ஹிந்து என்ற சொல்லின் மூலம் எது என்று கேட்டால் பலர் கூறும் பதில் பாரசீகர்கள், அரபியர்கள் சிந்து என்ற நதியின் பெயரை சொல்ல தெரியாமல் S ஒலியை H என்று மாற்றி ஒலித்ததால் சிந்து என்ற சொல் ஹிந்து இந்து என்று மாறி விட்டது என்பார்கள்.
உண்மையில் மதத்தின் பெயரை சனாதன மதம் என்று சொன்னால் 4 வருண சாதி அடுக்கு நேரடியாக வெளிப்படும் என்று அஞ்சியே உண்மையான அர்த்தம் தெரியாமல் ஹிந்து என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
குறைந்த பட்சம், கிரேக்கர் S ஒலியை I என்று மாற்றி ஒலித்ததால் Sindu என்பதை Indus என மாற்றி India என்று அழைத்ததை ஒப்பு கொள்ள முடியும் ஆனால் ஹிந்து என்ற வார்த்தைக்கும், சிந்து நதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
பாரசீகர்கள் அரபியர்கள் இஸ்லாத்துக்கு மாறிய பின் முஸ்லீம் அல்லாத இந்திய நாட்டவரை குறிக்க பயன் படுத்திய சொல்லே ஹிந்து . 1964-ல் இந்தியாவில் லக்னோ-ல் பதிப்பிக்கப்பட்ட அகராதியின் படி , அந்த சொல்லுக்கு பாரசீக மொழியில் அர்த்தம் என்னவென்றால், சோர் (திருடன்), டாகு (வழிப்பறி கொள்ளையன்), குலாம் (அடிமை), என்பதாகும்.
துருக்கிய மொழியில் சோரே, ராஹசான் லுடேரா (திருடன்), பார்டா (வேலைக்காரன்), காலா (கருப்பு), சியாபம் (சியாமளம், கருப்பு)
இவையே துருக்கிய மற்றும் பாரசீக மொழியில் ஹிந்து என்ற சொல்லுக்குக்கான அர்த்தம்.
ஒரு பாரசீக நூலின் பெயரே ஹிந்து-ஈ-பாலக் அதன் அர்த்தம் கருப்பு வானம்
பாரசீகர்களுக்கு ஸ் ஒலி வரவில்லை என்பது சுத்த பொய், அதற்க்கு அவர்களின் வேறு சொற்களே ஆதாரம்,
சியா, சன்னி, சரியத், போன்ற இஸ்லாம் சம்பந்தப்பட்ட சொற்கள், சிர்த்தார்(தளபதி), சாஹாதத்(வீரமரணம்), சாயிர் (சிங்கம்), சாயர்(புலவர்), என்று இன்னும் பல சொற்களை அடுக்கிக்கொண்டே போகலாம், ஆக பாரசீகர்களுக்கு ஸ் ஒலி வரவில்லை என்பது சுத்த பொய். பஞ்சாப் என்பதே பாரசீகம் தான் பாஞ்ச (ஐந்து) அப்பு (நீர், நதி)
இன்னும் நம்பிக்கை வரவில்லை என்றால் ஆப்கானிஸ்தானில் உள்ள ஹிந்து குஷ் மலைக்கு ஏன் அந்த பெயர் என்று பாப்போம், குஷ் என்றால் தண்டித்தல். அந்த மலையை தாண்ட நினைத்து அதை கடக்க முயன்ற ஹிந்துக்களை தன் குளிராலும், பனியாலும் கொன்ற மலை என்பதால் அதற்கு ஹிந்து குஷ் மலை என்று பெயர்.
இதே போல சம்ஸ்கிருதத்தில் பிற மதத்தினரை மிலேச்சர் என்ற சொல்லும் உண்டு
ஆனால் அவர்கள் தங்களை மிலேச்சர் என்று சொல்லிக் கொள்வது இல்லை
நாம் தான் நம்மை ஹிந்துக்கள் என்று சொல்லிக் கொள்கிறோம்
சொந்தமாக உங்கள் மதத்துக்கு ஒரு பேர் வைக்க கூட அறிவில்லாத பார்ப்பனர் தானா உங்கள் மத தலைவர்கள்
இதில் அர்த்தமுள்ள ஹிந்து மதம் என்று ஒரு அறிவாளி புத்தகம் எழுத, அதை பிடித்து கொண்டு ஹிந்து என்றால் மதம் அல்ல அது ஒருவாழ்க்கை முறை, நாசா செயற்கைகோள் திருநள்ளாறில் நின்று பயணிகளை இறக்கியேற்றி செல்லும் என்று வேறு சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் அலைகிறது.
நன்றாக உரக்க சொல்லுங்கள் ஹிந்து என்றால், திருடன், வழிப்பறி கொள்ளையன், அடிமை, வேலைக்காரன், கருப்பு, என்று தான் அர்த்தம்
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் படிக்கவும். எதுவுமே படிக்க மாட்டேன் விமர்சனம் செய்வேன் என்று சொல்வது என்ன மாதிரியான கருத்து விவாதம்.
ReplyDeleteஅய்யா, இங்கு இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் வேதங்கள் பற்றியோ எதுவும் சொல்ல வில்லை
Deleteபாரசீகர்கள் நமை ஹிந்து என்று அழைக்கிறார்கள் அதன் அர்த்தம் இதான் என்று சொல்லியிருக்கிறோம்
இதே போல சம்ஸ்கிருதத்தில் பிற மதத்தினரை மிலேச்சர் என்ற சொல்லும் உண்டு
ஆனால் அவர்கள் தங்களை மிலேச்சர் என்று சொல்லிக் கொள்வது இல்லை
இது மட்டுமே இங்கே விவாத பொருள்
இதில் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் எல்லாம் என் வருகிறது.
பாரசீக மொழியில் ஏன் உங்கள் மதத்தின் பெயரை சொல்கிறீர்கள் சமஸ்கிருதத்தில் வேறு நல்ல பெயரில் அழையுங்கள் என்று தான் சொல்கிறோம்
This comment has been removed by the author.
ReplyDeleteசூப்பர் பாஸ்... நிறைய தகவல்கள்.. நிறைய விளக்கங்கள்..
ReplyDeleteநன்றி நண்பரே
Delete