாட்டில் எடுத்துகொண்டது.
இதுவும் உண்மையில்லை
இந்து கோயில்கள் மட்டுமே பல நூறு வருடங்களாக எந்த வித கட்டுபாடுகளும் இல்லாமல், கோயில் பூசாரிகளான பார்பனரும், தர்மகர்த்தாவாக இருக்கும் உயர் சாதி இந்துக்களாலும், அந்த கோயில்களின் சொத்துகளை கணக்கு வழக்கின்றி கொள்ளை அடித்துகொண்டிருந்தது.
இந்து கோயில்கள் மட்டுமே பல நூறு வருடங்களாக எந்த வித கட்டுபாடுகளும் இல்லாமல், கோயில் பூசாரிகளான பார்பனரும், தர்மகர்த்தாவாக இருக்கும் உயர் சாதி இந்துக்களாலும், அந்த கோயில்களின் சொத்துகளை கணக்கு வழக்கின்றி கொள்ளை அடித்துகொண்டிருந்தது.
1925-ல் முதல் முதலில் ஆங்கிலேயர் காலத்தில், நீதிக்கட்சியின்
சார்பாக பனகல் அரசர் சர். பிட்டி. தியாகராசர் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த
போது, ஆங்கிலேய
கவர்னரின் மூலம் முதல் முதலில் Madras Hindu Religious Endowments Act
1925. கொண்டு
வரப்பட்டது.
அதெல்லாம்
தெரியும் இப்போது உள்ள சட்டத்தை கொண்டுவந்தது கருனாநிதி தானே என்று உடனே சொல்ல
நினைப்பவர்களுக்கு, சொல்வது, சற்று பொறுங்கள்.
இப்போது
உள்ள இந்து அறநிலையத்துறையை கட்டுப்படுத்தும் சட்டம், பெரியாரின் பல்வேறு
போராட்டங்களுக்கு பிறகு 1959-ல், Tamil Nadu Hindu Religious and
Charitable Endowments Act XXII of 1959 என்ற சட்டமாக முதலமைச்சர்
காமராஜர் ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது.
பிறகு
1991-ல் முதலமைச்சர் கருணாநிதியின் காலத்தில், இந்த சட்டத்தில் மேலும்
பல மாற்றங்கள் செய்து, பார்பனரின்
கோயில் கொள்ளையை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நீங்கள்
உங்கள் பகுதியில் பல பால் மற்றும் விவசாய கூட்டுறவு சொசைட்டிகளை பார்த்திருக்கலாம், அவைகளை அந்த
தேர்ந்தெடுத்த தலைவர் மற்றும் செயலாளர் போன்றவர்கள் சரிவர செயல்படுகிறார்களா என்று
மேற்பார்வை செய்ய தமிழ் நாட்டு அரசு கூட்டுறவு துறையிலிருந்து சிறப்பு அலுவலர்கள்
இருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.
இந்து
அறநிலையத்துறையின் பணியும் அதே தான்,
இந்து
கோயில்கள் அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படவில்லை, கண்காணிப்பின்
கீழ்கொண்டு வரப்பட்டுள்ளது
அவைகளை
கட்டுப்படுத்த எந்த அமைப்பும் இல்லை என்பதால் பூசாரிகள் கோயிலை கொள்ளை அடிக்கும்
வேலையை தடுக்க தான் இந்து அறநிலையத்துறை வேலை செய்கிறது..
இந்து
அறநிலையத்துறையின் வேலை,
1. மிக மிக கூட்டமான கோயில்களில் பூசாரிகள்
கன்னாபின்னாவென்று பக்தர்களிடம் பணம் வசூல் செய்து, பின்பக்கமாக உள்ளே
அழைத்து செல்வதை தடுப்பது
2. முறையாக டிக்கட் மூலம், சிறப்பு தரிசனம் போன்ற
ஏற்பாடுகள் செய்வது,
3. கோயில் உண்டியல், முதல் இந்த சிறப்பு
தரிசன டிக்கட்டுகள், கோயிலை
சுற்றி உள்ள கடைகளின் முறையான வாடகை வசூல், பின் இந்த பணங்கள்
கோயில் பெயரில் உள்ள வங்கி கணக்கில் முறையாக செலுத்தப்படுகிறதா என்று கண்காணிப்பது,
4. கோயில் செலவுகள் உண்மையில் சரியாக செய்யப்படுகிறதா, அல்லது கணக்கு
புத்தகங்களில் மட்டுமே எழுதப்படுகிறதா என்று கண்காணிப்பது,
5. கோயிலுக்கு நிலங்கள் சொத்துகள் இருந்ததால் அந்த குத்தகை, வாடகை பணங்கள் சரியாக
வசூல் செய்யப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டதா என்று கண்காணிப்பது,
இவை
போன்றவை தான் இத்துறையின் வேலை,
சுருக்கமாக
சொன்னால் இத்த துறை இல்லையென்றால்,
ஒரு
உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் என்றால் மைலாப்பூர் கபாலி கோயில் பூசாரிகள்
ஒவ்வொருவரும், இந்நேரம்
மகாபலிபுரத்தில் சொந்தமா ஒரு பீச் ரிசார்ட் மற்றும் தலா 3
BMW கார்
வைத்திருப்பார்கள்.
இந்து
அறநிலையத்துறையின் வேலை, கோயில்
வசூல் பணத்தை கொண்டு வந்து அரசாங்க கஜானாவில் சேர்ப்பது அல்ல.
மாறாக
அரசு கஜானாவில் இருந்து மக்கள் வரிப் பணத்தில் தான் அறநிலையத்துறை இயங்கிறது, இத்துறை சார்ந்த
அனைத்து ஊழியருக்கும் சம்பளம் அரசு வரிப்பணத்தில் தான் கொடுக்கப்படுகிறது.
கோயில்
பணத்திலிருந்து பூசாரிகளுக்கு தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது, இந்து அறநிலையத்துறை
சார்ந்த எந்த ஒரு கடைநிலை ஊழியருக்கு கூட கோயில் பணத்தில் சம்பளம் கொடுப்பது இல்லை
இந்து
அறநிலையத்துறை, இந்து
கோயில்களை கூட்டுறவு சொசைட்டிகளை போல கணக்கில் கொண்டு கண்காணிக்கும் அமைப்பு
மட்டுமே கோயில் வசூலை அரசாங்கத்தில் சேர்க்கும் அமைப்பு அல்ல.
தமிழ்
நாட்டில் பலர் இன்னமும் கோயிலில் வசூலாகும் கோடிக்கணக்கான பணம் தமிழக அரசுக்கு
வந்து விடுகிறது என்று தவறாக தான் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.
இங்கு
பார்பன புரட்டு பற்றி சொல்ல 1980-ல் நடந்த ஒரு சம்பவத்தை
பற்றி சொல்ல வேண்டும்
எம்ஜியார் ஆட்சிகாலத்தில், 1980-ல் திருசெந்தூர் வைரவேல் வழக்கு என்று ஒண்டு உண்டு. இளையதலைமுறை நண்பர்களில் பலருக்கு அது தெரிந்திருக்காது.
எம்ஜியார் ஆட்சிகாலத்தில், 1980-ல் திருசெந்தூர் வைரவேல் வழக்கு என்று ஒண்டு உண்டு. இளையதலைமுறை நண்பர்களில் பலருக்கு அது தெரிந்திருக்காது.
1980ஆம் ஆண்டு, திருசெந்தூர் கோயிலில்
உண்டியல் திறந்து பணம் எண்ணும் வேலை முடிந்து கணக்குகளை கோயில் நிர்வாகம் வெளியிட்டது, ஒரு பக்தர் தான் ஒரு
வைரவேலை உண்டியலில் போட்டத்தாகவும் அது கோயில் வெளியிட்ட கணக்கில் வரவில்லை என்று
ஒரு பத்திரிகையில் பேட்டி கொடுத்தார்.
அப்போது, திருசெந்தூர் கோயிலில், இந்து அறநிலையத்துறை
கண்காணிப்பு பணியில், துணை
ஆணையராக இருந்தவர் சுப்பிரமணிய பிள்ளை,
அவர்
இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்து விசாரணை மேற்கொள்ளதொடங்கினார்,
மறுநாள்
கோயிலில் உள்ள துணை ஆணையர் மாளிகையில் சுப்பிரமணிய பிள்ளை தூக்கில் தொங்கி
கொண்டிருந்தார்.
துணை
ஆணையரின் மர்மமான மரணத்தை பற்றிய, காவல் துறை விசாரணையில்
பூசாரிகளும், தர்மகர்த்தாவும்
அளித்த சாட்சி என்னவென்றால்,
உண்டியல்
பணம் எண்ணும் போது துணை ஆணையர் அவரது வேட்டி மடிப்பில் ரூபாய் 2850
உண்டியல்
பணத்தை ஒளித்து வைத்திருந்தார், அதை பார்த்த நாங்கள்
திருப்பி தரும்படி கேட்டோம்,
அவரும்
கொடுத்துவிட்டார் ஆனால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் என்பது
தான்
துணை
ஆணையரின் மகன், ஜனாதிபதி
வரை மனு கொடுத்து, பின்னர்
C.R. Paul Inquiry Commission என்ற பெயரில் ஒரு
கமிஷன் அமைக்கப்பட்டது,
சுப்பிரமணிய
பிள்ளை நெல்லை கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 700 கோயில்களில்
கண்காணிப்பு அதிகாரியாக, இந்து
அறநிலையத்துறை சார்பில் வேலை செய்தவர்,
சட்டை
கூட போடாமல் வெறும் வேட்டி அணிந்து கொண்டு உண்டியல் எண்ணும் பணியை செய்யும் போது, அங்கு சாட்சியாக இருந்த
அத்தனை வங்கி அதிகாரிகளின் முன்னிலையில் சுப்பிரமணிய பிள்ளை ரூபாய் 2850-ஐ திருடியிருக்க
வாய்ப்பே இல்லை என்று பல்வேறு விசாரணைக்கு பின் அந்த கமிஷன் தன் அறிக்கையை
முடித்து கொண்டது,
அவரது
மரணத்தை பற்றியும் காணமல் போனதாக சொல்லப்பட்ட அந்த வைரவேல் பற்றியும் சிபிஐ
விசாரிக்கவேண்டும் என்று பரிந்துதுரை செய்ததது.
இன்று
வரை சுப்பிரமணிய பிள்ளை மரணம் எப்படி என்றோ வைரவேல் எங்கே போனது என்றோ
கண்டுபிடிக்க படவில்லை.
அது
தான் பார்பன புரட்டு
இப்போது
உங்களுடன் மேலும் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
1. இந்து அறநிலையத்துறையால் தங்கள் வசதிக்கு திருடமுடியாது
கஷ்டப்படும் ஒரே கூட்டம் பார்பனர் மட்டுமே.
2. இந்த துறையை கொண்டு வர பெரிதும் போராடியது பெரியாரும்
திராவிட இயக்கமும்.
3. எம்ஜியார் மயக்கத்தில் இருக்கும் மக்களிடம் கருணாநிதி
மீது எந்த பழி சொன்னாலும் ஏற்றுகொள்வார்கள்
4. கருணாநிதி நாத்திகவாதி அதனால் அவர் இந்து கோயிலுக்கு
எதிராக செயல் பட்டார் என்று சொன்னால் மக்கள் நம்புவார்கள்
5. தமிழில் வெளிவரும் அனைத்து நாழிதழ்களிலும் வேலை செய்வோர்
98% பார்பனர் மட்டுமே (உனக்கு எப்படி தெரியும் என்றால் பத்து
வருடங்கள் நானே மீடியாவில் பணிபுரிந்துள்ளேன்)
6. நாம் பெரும்பாலும் பத்திரிக்கைகளை வைத்து தான் செய்தி
அறிகிறோம், அதில்
சொல்வதை பொதுமக்கள் எப்படியும் ஏற்றுகொள்வார்கள்
8. தைரியம் இருந்தால் சர்சுகளையும், மசூதிகளையும் அரசு
கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டியது தானே, என்று மதவாத சிந்தனையை
தூண்டுவது
இப்படியாக
பார்பனர் கோயில் பணத்தை கொள்ளை
அடிப்பதை தடுக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு துறையை பற்றி,
அடிப்பதை தடுக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு துறையை பற்றி,
நம்
தமிழ் நாட்டில் பலர் இன்னமும் கோயிலில் வசூலாகும் கோடிக்கணக்கான பணம் தமிழக
அரசுக்கு தான் வந்து விடுகிறது என்று தவறாக பொதுமக்களின் மண்டையில் ஏற்றியது தான்
உண்மையான பார்பன புரட்டு.
பல
வருடமாக இந்து அறநிலையத்துறை பற்றி இல்லாத ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் பார்பனர்
சொல்லிவருகின்றனர், மக்களும்
அறியாமல் நம்பி வருகின்றனர்.
இன்னும்
போதாகுறைக்கு இந்தத்துறையில் கோயில் நிர்வாக அதிகாரி பணிக்கு, இந்துவாக பிறந்த யாரும்
பட்டப்படிப்பு முடித்து ஒவ்வொரு வருடமும் TNPSC Group VII தேர்வு எழுதி
வெற்றிபெற்றால் தமிழக அரசின் 69% இடஒதுக்கீட்டின் படி
இந்த பணியில் அமரலாம், பார்பன
பூசாரிகள் அந்த அதிகாரி எந்த சாதியாக இருந்தாலும் அவருக்கு கைகட்டி பதில் சொல்லி
ஆகவேண்டும் என்பது தான் பார்பனருக்கு இன்னமும் எரிச்சல்.
இன்னமும்
நம்பிக்கை இல்லையென்றால், இந்து
அறநிலையத்துறை அலுவலகத்துக்கு பத்து ரூபாய் பணம் கட்டி RTI-சட்டத்தின் கீழ் இந்த
வருடம் உங்கள் துறையின், நிகர
லாபம் என்ன என்று கேட்டு மனு அனுப்புங்கள்
அங்கிருந்து, இத்துறை ஒரு
கண்காணிப்பு துறை இங்கு லாபம் என்று எல்லாம் எதுவும் கிடையாது என்று பதில் வரும்.
இதையெல்லாம்
தாண்டி அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, இனி இந்த துறை மூலம்
பயிற்சி கொடுக்கப்பட்டு, சாதி
வித்தியாசம் இல்லாமல் இறை பணி செய்ய விரும்பும் யார் வேண்டுமானாலும், அதாவது அனைத்து
சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டுவந்தது தான் பார்பானின் வெறி
உச்சிக்கு ஏரிய தருணம்
இன்னும்
ஒன்றை சொல்லவேண்டும் என்றால், கிருஸ்துவ, இஸ்லாமிய மற்றும் பிற
மதத்தினர் செலுத்தும் வரிப்பணத்தில் இந்து கோயில் சொத்துகள் பாதுகாக்கப் படுகிறது.
வெறும் இந்துகளின் பணத்தில் மட்டுமே அல்ல.
உண்மை
இப்படி இருக்க, திராவிட
கட்சிகள் கோயில் பணத்தை அரசாங்கத்தின் மூலம் கொள்ளை அடிப்பது போன்ற எண்ணத்தை
பொதுமக்கள் மனதில் ஏற்றியது தான் உண்மையான பார்பன புரட்டு.
இன்றும்
Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act XXII of
1959 சட்டத்தின்
படி யார் வேண்டுமானாலும் ஒரு தனிப்பட்ட இந்து வழிபாட்டு மையத்தை தொடங்கலாம்
நடத்தலாம்
ஆனால்
அங்கே உண்டியல் வைத்தாலோ, டிக்கட்
மூலம் அர்ச்சனை, சிறப்பு
நுழைவு கட்டணம் என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்தால், அது பொதுமக்களுக்கு
சொந்தமான கோயில் என்று கணக்கில் கொண்டுவரப்பட்டு, இந்து அறநிலையத்துறை
கண்காணிப்பில் (கட்டுப்பாட்டில் அல்ல) வந்துவிடும்
இதனால்
தான் பார்பான் தன் விஷ வன்மத்தை கருணாநிதி மேலும் திராவிட இயங்கங்கள் மேலும்
பரப்பிகொண்டே இருக்கிறார்கள் .
அவ்வை
சன்முகியில், வருவது
போல சொல்லவேண்டுமென்றால், இந்த
துறையும் திராவிட இயக்கங்களும் இருப்பதால் சேதுராமையர் போன்றவர்களால் கவுஸிமாமி
கூட சேர்ந்துகிட்டு வெள்ளி குத்து விளக்கு திருட முடியவில்லை
அதனால் தான் இந்த கூப்பாடு
No comments:
Post a Comment