இந்த நிகழ்ச்சி, தமிழ் நாட்டில் சுமார் கிபி 1000-களில் நடந்தவை,
ராஜராஜனும் ராஜேந்திரனும் சோழமண்டலத்தை ஆண்டு கொண்டிருந்த காலகட்டம் காலம் கி.பி. பதினோராம் நூற்றாண்டு, காவிரிப் பூம்பட்டினம் வணிகர்கள் நிறைந்த ஒரு துறைமுக நகரம்.
சிவநேசர் என்னும் வணிகர் ஞானகலை என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். அந்த வணிகருக்குப் பிள்ளை பிறந்த போது சுவேதவனன் என்று பெயர் வைத்தார்கள்.
சிவநேசர் வணிகர்களிலேயே பெரு வணிகர், அந்த வணிகர்கள் குழுவுக்கு தலைவராகவும் இருந்தார். பெரும்பொருள் திரட்டி மன்னர்களுக்குச் சமமான மாளிகையில் மிகவும் வசதிகளோடும், ஆடம்பரமாகவும் வாழ்ந்து வந்தார். மன்னரும் அவரை மதித்துப் போற்றி வந்தான்.
மகன் சுவேதவணனும் மிகவும் ஆனந்தமாகவே வாழ்ந்து வந்தான். உரிய பருவத்தில் திருமணமும் ஆயிற்று. சுவேதவனனுக்கு ஒரு சகோதரியும் இருந்தாள். சகோதரிக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பின் சுவேதவனனும் சிவகலை என்னும் பெண்ணை மணந்துகொண்டார். ஆனால் அவர்களுக்கு நீண்ட நாட்கள் குழந்தை இல்லாமல் இருந்தது. அதனால் அவர்கள் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்கின்றனர். அந்த குழந்தைக்கு மருதவாணன் என்ற பெயரை வைத்து வளர்கின்றனர்.
தந்தை இறந்தபின் சுவேதணன், வணிகர்களின் தலைவன் ஆகிறான். அவன் மகன், மருதவாணன் ஒரு சுகவாசி எப்போதும் ஊர்சுற்றிக்கொண்டும் தாசிகள் சகவாசமுமாக வாழ்ந்து வந்தான்,
தந்தை சுவேதணனின் வற்புறுத்தல் தாங்காமல், மருதவாணன் இறுதியாக, பெரும் செல்வத்துடன், சுவர்ணதீவு பகுதிக்கு(இன்றைய தாய்லாந்து) வணிகம், செய்ய செல்கிறான்.
இந்த காலகட்டத்தில் கம்போடியா மன்னன் முதலாம் சூர்யவர்மன், தன் எதிரியான தாம்பரலிங்க தேச மன்னனுடன், போராட ராஜேந்திரசோழனின் உதவி கேட்டு தூது அனுப்புகிறான். தாம்பரலிங்க தேச மன்னனுக்கு, ஸ்ரீவிஜய தேசத்து மன்னன் உதவியாக இருக்கிறான், ஸ்ரீவிஜய தேசமே இன்றைய இந்தோனேசியா
அப்போது சோழநாட்டு வணிகர்கள், ஐநூற்றுவர் மற்றும் ஆயிரத்தைநூற்றுவர் என்ற இருகுழுவினராக செயல்பட்டுவந்தனர், சுவேதணன் ஆயிரத்தைநூற்றுவர் குழுவின் தலைவன்.
இந்த இரு வணிககுழுவினரும், ஸ்ரீவிஜய தேசத்தருகே தொடர்ந்து கடற்கொள்ளையரால், தாக்கப்பட்டு வந்தனர். அவர்கள் ஸ்ரீவிஜய தேச மன்னனிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த பலனும் இல்லாமல் போக, ராஜேந்திரசோழனிடம் நேரடியாக சென்று சுவேதணன் தலைமையில் முறையிட்டனர்.
ராஜேந்திரசோழனும், கம்போடியா மன்னன் முதலாம் சூர்யவர்மனுக்கு உதவியும் செய்தது போலவும் இருக்கும், நம் நாட்டு வணிகருக்கு தொல்லை தீர்ந்தது போலவும் இருக்கும் என்று, தெற்காசிய கடல் பகுதிக்கு படையெடுக்க கிபி 1020-ல் முடிவெடுக்கிறார். இந்த போரின் முடிவே ராஜேந்திர சோழனுக்கு கடாரம் கொண்டான் என்ற பட்டதை கொடுத்தது
அப்போது சோழநாட்டில் இருந்த பெரிய துறைமுகம் காவிரிபூம்பட்டினம் மட்டுமே, எனவே ஒரு பெரும் படைக்கான வீர்கள் மற்றும் கப்பல் கட்டும் தொழிலாளிகள், போர் சார்ந்த மற்ற பணியாளர்கள், என்று ஒரு மிகப்பெரிய குடியேற்றம் காவிரிபூம்பட்டினம் துறைமுக நகரில் நடைபெறுகிறது.
அங்கே ஏற்கனவே குடியிருந்த அனைத்து வணிகர்களும் வேறு இடத்துக்கு இடம் மாறும்படி வற்புறுத்தப்படுகிறார்கள். அந்த வணிகர்களும் வேறு வழியின்றி காவிரிபூம்பட்டினத்தை விட்டு வெளியேறுகின்றனர். வணிகர்களின் வெறுப்பு, முழுமையாக சுவேதணன் மீது திரும்பி அவன் தலைமையை ஏற்க மறுகின்றனர்.
எல்லா வணிகரின் வீடுகளும், வீர்கள் தங்க அரசால் கைப் பற்றபடுகிறது. இந்த காலகட்டத்தில் தான் இந்த வணிகர்கள் எல்லாம் தற்போதைய காரைக்குடி பகுதிக்கு குடியேறினர், அவர்கள் அந்த பகுதியை தேர்ந்தெடுக்க காரணம், அங்கே ஆறுகளோ, கடலோ கிடையாது, எதுவம் விளையாது, அரசு அந்த பகுதியை எந்த காலத்திலும் கைப்பற்றவேண்டிய நிலையே வராது என்பதால் தான்.
சுவேதணன், வீடு வாசல் எல்லாம் இழந்து தன் மக்களின் வெறுப்புக்கு ஆளாகி நின்றான். சுவேதணனின் சகோதரி தன் தாயுடன் மற்ற வணிகர்கள் குடியேறிய புதிய பகுதிக்கு சென்று விடுகிறாள். இந்த கலவரத்தில் சுவேதணனின் மனைவியும் இறந்துவிடுகிறாள்
இப்போது சுவேதணனின் ஒரே நம்பிக்கை வணிகம் செய்ய சுவர்ணதீவு சென்ற மகன் மருதவாணன் மட்டுமே, ஆனால் அவனது மகன் சுவர்ணதீவில்(Bankok-இல்) பெண்களுடன் உல்லாசமாக இருந்து எல்லா பணத்தையும் இழந்து, தந்தைக்கு பயந்து தலைமறைவாகிறான்.
ஒரே நேரத்தில், ஊர்த்தலைவன் என்ற பட்டத்தை இழந்து, ஊர் மெச்சிய மரியாதையை இழந்து, சொத்துகளை இழந்து, மனைவியை இழந்து, மகனை இழந்து, அவன் மூலமாக கடைசியாக இருந்த பணத்தையும் இழந்து, தெருவிற்கே வந்துவிட்ட சுவேதணன், கிட்டத்தட்ட பைத்தியமாகி, ஊர் ஊராக கிழிந்த ஆடைகளோடு சுற்றி திரிகிறான். கடைசியாக சென்னை அருகே உள்ள திருவொற்றியூர் வருகிறான், அங்கிருந்த கோயில் வாசலில் எப்போதும் படுத்தே கிடப்பான், எப்போதாவது திடீரென தன பழைய நிலையை நினைத்து பாடல் போல புலம்புவான், யாராவது உணவளித்தால் உண்பான். பின் ஒருநாள் இறந்தும் போனான்.
சுவேதணன், யாரோ உண்ண கொடுத்த கரும்பை, கடைசிவரை உண்ணாமல் கையிலேயே வைத்திருந்ததை யாரோ பார்பனன், சுவேதணனை புதைத்த இடத்தில் ஒரு சிறு கோயிலை கட்டி, இவர் யார் தெரியுமா? காவிரிபூம்பட்டினத்தில் இருந்த வந்தவர், எல்லா செல்வமும் வேண்டாம் என்று ஈசன் அருள் நாடி சித்தரானவர், பட்டினத்தில் இருந்து வந்தவர் என்பதால் நாம் இவரை பட்டினத்தார் என்று அழைக்கவேண்டும் அவரது புராணம் பின்வருமாறு என்று கூறினான்.
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
அந்த கதை
செல்வத்துக்கு அதிபதியான குபேரனுக்கு ஞானம் கிட்ட வேண்டியும், மண்ணுலக இன்பங்களை அனுபவிக்க வேண்டியும் ஈசனை வேண்ட அவ்வாறே மண்ணுலகில் பிறக்க அருளுகிறார் ஈசன். ஆனால் குபேரனாயிற்றே. செல்வத்துக்கு அதிபதி அல்லவா? ஏழைக்குடும்பத்திலே பிறக்க முடியாது என்பதால் காவிரிப் பூம்பட்டினத்திலுள்ள மிகப் பெரிய செல்வக் குடும்பத்தில் பிறக்கிறான் குபேரன்.
திருவெண்காடு சென்று பெற்றோர் பிள்ளைவரம் வேண்டிய பின்னர் பிறந்ததால் திருவெண்காடர் என்ற பெயரை வைக்கின்றனர். ஒரே சகோதரி இருக்கிறாள். திருவெண்காடருக்கு ஐந்து வயதாக இருக்கையில் தகப்பனார் இறந்து போக இவர் அதுமுதல் வணிகத்தைக் கவனித்து வருகிறார்.
ஒருநாள் இவர் கனவில் ஈசன் தோன்றித் திருவெண்காட்டிற்கு வரும்படி பணிக்க அங்கே செல்கிறார். அங்கே ஈசன் இவரை ஒரு அந்தணர் உருவில் வந்து சந்தித்துச் சிவ தீட்சை கொடுத்துவிட்டு ஒரு சம்புடத்தையும் கொடுக்கிறார். (No one knows why this extra bit)
அந்தச் சம்புடத்துக்குள்ளாக விநாயகர் சிலையும், ஒரு சிவலிங்கமும் இருக்கவே நாள் தோறும் அதற்குப் பூஜைகள் செய்து வருகிறார். தக்க பருவம் வந்ததும் சிவகலையைத் திருமணம் செய்து கொள்கிறார். நாட்கள் கடக்கின்றன. குழந்தை பிறக்கவில்லை.
அப்போது திருவிடைமருதூரில் வாழ்ந்து வந்த சிவசருமன், சுசீலை என்னும் அந்தணத் தம்பதியருக்கு(Note this point) வறுமை பொறுக்க முடியாமல் இருந்து வந்தது. சிவசருமர் கனவில் ஈசன் தோன்றி, தாம் கோயிலின் தீர்த்தக்கரையில் ஒரு மருத மரத்தடியில் குழந்தையாக இருப்பதாகவும், சிவசருமர் அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தில் பெருவணிகராய் உள்ள திருவெண்காடரிடம் சேர்ப்பிக்குமாறும் அவர் குழந்தைக்கு ஈடாகக் கொடுக்கும் பொருளால் வறுமை தீரும் எனவும் கூறவே விழித்தெழுந்த சிவசருமர் மறுநாள் அவ்வாறே நடக்கக்
குழந்தையை எடுத்துச் சென்று திருவெண்காடரிடம் கொடுக்க அவரும் ஈசன் ஆணை என அறிந்து குழந்தையைப்பெற்றுக் கொண்டு சிவசருமருக்குப் பொருள் கொடுத்து உதவுகிறார். மருத மரத்தடியில் கிடைத்த குழந்தைக்கு மருதவாணன் என்று பெயரிட்டு அருமையாகச் சீரோடும், சிறப்போடும் வளர்த்து வருகிறார்.
மருதவாணராகத் தம்மிடம் வந்து வளர்வது இறைவனே என்ற உண்மை பட்டினத்தாருக்குத் தெரியவில்லை. பையனை வணிகத்தில் ஈடுபடுத்துகிறார். வணிகக் கப்பல்களோடு வணிகம் செய்ய வெளிநாடுகளுக்கும் அனுப்பினார். வணிகம் முடிந்து மருதவாணன் திரும்பி வந்தான்; திரும்பி வந்த மகன் கப்பல் நிறையப் பொருட்களைக் கொண்டு வந்திருப்பான் என எதிர்பார்த்தார் திருவெண்காடர். ஆனால் அவருக்கு வந்து சேர்ந்ததோ ஓலைத் துணுக்கு ஒன்றும், காதற்ற ஊசி ஒன்றும் தான். கப்பலிலும் எருவிராட்டியும், தவிடுமாகவே நிரம்பி இருந்ததை அறிந்தார். கோபம் கொண்ட பட்டினத்தார் அந்த ஓலையை எடுத்துப் படிக்கையில் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என அதில் எழுதப் பட்டிருந்ததைப் படித்தார். அதைப் படித்த பட்டினத்தாருக்குத் தூக்கி வாரிப் போட்டது. இத்தனை செல்வம் சேர்த்தும் என்ன பயன்! எதைக்கொண்டு போகப் போகிறோம். எதுவும் இல்லை.
அனைத்துச் சொத்துக்களையும், ஆடம்பரமாளிகையையும், விட்டுவிட்டு உடனடியாகத் துறவு மேற்கொண்டார். வீட்டை விட்டு வெளியேறித் துறவியாகத் திரிந்த அவரால் தனக்கும், அவர் மூலம் கிடைத்த சொத்துக்களுக்கும் பங்கம் ஏற்படுமோ என நினைத்த அவர் சொந்தத் தமக்கையார், அப்பத்தில் விஷம் வைத்துக் கொடுக்க அதை அறிந்த பட்டினத்தடிகள், அந்த அப்பத்தை வீட்டுக் கூரையில் செருகிவிட்டு, “தன் வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்” எனக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகல, வீட்டுக்கூரை தீப்பற்றி எரிந்தது. அதைக் கண்ட உறவினர் பட்டினத்தாரின் சக்தியை அறிந்து கொண்டனர். இவர் ஒரு சித்தர் எனப் புரிந்து கொண்டனர்.
தன் அன்னையிடம் அவர் இறக்கும் தருவாயில் எங்கிருந்தாலும் தான் வந்து எரியூட்டுவதாய்க் கூறி இருந்தார் பட்டினத்தார். அவ்வாறே அவர் அன்னையார் இறந்துவிடப் பட்டினத்தார் சரியான நேரத்துக்கு அங்கே வந்து சேர்ந்தார். இவர் வந்து எரியூட்டக் கூடாதென உறவினர்கள் அதற்குள்ளாகச் சிதையைத் தயார் செய்திருந்தனர் ஆனால் சுடுகாட்டிற்குப் போய்ச் சேர்ந்த பட்டினத்தார் காய்ந்த கட்டைகளால் அடுக்கப் பட்டிருந்த சிதையை அகற்றிவிட்டுப் பச்சை வாழைமட்டைகளையும், வாழை இலைகளையும் அடுக்கினார். பின்னர் "ஐயிரண்டு திங்களாய் " என தொடங்கும் பாடல்களைப் பாடி அன்னையின் மரணத்திற்குத் தன் துயரத்தை வெளிப்படுத்தினார்.அவ்வளவில் பச்சை வாழை மட்டை பற்றி எரிந்தது. சுற்றிலும் இருந்தவர் திகைத்துப் பார்க்கையிலேயே அங்கே எதையும் வேண்டாமல் அங்கிருந்து சென்றார் பட்டினத்தார்.
இதற்கு அப்புறம் சம்மந்தம் இல்லாமல் இவர் உஜ்ஜையினி நகரத்துக்கு சென்றதாகவும் அங்கே இருந்த அரசன் பத்ருஹரியை தன் சீடனாக மாற்றி அழைத்துவந்துவிட்டார் என்றும் தனி டிராக் ஒன்று உண்டு (அதை கூகிள் செய்து படித்துகொள்ளவும்)
பட்டினத்தார் தனக்கு முக்தி கொடுக்குமாறு ஈசனை வேண்ட, ஈசன் அவரிடம் ஒரு கரும்பைக் கொடுத்தார். அதன் நுனி இனிக்கும் இடத்தில் அவருக்கு முக்தி கிடைக்கும் எனக் கூறினார். அந்தக் கரும்பை எடுத்துக் கொண்டு பட்டினத்தார் மீண்டும் திருவெண்காடு, சீர்காழி போன்ற பல தலங்களுக்குச் சென்றார். அங்கெல்லாம் நுனிக்கரும்பு இனிக்கவில்லை. (இப்படி பல நாளாய் சுற்றினாலும் அந்த கரும்பு காய்ந்து போகாது. - because it is divine miracle )
பின்னர் அவர் திருவொற்றியூர் வந்தார். அங்கே தான் கரும்பு இனித்தது. இங்கேயே தனக்கு முக்தி என்பதை உணர்ந்து கொண்ட பட்டினத்தார், அங்கு இருந்த சிலரை அழைத்துத் தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி வேண்ட அவர்களும் அப்படியே மூடினார்கள். மூடப்பட்ட பட்டினத்தார் லிங்க வடிவாக மாறினார். முக்தியும் பெற்றார். பின்னாட்களில் இங்கே கோயில் எழுப்பப் பட்டது. வங்காளவிரிகுடாக் கடலைப் பார்த்த வண்ணம் காட்சி தரும் பட்டினத்தார் தனிச் சந்நிதியில் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் காட்சி தருகிறார்.
ஆக மொத்தத்தில் எல்லாம் இழந்து பைத்தியமாக சுற்றி திரிந்த ஒருவனை சித்தர் ஆக்கிவிட்டனர் இந்த பார்பனர்.
இது எதோ ஆயிரம் வருடத்திற்கு முன் நடந்தது, என் எண்ணுவோருக்கு, நமது சமகாலத்தில் நடந்த ஒரு நிகழ்வை சொல்லுகிறேன்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், ஊர்சுற்றி பார்க்க குஜராத்தில் இருந்து வந்த ஒரு குடும்பம், புத்திபேதலித்த நிலையில் இருந்த ஒரு முதியவரை திருவண்ணாமலையில் விடுவிடு சென்றுவிட்டனர்.
அந்த முதியவர், தனது நிலை அறியாமல், அங்கும் இங்குமாக திரிவார், யாராவது உணவு கொடுத்தால் சாப்பிடுவார், இல்லையென்றால் கோயில் மண்டபத்திலே படுத்துகிடப்பார்.
கடைசியில், சில பார்பனர் மற்றும் பிரபல எழுத்தாளர்களின் பரப்புரையாலும், அந்த புத்திபேதலித்த முதியவரை யோகி ராம்சூரத்குமார் என்ற பெயரில் சித்தராக்கிவிட்டனர்
யோகி ராம்சூரத்குமார் ஆசிரமம் என்ற பெயரில் இப்போது கொடிகளில் பல கேடிகள் புரள்கிறார்கள்.
No comments:
Post a Comment