இயேசு உயிர்த்தெழுந்தாரா?
நாம் பைபிள் கதைகளில் ஏசு சில்வையில் அறையப்படும் நிகழ்ச்சி பற்றி கேள்வி படுவதை சுருக்கமாக பார்த்தால்,
ஒரு வியாழன் இரவு தன் சீடரில் ஒருவனான யூதாஸால் காட்டி கொடுக்கப்பட்டு, வெள்ளி அன்று சிலுவையில் அறையப்பட்டு, ஞாயிறு அன்று உயிர்த்தெழுந்தார். கேட்க மிக எளிமை, மிக மிக பரவசம்.
ஆனால், அவர் உண்மையில் உயிர்த்தெழுந்தாரா, அன்று நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்களை ஆராய்வோம்.
அதுவரை கிராமங்களிலும், அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் பிரசாரம் செய்துவந்த ஏசு முதல் முறையாக தான் வழக்கமாக வாழும் பெத்தானி என்ற ஊரிலிருந்து 2 மைல் தூரத்தில் இருக்கும் பெரிய நகரமான எருசலேம் நகரத்திற்கு, திங்கள்கிழமை காலை வருகிறார்.
திங்கள் முதல் வியாழன் மாலை வரை 4 தினங்கள் எருசலேம் நகரத்தின் யூத பூசாரிகளிடம், கடவுளின் பெயரால் பூசை கட்டணம், மற்றும் அந்த பூசாரிகளே கிளை சுற்றி கட்டிகள் அமைத்து மக்களை ஏமாற்றும் அவர்களது முறைகேடான செயல்களை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அந்த கடைகளை தூக்கி எறிகிறார். மாலையில் சீடர்களோடு உணவு அருந்துகிறார்.
முன்பு கிராமங்களில் தானே பிரச்சாரம் செய்கிறார் என்று சும்மா இருந்த பூசாரிகள், தற்போது நேரடியாக வந்தது மட்டுமில்லாமல் தொடர்ந்து 4 தினங்களாக தங்கள் தொழிலுக்கு நேரடியாக தொல்லை தரும் ஏசுவை மொத்தமாக் ஒழித்துக்கட்ட முடிவு செய்த பூசாரிகள், ரோம் அரசாங்க அதிகாரிகளிடம் (யூதர்களின் நாடு அப்போது ரோம் நாட்டுக்கு அடிமையாக இருந்தது) அவரை ஒரு தேச துரோகி, மன்னருக்கு எதிராக பேசுகிறார், நானே உதர்களின் அரசன் என்று சொல்கிறார், என புகார் அளித்து, கைது செய்ய ரோமாபுரி வீரர்களை அழைத்துக் கொண்டு வருகின்றனர்
அந்த பூசாரிகளிடம் 30 வெள்ளி காசு வாங்கி கொண்டு அவரது சீடன் யூதாஸ் காரியோத் ஏசுவை அடையாளம் காட்டிக்கொடுக்கிறான்.
அன்று இரவு முதலில் அனாஸ் என்னும் யூத பூசாரியின் முன்னிலையிலும்,
அந்த பூசாரிகளிடம் 30 வெள்ளி காசு வாங்கி கொண்டு அவரது சீடன் யூதாஸ் காரியோத் ஏசுவை அடையாளம் காட்டிக்கொடுக்கிறான்.
அன்று இரவு முதலில் அனாஸ் என்னும் யூத பூசாரியின் முன்னிலையிலும்,
பின்னர் கயப்பாஸ் என்னும் தலைமை யூத பூசாரியின் முன்னிலையிலும் விசாரணை என்ற பெயரில் ஏசு அடித்து சித்திரவதை செய்யப்படுகிறார். கொள்வதற்கு அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. (பஞ்சாயத்து தலைவர் போன்ற பதவி)
பின்னர் மரண தண்டனை வாங்கி கொடுக்கும் நோக்கோடு பிலேட்ஸ் என்ற ரோமாபுரி கவர்னர் முன் விசாரணைக்கு நிறுத்தப்படுகிறார். விசாரித்த கவர்னர் ஏசு மீது எந்த குற்றமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என வழக்கை தள்ளுபடி செய்ய சொன்னார். அதன் பிறகும் யூத பூசாரிகள் விடுவதாக இல்லை,
எனவே பிலேட்ஸ், உங்கள் யூத இனத்தலைவரான ஹீரோட் ஆன்டிபாஸிடம் போய் இந்த வழக்கை கேளுங்கள் என 80 மைல் தொலைவில் இருக்கும் கலிலி மாவட்டத்திற்கு அனுப்புகிறார் (ஒரு சிலர் (மத்தேயு-புத்தகத்தின் படி) ஹீரோட் ஆன்டிபாஸ் அன்று பிலேட்ஸ் அரண்மனையின் இன்னொரு பகுதியில் விருந்தினராக தங்கி இருந்ததாக சொல்வார், நாமும் அப்படியே வைத்து கொள்வோம், இல்லையென்றால் கலிலி மாவட்டத்திற்கு சென்று திரும்ப ஒரு வாரம் ஆகிவிடும், பின் பைபிலில் சொல்வது போல மறுநாள் ஏசுவை சிலுவையில் அறையமுடியாது). ஹீரோட் வழக்கை விசாரிக்க தொடங்க, அந்த விசாரணையில், இயேசு பதில் பேச மறுத்துவிகிறார். யூத பூசாரிகள் மீண்டும் பிலேட்ஸ்-இடம் ஏசுவை கொண்டு செல்கின்றார்கள்.
• மறுபடியும் விசாரணை,
• பிலேட்ஸ் விடுவிக்க முயற்சி,
• யூத பூசாரிகள் மறுப்புக்கு,
• பின் இறுதியாக ஏசுவுக்கு மரண தண்டனை வழங்கப் படுகிறது.
• பிலேட்ஸ் விடுவிக்க முயற்சி,
• யூத பூசாரிகள் மறுப்புக்கு,
• பின் இறுதியாக ஏசுவுக்கு மரண தண்டனை வழங்கப் படுகிறது.
சிலுவை சுமந்து செல்கிறார் சிலுவையில் அறையப்படுகிறார், அன்று மாலை கல்லறையில் வைக்கப்படுகிறார், ஞாயிறு உயிர்த்தெழுகிறார்.
இந்த சம்பவங்களை கூர்ந்து நோக்கினால், நாம் அறிவது...
இயேசு 6 முறை விசாரிக்கப்டுகிறார். வியாழன் நள்ளிரவுக்கு மேல் கைது செய்யப்பட்டவர் (சுமார் இரவு 1 மணி) என்றாலும் 1 விசாரணைக்கு குறைந்தது 2 மணி நேரம் தேவைப்படும், அதிகாரிகள் உறங்கிகொண்டிருக்க, அவர்களை எழுப்பி விசாரனை அதிகாரிகள்’, விசாரணை குறிப்பெடுப்பவர்கள், என பலர் வரவேண்டும், ஏனெனில் ரோமசாம்பிராச்சியத்தில் எல்லா விசாரணைகளும் எழுதிவைக்க பட வேண்டும், பின்னர் விசாரித்த அதிகாரி கையெழுத்திட்டால் தான் அடுத்த நடவடிக்கைக்கே செல்லமுடியும்
2 X 6-விசாரணைகள் = 12 மணிநேரம், ஒரு விசாரணைக்கும் அடுத்த விசாரணைக்கும் இடையே, ஒருஇடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு விசாரணை கைதியை நடத்தி செல்லவேண்டும் அல்லவா, அதற்கு ஒவ்வொரு முறையும், அரைமணி நேரம் ஆனது என்றாலும் மேலும் 3 மணி நேரம் ஆகும்.
மொத்தம் 15 மணி நேரம் ஆகியிருக்கும். அதாவது சிலுவையை ஏற்கனவே தயாராக செய்து வைத்திருந்தார்கள் என்று வைத்து கொண்டாலும். வியாழன் இரவு 1 மணியிலிருந்து 15 மணி நேரம் என்றால் வெள்ளிகிழமை மாலை 4 மணி ஆகிவிடும். பின்னர் கல்வாரி மலைக்கு சுமார் 2 மைல் தூரம், ஏசு சிலுவையும் துக்கி கொண்டு நடக்கவேண்டும் என்றால், ஒரு 2-3-மணி நேரம் ஆகிவிடும் அதாவது மாலை 6 மணி தாண்டிவிடும். சூரியன் மறைந்துவிடும்.
அந்த காலத்தில் யூதரின் கணக்குப்படி புதிய நாளின் தொடக்கம், சூரியன் மறைந்தவுடன் தான் ஆரம்பம்.
வெள்ளி அன்று மாலை, சூரியன் மறைய தொடங்கியாவுடன், ஏசுவின் உறவினர் சிலர், ரோம் வீரர்களிடம் சென்று சூரியன் மறைய தொடங்கிவிட்டது, இன்னும் கொஞ்ச நேரத்தில், சனிக்கிழமையான சபாத் (ஒய்வு நாள்) தொடங்கிவிட்டால், ஏசுவின் உடலை அடக்கம் செய்யமுடியாது அதனால் சூரியன் முழுவதுமாக மறையும் முன்னரே அவரது உடலை கிழே இறக்கி தாருங்கள், என்று சொல்லித்தான் கேட்கிறார்கள். பின்னர் இயேசுவின் உடலை உறவினர் வாங்கி அன்று மாலையே கல்லறையில் வைத்து முடியதாக பைபிள் சொல்கிறது.
எனவே 6 மணிக்கு மேல் தான் ஏசு கலாவ்ரி மலையை அடைந்தால் சபாத் தினம் தொடங்கிய பிறகு சிலுவையில் அறைய முடியாது. பைபிளின் படி அன்று மாலை திடீரென்று வானம் மேகமுட்டத்துடன் இருளாகி கடும் மழை பெய்ததாக சொல்லப்படுகிறது. ஏசு சிலுவையில் அறையப்பட்டதாக சொல்லப்படும் ஏப்ரல் மாதத்தில் யூதர்களின் பாலைவன தேசத்தில் எப்படி மழை வருமோ.
அப்படியே சிலுவையில் அறைந்தார்கள் என்றே வைத்து கொண்டாலும், அவர் சிலுவையில் இறந்து போயிருக்க வாய்ப்பில்லை, கொட்டும் மழையில் ஏசுவின் உடலை கீழே இறக்குவதற்கு முன் அவருக்கு உயிர் இருக்கிறதா என சோதிக்க, அவரது விலாவில் ஈட்டியால், லேசாக ரோம் வீரர்கள் குத்தி பார்கிறார்கள், இரத்தம் வழிகிறது (அந்த அடையாளம் இன்றும் ஏசு சிலைகளில் குறிக்க படுவத்தை பார்க்கலாம்). இறந்த பின் உடலில் ரத்தம் வழியாது. அதன் பின் தண்டனை முறைப்படி, கைதிகளின் முழங்கால்கள் இரும்பு தடி கொண்டு உடைக்கப் படவேண்டும். ஏசு உடன் அருகில் வேறு இரண்டு சிலுவைகளில் இருந்த இருவர் கால்கள் உடைக்கப் பட்டன, ஏசு உடலில் எந்த அசைவும் இல்லை என்பதால் அவரது முழங்கால்கள் இரும்பு தடி கொண்டு உடைக்கப்படவில்லை.
மொத்தத்தில், முழு மயக்க நிலையில், சுமார் 15 மணிநேரம் விசாரிக்கப்பட்ட அடிப்பட்ட ஏசுவை, சபாத் விரதத்துக்கு செல்லும் அவசரத்தில் இருந்த உறவினர்கள், அவசர அவசரமாக கொண்டு போய் கல்லறை குகையில் வைத்துவிட்டு திரும்பி விட்டனர், வெள்ளிகிழமை மாலை, உப்பு போட்டு துணியால் சுற்றப்பட்ட மயக்க நிலையில் இருந்த ஏசு, சனிக்கிழமை மாலையில் மயக்கம் தெளிந்து எழுந்து சென்றிருக்கலாம். ஞாயிறு காலை மலர் தூவ சென்றவர்கள் கல்லறை குகை கல் விலகி கிடப்பதையும், அவர் உடலை காணவில்லை என்பதையும் பார்த்து திகைத்து போயிருக்கலாம். அந்த காலத்தில் சிலவை தண்டனை என்றால் யாரும் பிழைக்க முடியாது, அதுவே அவர் இறந்து பின் உயிருடன் வந்தததாக நம்ப படுகிறது.
பின்னர் தன சீடன் தாமசை சந்தித்த ஏசு கால்களிலும் கைகளிலும் உள்ள ஆணியின் தழும்புகளை காட்டினார் என்றும் பைபிளில் சொல்லப் படுகிறது
மொத்தத்தில் எல்லாம் கப்ஸா அண்ட் புருடா
ஆனா ஒன்னும் மட்டுமே நிச்சயமான உண்மை எந்த ஊரில், எந்த நாட்டில் பூசாரியை, சாமியாரை திட்டினாலும் டேஷ் துரோகி தான்
ஆனா ஒன்னும் மட்டுமே நிச்சயமான உண்மை எந்த ஊரில், எந்த நாட்டில் பூசாரியை, சாமியாரை திட்டினாலும் டேஷ் துரோகி தான்
நீங்கள் சொல்வது விவிலியத்தை வைத்து வாதிடுவது போல் இருக்கிறது, விவிலியமே புரட்டு என்று தான் டாவின்ஸி கோட் போன்ற புத்தகங்கள் சொல்கிறது. இயேசுவின் மரணம் மிக சாதாரண மாகவே நிகழ்ந்திருக்கிறது அவர் உயிர்த்தெழுந்ததாக சொல்லப்பட்ட விஷயமே பொய் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. இது உயிர்த்தெழுந்ததை நியாயப்படுத்துவதாக தெரிகிறது.
ReplyDeleteடாவின்ஸி கோட் ஒரு புதினம் நாவல்
Deleteஅது வரலாறு அல்ல அந்த கதையாசிரியரின் கற்பனை
இங்கு உயிர்த்தெழுந்தார் என்று சொல்லும் விவிலியத்தின் வார்த்தைகளை கொண்டே அப்படி நடக்க வாய்ப்பில்லை என்று மறுக்கப்பட்டுள்ளது
//உப்பு போட்டு துணியால் சுற்றப்பட்ட மயக்க நிலையில் இருந்த ஏசு, சனிக்கிழமை மாலையில் மயக்கம் தெளிந்து எழுந்து சென்றிருக்கலாம்.//
ReplyDeleteஇது என்ன சோதனை?
இது அறிவியல் ரீதியிலான பார்வையா?
Torture expertsஆன ரோம போர்சேவகர்களுக்கு நாடி பார்க்க தெரியாதா?
Governor விசாரித்த முக்கிய வழக்கில் சிலுவையில் இயேசு இறந்தாரா இல்லையா என்று கூட பார்க்காமல் தான் உடலை கொடுத்தார்களா?
மயக்க நிலையில் இருப்பவர் மூச்சு விடமாட்டாரா?
நாடி/இதய துடிப்பு இருக்காதா?
மயக்க நிலையில் இருப்பவரை போய் யாராவது வெள்ளைபோளம் கரியபோளம் வைத்து துணிகளில் கட்டுவார்களா?
என்ன கொடுமை சார் இது?