Tuesday, August 29, 2017

தமிழ் புத்தாண்டு - யுகங்கள் தோறும் பார்பன புரட்டு


பார்பன புரட்டு, ஜெயலலிதாவின் ஏமாற்றுவேலை என்று அவர் இறந்த பின் எழுதுகிறாயே அவ்வளவுதான் உன் வீரமா என்று கேட்பவர்களுக்கு இந்த பதிவு புதிய பதிவு அல்ல, 2012-முதல் சுமார் 5முறை ஏற்கனவே போட்ட பதிவு தான் இது.
இன்னும் சொல்லப்போனால் நமது முகநூல் நண்பர் H Umar Farook , ஒவ்வொரு சித்திரை ஒன்றாம் தேதியும் இந்த பதிவை மறுபதிவு செய்ய சொல்லி நினைவூட்டுவார்,
யாரும் அதிகம் கவனிக்காத அந்த பழைய பதிவின் லிங்க் இதோ
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்றும் சொல்லும் நாட்காட்டி முறையை, கலியுக வருடம், விக்கிரம (அ) சாலிவாகன ஆண்டு என்று சொல்லுவார்கள். அது தான் இந்து மத புராணமான ஓரினகலப்பில் மகாவிஷ்ணுவுக்கும் நாரதருக்கும் பிறந்த 60 குழந்தைகளின் பெயர்கள் என்று சொல்லப்படும் கதை.
இந்த அறிவுக்கு ஒவ்வாத கதைகள் தேவையில்லை என்று பாவேந்தர் முதல் மறைமலையடிககள் வரை பல தமிழ் அறிஞர்கள், அதற்கு பதிலாக தமிழர்க்கு தை முதல் நாளை புத்தாண்டாக கொண்டு திருவள்ளுவரின் பிறந்த வருடத்தை, சற்றே ஏறக்குறைய ஏசு பிறப்பதற்கு 30 வருடம் என்று கணக்கில் கொண்டு ஒரு புது நாட்காட்டி முறையை கொண்டு வரவேண்டும் என்று போராடினார்கள்.
இறுதியில் 1971-ல், கருணாநிதி அவர்களின் ஆட்சியில், திருவள்ளுவர் ஆண்டு தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான நாட்காட்டி என்று அரசானை பிறப்பித்து, அதனை சட்டமாக்கினார்.
அன்றிலிருந்து, திருவள்ளுவர் ஆண்டே தமிழத்தின் அதிகாரபூர்வமான நாட்காட்டியாக இருந்து வருகிறது.
அதன் பின் இந்தியாவில் 1975-ல் அவசரநிலை பிரகனப்படுத்தப்பட்டு, திமுகா-வின் ஆட்சி கலைக்கப்படுகிறது.
அதன் பின் 1989-ல் 9-தாவது சட்டமன்ற தேர்தலில் தான் திமுக ஆட்சிக்கு வருகிறது. இடையில் எம்ஜியாரின் ஆட்சிகாலத்தில் இந்த தமிழ் புத்தாண்டு பற்றிய அதிமுகா அரசு கவலை பாடவும் இல்லை.
பார்பனர் உதவியில் மறுபடியும் 1977-க்கு பிறகு சித்திரை ஒன்றாம் தேதிதான் தமிழ் புத்தாண்டு என்று எல்லா கோயில்களின் மூலம் பஜனைகள் பூசைகள் செய்யப்பட்டு ஒரு அரசானை காற்றில் பார்க்க விடப்படுகிறது.
1989-ல் ஆட்சிக்கு வந்தாலும் திமுக அரசு ராசீவ்காந்தி கொலையோடு சம்பந்தம் இல்லாமல் சம்பந்தப் படுத்தி அந்த ஆட்சி கலைக்கப்படுகிறது.
பின் 1996-ல் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறார், 2000-ல் அதிமுக ஆட்சி, பின்னர் மீண்டும் 2006-ல் திமுகா ஆட்சிக்கு வரும் போது தான் மீண்டும் இந்த தமிழ் புத்தாண்டு பிரச்சனை வெளியே வந்து,
அந்த ஆட்சி காலத்தில் இனி திருவள்ளுவர் ஆண்டே எல்லா நிலைகளிலும் பயன் படுத்தப்படும் என்று மீண்டும் அரசானை பிறபிக்கப்படுகிறது.
அதற்கு பின் 2011-ல் ஆட்சிக்கு வரும் ஜெயலலிதா இனி திருவள்ளுவர் ஆண்டு செல்லாது, மீண்டும் சித்திரை முதல் தேதியே தமிழ் புத்தாண்டு என்று அறிவிக்கிறார்.
.
1971-ல் கருணாநிதி திருவள்ளுவர் ஆண்டே அதிகாரப்பூர்வமான தமிழக அரசின் நாட்காட்டி என் அறிவித்த நாள் முதல், எல்லா அரசாங்க கோப்புகளிலும், இரண்டு தேதிகள் குறிப்பிடப்படும்,
1. ஒன்று 1582-முதல் உலகம் எங்கும் பயன்படுத்தப்படும் கிரிகோரியன் காலேண்டர் எனப்படும் உலக வழக்கில் உள்ள தேதி
2. இரணடாவது தேதி திருவள்ளுவர் ஆண்டு என்ற தமிழர் நாட்காட்டி தேதி
3. அந்த தேதி தை முதல் மார்கழி வரை உள்ள பன்னிரண்டு மாதங்களையும் வருட எண்ணிக்கை கிபி ஆண்டை விட 30 வருடம் அதிகமாகவும் இருக்கும்.
4. உதாரணமாக இந்த ஆண்டு 2017 என்றால் திருவள்ளுவர் ஆண்டு 2047 என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
இது எல்லோரும் அறிந்த வரலாறு, இதில் ஜெயலலிதாவின் புரட்டு என்ன என்று பார்ப்போம்.
2011-ல் திருவள்ளுவர் ஆண்டு செல்லாது இனி தமிழக மக்கள் சித்திரை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக கொண்டாடவேண்டும் என்று அறிவித்த ஜெயலலிதா,
அதன் பின் தான் உயிரடன் இருந்த 2016 வரை அதாவது சுமார் ஆறு ஆண்டுகள், அரசாங்க கோப்புகளில், திருவள்ளுவர் ஆண்டை தான் பயன்படுத்தினார், கலியுக (அ) விக்கிரம (அ) சாலிவாகன ஆண்டு முறையை அரசாங்க கோப்புகளில் பயன்படுத்தவில்லை.
குறைந்த பட்சம் திருவள்ளுவர் ஆண்டை பயன்படுத்துவதை நிறுத்தக் கூடயில்லை.
இப்போது படத்தை பாருங்கள், அதில் இரண்டு அரசாணைகள் உள்ளன, அந்த ஆணைகள் எதைப் பற்றியது என்பது நமக்கு முக்கியமில்லை
இந்த இரண்டு அரசாங்க ஆணைகளில் உள்ள தேதிகளை கவனியுங்கள்
12.01.2012 - தேதி, அதாவது மார்கழி 26, அன்று திருவள்ளுவர் ஆண்டு - 2042
அதே போல
25.01.2012 - தேதி, அதாவது தை 11, அன்று திருவள்ளுவர் ஆண்டு - 2043
அதாவது 15.01.2012, அன்று தை முதல் நாளில், திருவள்ளுவர் ஆண்டு – 2042 முடிந்து திருவள்ளுவர் ஆண்டு – 2043 தொடங்குகிறது.
அதாவது 2012-ல் ஜெயலலிதாவின் தமிழக அரசின் கணக்குப் படி புத்தாண்டு, தை முதல் நாள் தான் வருது.
இப்போது கேள்வி என்னவென்றால்...
"இனி சித்திரை முதல் தேதியே தமிழ் புத்தாண்டு" என்று ஜெயலலிதா வெளியிட்ட அரசானை
1. வேடிக்கைகாக வெளியிடப்பட்டதா?
அல்லது
2. தமிழனை மடையன் இது எல்லாம் அவன் மரமண்டைக்கு புரியாது என்ற எண்ணத்தில் வெளியிடப்பட்டதா?

2 comments:

  1. இதற்கு இரண்டு தீர்வுகள் மட்டுமே உள்ளன.
    1. திருவள்ளுவர் தினம் சித்திரை 1க்கு மாற்றப்பட வேண்டும்.
    2. தை புத்தாண்டு தை 1க்கு மாற்றப்பட வேண்டும்.

    ReplyDelete
  2. அருமை அந்த லிங்க் திறக்க மறுக்கிறதே! மறுபதிவு செய்ய முடியுமா?

    ReplyDelete

Book Wrapper

இந்த நூலை  வாங்க  விரும்பினால்  இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்     விலை ரூ.200 மட்டுமே