Sunday, August 27, 2017

அமரகோசம் - விநாயகர்


இந்த விநாயக சதுர்த்திக்கு வெறும் ஒரு வேடிக்கை பதிவு மட்டுமே போதும் என்று தான் தேவமைந்தன் பிறந்த நாள் பதிவை போட்டேன். இப்போது வேறு வழியில்லை, சீரியசான பதிவு போட்டும் தான் ஆகவேண்டும்

நேற்று பக்தாள் டீமில் உள்ள ஒருவர், பிள்ளையார் ஒன்றும் புத்த கடவுள் அல்ல, என்று காட்டமாக எழுதியிருந்தாராம், வேறு ஒரு நண்பரிடம் ScreenShot வாங்கி தான் பார்த்தேன், நான் அவர் பக்கத்தை பார்க்க முடியாது, நம் மீது அவருக்கு அவ்வளவு அன்பு.

அந்த பதிவில் விநாயகர் புத்த கடவுள் எல்லாம் கிடையாது, நாந்திகளை கேட்டால் அயோத்திதாசர் சொன்னார் என்று சொல்கிறார்கள், அயோத்திதாசர் எந்த துறை வல்லுனரும் கிடையாது, என்றெல்லாம் காட்டமாக எழுதியிருந்தார். பதிவு போட்டவர் எந்த துறை வல்லுநர் என்று அவருக்கே வெளிச்சம், குறைந்தபட்சம் அயோத்திதாசர் எத்தனை நூல்கள் எழுதிஉள்ளார் என்றாவது தெரியுமா என்பதும் தெரியவில்லை

இது போக அருமையாக ஒரு புது வரலாறை வேறு அவர் கண்டுபிடித்திருந்தார்,

புத்த மதம் நகரங்களில் இருந்தது. இந்து மதம் தலைமையிடம் என்று எதுவும் இல்லாமல் கிராமங்களில் இருந்தது, அதனால் தான் இஸ்லாமியர்கள் இந்தியா வந்த போது நகரங்களில் இருந்த புத்த மதம் அழிக்கப்பட்டது, கிராமங்களில் பார்பன பூசாரிகளால் இந்துமதம் அமைதியாக வைக்கப்பட்டு காப்பாற்றப்பட்டது என்று சொல்லிருந்தார். ஒருவேளை சோமநாதபுரம் கோயில் புத்த கோயில் என்பதால் தான் இஸ்லாமியர்கள் 17முறை வந்து இடித்தார்கள் போல

அதற்கு ஒரு ஆங்கில புத்தகத்தை வேறு ஆதாரமாக காட்டியிருந்தார், உண்மையில் அந்த புத்தக ஆசிரியரால் சொல்லப்பட்டது, நாலந்தா ஒரு கல்வி கூடம் என்பது தெரியாமல் வழிபாட்டு இடம் என்று என்று நினைத்து இஸ்லாமியர் இடித்துவிட்டார்கள் என்ற ஒரே ஒரு வரி மட்டும் தான்

இறுதியாக நான்காம் நூற்றாண்டை சேர்ந்த அமரகோசம் என்ற நூல் கணேசனுடைய எட்டு பெயர்களை சொல்கிறது, எனவே கணேசர் பல நூற்றாண்டுகளாக இந்து கடவுளாக தான் இருந்துவருகிறார், அவரை புத்த மத்ததில் இருந்து எடுத்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று முடித்திருந்தார்.

இந்த முடிவு தான் உச்சகட்ட காமடி.

இதை, “நுழலும் தன் வாயால் கெடும்” என்ற தமிழ் பழமொழிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக வைத்து கொள்ளலாம்

அந்த பதிவரும் அவரது அடிப்பொடி ஆழ்வார்களும், அமரகோசம் என்பது ஒரு புராண நூல் என்று நினைத்துகொண்டார்கள் போல, அரைகுறையாக விக்கியில் படித்து பதிவு போட்டால் இப்படித்தான்
  1. முதலில் அமரகோசம் என்பது ஒரு நூல் அல்ல, அது ஒரு சமஸ்கிருத அகராதி – அதாவது Thesarus or Dictionary
  2. அந்த அகராதியை எழுதியவர் அமரசிம்கா
  3. இந்த அமரசிம்கா ஒரு மகாயான புத்தமத துறவி,
  4. மகாயான காலத்தில் புத்த நூல்கள் பாலி மொழியிலிருந்து சமஸ்கிருத மொழிக்கு மாற்றப்பட்டது
  5. இந்த நூலில், இன்று இந்து கடவுள்கள் என்று நாம் நினைக்கும், கணேசன் பெயர் உட்பட, பல லட்சுமிகள், குபேரன், என இன்னும் பல புத்த கடவுள்களின் பெயர்களும் அந்தபெயருக்கு உண்டான பொருளும் சொல்லப்பட்டுள்ளது
  6. இந்த நூலின் கடவுள்களை பற்றிய பகுதியின் முதல் பாடல் எது தெரியுமா (பாடல் எண் 1.1.30)

“”சா சாக்கியசிம்ஹா சர்வார்த்த சித்தார்த்தா ஸௌத்தோடநிஷச் சாஹ்
கௌத்தமஸ் சாரக பந்து மாயாதேவியுட் ஆஷா சாஹ்”
     7. அந்த சமஸ்கிருத பாடலின் வரிவடிவத்தை தமிழில் கொடுத்துள்ளேன், தமிழில் அர்த்தம் எல்லாம் சொல்லவேண்டாம் என்று நினைக்கிறன், நண்பர்களுக்கு எளிதில் விளங்கும்
   8. ஆக மொத்தத்தில் பதிவர் அப்பன் கணேசன் குதிருக்குள்ளே இல்லை என்று அவரே ஒப்புக்கொண்டுவிட்டார்.

1 comment:

  1. நம்முடைய. எழுத்துக்கள்அவாள் எழுத்துக்களை மறுப்பதாகவே மட்டும் இருக்கிறது. இனி நமது பேச்சும் எழுத்தும் அவாள் புராண இதிகாசவேதஙகளைப் பற்றியமறுப்புகளாக இருக்கவேண்டும்.அவாள் பதிலளிக்கவேண்டும். Offense is the beat defense.

    ReplyDelete

Book Wrapper

இந்த நூலை  வாங்க  விரும்பினால்  இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்     விலை ரூ.200 மட்டுமே