Saturday, August 12, 2017

திருப்பதி கோயில் – அதிகம் தெரியாத உண்மைகளும் வரலாறும் – பகுதி - 5

திருப்பதி கோயில் உண்மையில் ஒரு புத்த மத விகாரம் (புத்தகோயில்), என்றோம் பின் முதல் நான்கு பகுதிகளில், அது தொடர்பான
1.    இந்து மத பின்னணி
2.    புராண இதிகாச கதைகளையும்
3.    இலக்கியங்களில் சான்றுகளையும்,
4.    வரலாற்று கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும்
5.    வெளிநாட்டு யாத்திரிகர்களின் பயன குறிப்புகளையும் ஆராய்ந்தோம்
6. அதன் மூலம் திருப்பதி மலை, பொட்டல்கா என்று யுவான்சாங்-ஆல் குறிப்பிடப்பட்டதையும்
7.    அந்த பொட்டல்கா, புல்லி என்ற களப்பிற மன்னனின் பெயரால் புல்லிக்குன்றம், என்று அழைக்கப்படுவதையும் அகநானூறு பாடல்கள் மூலம் அறிந்தோம்     

அவை மூலம் நாம் இதுவரை அறிந்தது, ராமானுஜர் காலத்துக்கு முன் திருப்பதி ஒரு பெருமாள் கோயில் அல்ல என்பது மட்டுமன்றி அது ஒரு புத்தர் கோயிலாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்றும் உணர்ந்தோம்,

மேலும் நம் வாதத்திற்கு வலுசேர்க்க என்ன சான்றுகள் உள்ளன என்று பார்ப்போம்   
இந்திய வரலாற்றில் நாம் கூர்ந்து கவனித்தால், ஒன்று புலப்படும், குப்தர்கள் காலம் வரை இந்தியாவில் உருவவழிபாடு இருந்தற்கு எந்த சான்றுகளும் கிடையாது. அசோகர் காலத்தில் கூட அவர் ஸ்தூபிகள், மற்றும் ஸ்டுப்பா என அழைக்கப்படும் புத்தவிகாரம் தான் கட்டினார், எங்கும் புத்தர் சிலைகள் கூட  கிடையாது.

சிலை வைத்து வழிபடும் வழக்கம் கிரேக்கர்களின் முறை, கிமு300-ல் அலக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து, பின் கிரேக்கம் திரும்பும் போது, இன்றைய ஆப்கானிஸ்தான், பகுதியில் செலுக்கஸ் நிகேடார் என்ற தன தளபதியை விட்டு செல்கிறான், அவன் மகளை சந்திரகுப்த மௌரியன் மணந்த வரலாறும் உண்டு.

இந்த செலுக்கஸ் நிகேடார், வழி வந்தவர்கள் தான் பிற்காலத்தில் குஷானர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தலைநகரம், பாமியான், பெஷாவர், தக்ஷசீலம், மதுரா போன்ற இடங்களில் இருந்தது, இவர்கள், இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வடக்கு சீனா மற்றும் மத்திய இந்தியா வரை ஆண்டுவந்தார்கள் காலம் கிபி 30 - 230   


இவர்களில் கனிஷ்கன் என்ற மண்ணின் காலத்தில் தான் புத்தருக்கு முதலில் சிலைவடிவ வழிபடும் முறை தொடங்குகிறது. இதன் பின் தான் புத்தருக்கு பிரம்மாண்டமான சிலைகள் உருவாக்கப்படுகிறது.   

இந்த குஷானர்கள் உருவாக்கிய பல சிலைகள் தான், ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியான் மலைகளில், தாலிபான்களால் சில வருடங்களுக்கு முன் தகர்க்கப்பட்டன         

இவர்கள் உருவாகிய புத்தரின் வடிவங்கள் மூன்று:
1.    மைத்ரேயா(புத்தரின் கடைசி அவதாரம்)
2.    அவலோகிதா (பத்மபாணி – தாமரை அணிந்தவன்)
3.    மஞ்சுஸ்ரீ (குமாரபுத்தன்)

பிற்காலத்தில் மகாயான புத்தம் பிறந்தபோது, இந்த மூன்று வடிவங்களை  எட்டு வடிவங்களாக மாற்றிவிட்டார்கள்

1.   அவலோகிதீஸ்வரா (பத்மபாணி – தாமரை அணிந்தவன்)
2.    மஞ்சுஸ்ரீ (குமாரபுத்தா – சிறுவன் வடிவில் புத்தர்)
3.    வஜ்ரபாணி (வஜ்ராயுதம் தாங்கியவன்)
4.   சமந்தபத்ரா
5.   ஆகாஷ்கர்பா
6.   மகாஸ்தானப்ராப்தா
7.   பைஷ்ஜியராஜா
8. மைத்ரேயா (இவரே உலகம் அழியும் போது வரக்கூடிய புத்தரின் கடைசி அவதாரம்)

இந்த புத்தரின் 8 அவதார கதைகள் மற்றும் ஜைன மதத்தில் உள்ள நரன், நாராயணன், வாசுதேவன், பிரதிவாசுதேவன் கதைகள் எல்லாம் மொத்தாமாக கலந்து செய்த கலவை தான் விஷ்ணுவின் பத்து அவதார கதைகள்.

மேலே சொன்ன 8 வடிவங்களில் அவலோகிதீஸ்வரா வடிவம் இந்தியாவில், கிபி நாலாம் நூற்றாண்டில்  மிகவும் பிரபலம். நீங்கள் அஜந்தா, எல்லோரா ஒவிங்களில் பார்ப்பது இந்த அவலோகிதீஸ்வரா (எ) பத்மபாணி உருவமே.

இந்த அவலோகிதீஸ்வரா சிலைகள் எப்போதுமே, ஒரு செல்வ செழிப்புள்ள நபராகவே சித்தரிக்கப்படும் (புத்தராக மாறும்முன் முன் சித்தார்த்தன் ஒரு அரசகுமாரன்) இந்த அவலோகிதீஸ்வரர் குபேரனின் இன்னொரு வடிவம் என்று சொல்லப்படுகிறது.       

அம்பிகை சிலை
கஜலட்சுமி சிலை
பொதுவாகவே இந்த அவலோகிதீஸ்வரா சிலைகள் தனியாக நிற்கும் வடிவில் தான் காணப்படும், சில நேரங்களில் ஸ்ரீமஹாதேவி(லட்சுமி)-யுடன் காணப்படும். என்ன ஸ்ரீமஹாதேவி(லட்சுமி) புத்த கடவுளா, என்று கேட்டால் லட்சுமி மட்டுமல்ல, சரஸ்வதியும் புத்த கடவுளே. அம்பிகை எனப்படும் பார்வதியும்  ஜைன கடவுளே   

 
லஜ்ஜா கெளரி சிலை
மத்தய பிரதேசத்தில் உள்ள பர்ஹூட் ஸ்டுப்பா-வில் உள்ள சிலைகளை
பார்த்தால், அவற்றில் கஜலட்சுமி, அம்பிகை (எ) பார்வதியும், லஜ்ஜா கெளரி, என்னும் ஆதி பராசக்தியின் மூலவடிவம் என்று எல்லோரையும் காணலாம். இவர்கள் புத்த மதத்தில் யக்ஷிகள் எனப்படும் குறுந்தெய்வங்கள், பின்காலத்தில் இந்துமதத்தில் பெருந்தெய்வங்களாக மாறியவர்கள்.         
  
இந்த அவலோகிதீஸ்வரர் யார் என்று கேட்டால், உலகில் மனிதனாக பிறக்கும் எல்லா உயிரும், புத்தரிடமிருந்தே வருகிறது, அப்படி பிறந்த ஒருவன், புத்தரின் கொள்கைகள் படி வாழ்ந்து, அதனால் போதிசத்துவன் ஆகிறான், அவனே பின்னாளில், நிர்வாணநிலை அடைந்து புத்தரோடு சேர்ந்து புத்தனாகவே மாறிவிடுகிறான். என்பதே புத்தமதத்தின் முக்கிய கோட்பாடு, அந்த கோட்பாட்டின் வெளிப்பாடே இந்த அவலோகிதீஸ்வரர்.  

இதை நகல் எடுத்து தான், பின்னாளில் ஆதிசங்கரன், ஆதியில் ஜீவாத்மா பரமாத்மாவோடு தான் இருந்தது, பூமியில் பிறந்தபின் மாயை காரணமாக, ஜீவாத்மா பரமாத்மா வேறு என்று குழம்புகிறது, பூமியில் மனித வடிவில் பிறந்த ஜீவாத்மா தான் பிறந்த வர்ணத்துக்கான தர்மம்படி சரியாகா எல்லா வேல்களையும் செய்தால், படிப்படியாக முன்னேறி, இறுதி பிறப்பாக பார்பனாக பிறந்து முக்தி அடைந்து பரமாத்மாவோடு சேர்ந்துவிடுகிறது என்று சொல்லி தனது  மாயாவாதம்  என்ற அத்வைதம் என்ற கொள்கைப்படி இன்றைய வடிவமான இந்துமதம் என்று சொல்லப்படும் சனாதன மதத்தை உருவாக்கினான். மாயவாததிற்கு மூலமே மகாயான புத்தமதத்தின் சூன்யவாத தத்துவமே.           


பிகாரில் கிடைத்த அவலோகிதீஸ்வரர் சிலை 

திருப்பதி விஷ்ணு கோயிலா என்ற வாதத்தில் ஏன் இந்த அவலோகிதீஸ்வரர் பற்றி இவ்வளவு விளக்கம் என்று கேட்டால், இந்த அவலோகிதீஸ்வரர் சிலைக்கும் விஷ்ணு சிலைக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது, ஒரே வித்தியாசம், ஆயுதம் வைத்திருந்தால் விஷ்ணு இல்லையென்றால் அவலோகிதீஸ்வரர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்

ஏற்கனவே ராமானுஜர், திருப்பதி கோயிலில் இருக்கும் பெருமாளிடம் ஆயுதம் இல்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். யுவான்சாங் போட்டல்காவில் இருந்தவர் அவலோகிதீஸ்வரர் தான் என்றும் சொல்லிவிட்டார்.

மேலே சொன்ன பொருள்களை எடுத்துகொண்டால் அவலோகிதீஸ்வரர் லட்சுமியுடன் இருப்பார் என்றும் தெரிகிறது. 


மற்றும் ஒரு சேதி என்னவென்றால், களப்பிற மன்னனான புல்லியின் மலை இது என்பது, களப்பிற மன்னர்கள் புத்தமதத்தை சேர்ந்தர்வர்கள் 

பாகியான் இந்தியா வந்த போது சித்திரம்
இந்த களப்பிரர் காலம் கிபி200-500 வரை. யுவன்சாங் இந்தியா வந்தது கிபி600. அவருக்கு முன் சீன தேசத்தில் இருந்து வந்தவர் பாகியான்(Fa-hein) அவர் வந்த காலகட்டம் கிபி350. இந்த காலகட்டத்தில் இந்தியா வந்த இவர் தான் பார்த்த பல புத்த கோயில்கள் பற்றி சொல்லும் போது

இந்தியாவில் பூரி நகரில் புத்தரை ஜெகநாதன் (உலகின் தலைவன்) என்ற கோயிலில் ஒரு ரதத்தில் வைத்து ஊர்வலமாக கொண்டு வந்ததை சொல்கிறார்

பாகியான் மட்டுமல்ல யுவான்சாங்கும் பல புத்தர் கோயில்களில் புத்தரை ஒரு ரதத்தில் வைத்து ஊர்வலமாக கொண்டு வந்ததை சொல்கிறார்கள்
           
இதையெல்லாம் தாண்டி ராமனுஜர் ஏன் திருப்பதியை தேர்ந்தெடுத்தார் என்றால் அப்போது சுங்கம் தவிர்த்த சோழன் என்று சொல்லப்படும் குலோத்துங்கன் தென்னிந்தியாவை ஆண்டு வந்தான். ராமானுஜர் முதலில் மாற்ற முயற்சி செய்தது திருச்சானூர் புத்த கோயிலைத்தான், ஆனால் அந்த கோயில் மலைக்கு கீழே சமதளமான இடத்தில் இருந்ததால் அதிகாரிகள் அதை சிவன் கோயிலாக மாற்ற முயன்று கொண்டிருந்தனர்.

சோழர்கள் காலத்தில் ஏன் இப்படி எல்லா புத்த கோயில்களையும் சிவன் கோயில் அல்லது விஷ்ணு கோயிலாக மாற்றினார்கள் என்றால். இரண்டு காரணங்கள் உண்டு


முதல் காரணம், தன் தந்தை உயிருடன் இருந்தபோது, ராஜராஜன் ஈழத்துக்கு போர் செய்ய சென்றபோது அங்கே இருந்த பெரிய பெரிய புத்தர் கோயில்களை பார்த்து அதே போல சிவனுக்கு ஒரு பெரிய கோயில் கட்டவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 

இரண்டாம் காரணம் ராஜராஜன் அரசன் ஆனபின் ஏற்பட்ட தனி சோகம் ஒன்று உண்டு


எல்லோருக்கும் தெரிந்த ராஜராஜ சோழனுக்கு, ராஜேந்திரனும் குந்தவையும் மட்டுமே பிள்ளைகள், உண்மையில் அவனுக்கு மூன்று பிள்ளைகள், ஆனால் ராஜராஜ சோழனுக்கு சந்திரமல்லி என்ற பெயரில் மற்றுமொரு மகள் உண்டு அவள் ஒரு ஈழ நாட்டு பௌத்த இளவரசனை காதலித்தாள் அந்த காதல் பிரச்சனையில், காதலன் எதிர்பாராமல் கொல்லப்பட, தந்தை ராஜராஜன் தான் அந்த கொலைக்கு  காரணம் என்று  ராஜராஜன் மேல் கோபம் கொண்டு தந்தையை பிரிந்த சந்திரமல்லி நாகப்பட்டினம் புத்தவிகாரத்தில் புத்த சந்நியாசியாக மாறி தனது பெயரை மாதேவடிகள் என்று மாற்றிகொண்டாள்

சோழர்கள் புத்த மத அழிப்பு வேலைகளுக்கு இதுவும் ஒரு காரணமே.

மேலே சொன்ன திருச்சானூர் கோயிலை வைணவ கோயிலாக மாற்றமுடியாத ராமானுஜர் அதற்கு அருகில் வேங்கடமலை மேலே உள்ள கோயிலை  மாற்ற முயற்சி செய்து மாற்றியது தான் திருப்பதி கோயில்.

அவலோகிதீஸ்வரா சிலைகள் ஆயுதம் இல்லாமல் இருக்கும் என்பதும், திருப்பதி விஷ்ணுவுக்கும் ஆயுதம் இல்லை எனபதை ராமானுஜரே ஒப்புகொள்வதையும் இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும்,        

திருப்பதி கோயிலில் உள்ள பொருள்களையும் புத்த மத வழிபாட்டு முறைகளையும் நோக்கினால், கீழ் கண்ட பொருள்களை நாம் புரிந்து கொள்ள முடியும்

1.    ராமானுஜர் தன் கடின முயற்சியில் தான் இதை ஒரு பெருமாள் கோயில் என்று நிறுவுகிறார், எனவே அது விஷ்ணு கோயில் அல்ல என்ற சர்ச்சை அப்போதே இருந்தது   
2.    தலையை மொட்டை அடித்துகொள்வது, பார்பனர் முறை அல்ல, இந்துமத முறை அல்ல, புத்த மதத்தில் புனிதமானது இந்த முறை,
3. குடுமி வைப்பது தான் பார்பனமுறை, இந்துமதத்தில், மொட்டியடிப்பது, விதவைகளுக்கும், ஒருவரை அவமானப்படுத்த செய்யப்படும் தண்டனை முறையும் ஆகும், அல்லது ஒருவரின் இறப்பின் துக்கத்தை கடைபிடிக்கும் முறையும் ஆகும்.
4.    இன்னும் சொல்லவேண்டும் என்றால் விஷ்ணு புராணம் (பாகம்3, அதிகாரம்18, பாடல்கள் 53-100) சொல்வது ஒரு முண்டகனை (மொட்டைதலையனை) பாஷாண்டியை நேரில் பார்த்தாலோ, பேசினாலோ அடுத்த 7 பிறவிகளில் எத்தனை தண்டனைகள் கிடைக்கும் என்று விரிவாக சொல்கிறது
5.  திருப்பதி தவிர வேறு எந்த பெருமாள் கோயிலிலும் மொட்டை அடிக்கும் வேண்டுதல் முறை கிடையாது          
6.    எந்த இந்து கோயில்களில் எல்லாம் மொட்டை அடிக்கும் வேண்டுதல் முறை உள்ளதோ அவை எல்லாம் முன்னாளில் ஜைன மற்றும் புத்த கோயில்களே
7.  சீன யாத்திரிகர் பாகியான் சொல்வதுபோல ரதத்தில் கடவுளை வைத்து ஊர்வலம் வருவது புத்த முறை, கடவுளின் ரதயாத்திரை ஏன் இந்துமத முறையாக இருக்கமுடியாது என்றால், வருணாசிரமம் படி மனு சொல்வது 4 வருணத்தாரும் சேர்ந்து ஒரு வேலையை செய்யக்கூடாது, ஒரு தேர் அல்லது ரதம் சுற்றி வரவேண்டும் என்றால் பிராமணன் முதல் சூத்திரன் வரை எல்லோரும் சேர்ந்துதான் அந்த வேலையை செய்யவேண்டும், அதனால் ரதயாத்திரை இந்துமத முறையாக இருக்கமுடியாது.   
8.  திருப்பதி கோயிலில் இன்றும் பிரமோற்சவம் விழாவில் ரதயாத்திரை மிக முக்கியபங்கு வகிக்கிறது    
9.  திருப்பதி கோயில் மட்டுமே ஏகமூர்த்தி ஆதாவது விஷ்ணு தனியே மூல விக்கிரகமாக இருக்கும் கோயில், அவலோகிதீஸ்வரர் தான் தனியே இருப்பார்
10. திருப்பதி கோயிலில் சயன மண்டபம் 18 அடி நீள அகலம் கொண்ட ஒரு சதுர மண்டபம். இந்த மண்டபம் வெளிப்புரம் இருந்து  பார்த்தால் அந்த சுவர் ரொம்ப பழமையானதாகவும் உள்புறம் சென்று பார்த்தால் சற்று புதியதாகவும் இருக்கும், உண்மையில் பழைய சுவற்றில், உள்ள சிற்பங்களையும் கல்வெட்டுகளையும் மறைக்க உள்புறம் புதிய சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் எந்த சிற்பவேலைப்பாடுகளும் இருக்காது.
11.  எல்லா கோயில்களிலும், கொடிமரம் மற்றும் பலிபீடம், உள்பிரகாரத்தில் தான் இருக்கும், ஆனால் திருப்பதி கோயிலில் மட்டும் கொடிமரம் மற்றும் பலிபீடம் வெளியே இருக்கும், ஏனெனில் மலை மேலே புத்த கோயிலில் உள்ளே கொடிமரம் மற்றும் பலிபீடம் வைக்க இடமும் இல்லை வசதியும் இல்லை

இவையெல்லாம் போக இன்றும் திருப்பதி கோயிலில் உள்ள கடவுளை அந்த ஊர்மக்கள் மலையப்ப சாமி என்றுதான் அழைக்கிறார்கள், அது ஏன் என்று கேட்டால் எந்த வைணவ பார்ப்பானும் பதில் சொல்லமாட்டார்கள்.


அந்த கடவுளுக்கு ஏன் மலையப்ப சாமி என்று பெயர் என்பதற்கு, இலங்கை மாஹாவமிசம் நூல் பதில் சொல்கிறது.

இலங்கையில் புத்த துறவிகள், தாக்கப்பட்டபோது, அவர்கள் ரோகன மலையில் போய் ஒளிந்துகொள்கின்றனர், அவர்களை காப்பாற்ற குலசேகரன் என்ற ஒரு தமிழ் அரசன் தன் தளபதியான மலையப்பரை அனுப்புகிறான்.

மலையப்பர் அந்த புத்த துறவிகளுக்கு உதவியதோடு, பின்னர் தானும் ஒரு புத்த துறவியாக மாறிவிடுகிறார். அவர் இறந்த பின், மன்னன் குலசேகரன் அவருக்கு தமிழ்நாட்டில் ஒரு மலையில் கோயில் கட்டுகிறான். அந்த தளபதியின் மீது கொண்ட அன்பால், அந்த கோயிலின், வாசல் படியில் தன்பெயரை பொறிக்கிறான்.

இன்றும் திருப்பதி கோயிலின் கடவுளின் பெயர் மலையப்பசாமி தான். அந்த கோயிலின் கர்ப்பகிருக வாயிலில் உள்ள படியின் பெயரும் குலசேகரன் படிதான்.

இத்துடன் திருப்பதி கோயில் அதிகம் தெரியாத உண்மைகளும் வரலாறும் முடிவடைகிறது.

உபரி செய்திகள் 

முதலில் திருப்பதி கோயிலை கைப்பற்றிய ராமானுஜர், இந்த குலசேகரன் படிக்கான காரணம் என்று சொல்வது,  சேரநாட்டு மன்னன் திடவிரதனின் மகன், குலசேகரன், விஷ்ணு மீது கொண்ட பக்தியில், விஷ்ணு பெயரை சொல்லிக்கொண்டே நாகங்கள் நிறைந்த பானையில் கைவிட்டான் எந்த பாம்பும் அவனை ஒன்றும் செய்யவில்லை என்று ஒரு  கதையை சொல்லிவிட்டு அவன் நினைவாக அந்த படிகட்டு குலசேகரன் படி என்று அழைக்கப்படுகிறது  என்று முடித்தார்.

முதலாம் குலோத்துங்க சோழன் இறந்தபின் சோழ நாடு திரும்பி,  பின்னர் ஸ்ரீரங்கம் கோயிலை வைணவ கோயிலாக மாற்றுகிறார். இந்த ஸ்ரீரங்கம் கோயிலிலும் கர்ப்பகிருக வாயிலில் உள்ள படியின் பெயரும் குலசேகரன் படி என்று பெயர் வைக்கிறார்.

இவர்கள் சொல்லும் இந்த குலசேகர ஆழ்வார் எப்போது பிறந்தார் தெரியுமா, 
வேறு எப்போது கிமு.3075-ல் தான், ஆனால் சேரநாட்டை ஆண்டது கி.பி 800-ல். 

இன்றும் திருவிதாங்கூர் மன்னர்கள் தங்களை இந்த ஆழ்வாரின் வாரிசுகள் என்று சொல்லிக்கொள்வார்கள்                                           

இந்த தொடரில் என்னோடு பயணித்த, ஊக்கமளித்த  அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்


Thursday, August 10, 2017

பசு மாடும் சிப்பாய் கலகமும்



இந்த படம் The Last Mogul - Written by William Dalrymple, புத்தகத்தில் 295-ஆம் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.


இந்த புத்தகம் 10 மே மாதம் 1857 சிப்பாய் கலகத்தை பற்றி விரிவாக அலசும் ஒரு வரலாற்று புத்தகம்.


இந்து மற்றும் முஸ்லிம் சிப்பாய்கள் ஆங்கிலேயருக்கு எதிராக மீரட் நகரில் கலகத்தில் ஈடுபட்டு அங்கிருந்து பல குழுவாக புறப்பட்டு, டெல்லியில் இருந்த கடைசி மொகலாய மன்னன், ஜாபர், இரண்டாம் பகதூர் ஷா-விடம் வந்தார்கள்

அவரை தங்கள் மன்னராக ஏற்று கொள்வதாகவும், அவர் தலைமையில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடுவதாகவும் சொன்னார்கள்.

டில்லி வந்த இந்த சிப்பாய்கள் ஜூன் மாதம் செய்த முதல் வேலை 5 இஸ்லாமியரை மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என்று கொன்றது தான்

அப்பகூட இங்கிலீஸ்க்காரனை ஏண்டா மாட்டுக்கறி சாப்பிட்டாய் என்று கொல்ல துப்பில்லை

அவர்கள் பேச்சை கேட்டு, போராட்டத்துக்கு தலைமை தாங்கிய மன்னன், ஜாபர், இரண்டாம் பகதூர் ஷா கடைசியில் ஆங்கிலேயரிடம் வாங்கி கொண்டிருந்த பென்சனும் போய் பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார்

ஏன்டா சிப்பாய் கலகம் என்று சொல்லிவிட்டு அந்த காலத்திலேயும் இங்கிலீஸ்க்காரனை விட்டுட்டு மாடு பின்னாலதான் அலைந்த லூசுங்களா நீங்க......

Extra News: இந்த ஜாபர், இரண்டாம் பகதூர் ஷா, தான் இந்தியாவில் முதல்முதலில் புகைப்பட கருவி மூலம் போட்டா எடுத்துக்கொண்ட முதல் இந்திய மன்னர்

Wednesday, August 9, 2017

வாழ்ந்து கெட்ட ஒரு காவிரிபூம்பட்டின வணிகனின் வரலாறும் – பார்பனரின் புரட்டு கதைகளும்

இந்த நிகழ்ச்சி, தமிழ் நாட்டில் சுமார் கிபி 1000-களில் நடந்தவை,

ராஜராஜனும் ராஜேந்திரனும் சோழமண்டலத்தை ஆண்டு கொண்டிருந்த காலகட்டம் காலம் கி.பி. பதினோராம் நூற்றாண்டு, காவிரிப் பூம்பட்டினம் வணிகர்கள் நிறைந்த ஒரு துறைமுக நகரம்.

சிவநேசர் என்னும் வணிகர் ஞானகலை என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். அந்த வணிகருக்குப் பிள்ளை பிறந்த போது சுவேதவனன் என்று பெயர் வைத்தார்கள்.

சிவநேசர் வணிகர்களிலேயே பெரு வணிகர், அந்த வணிகர்கள் குழுவுக்கு தலைவராகவும் இருந்தார். பெரும்பொருள் திரட்டி மன்னர்களுக்குச் சமமான மாளிகையில் மிகவும் வசதிகளோடும், ஆடம்பரமாகவும் வாழ்ந்து வந்தார். மன்னரும் அவரை மதித்துப் போற்றி வந்தான்.

மகன் சுவேதவணனும் மிகவும் ஆனந்தமாகவே வாழ்ந்து வந்தான். உரிய பருவத்தில் திருமணமும் ஆயிற்று. சுவேதவனனுக்கு ஒரு சகோதரியும் இருந்தாள். சகோதரிக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பின் சுவேதவனனும் சிவகலை என்னும் பெண்ணை மணந்துகொண்டார். ஆனால் அவர்களுக்கு நீண்ட நாட்கள் குழந்தை இல்லாமல் இருந்தது. அதனால் அவர்கள் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்கின்றனர். அந்த குழந்தைக்கு மருதவாணன் என்ற பெயரை வைத்து வளர்கின்றனர்.

தந்தை இறந்தபின் சுவேதணன், வணிகர்களின் தலைவன் ஆகிறான். அவன் மகன், மருதவாணன் ஒரு சுகவாசி எப்போதும் ஊர்சுற்றிக்கொண்டும் தாசிகள் சகவாசமுமாக வாழ்ந்து வந்தான்,

தந்தை சுவேதணனின் வற்புறுத்தல் தாங்காமல், மருதவாணன் இறுதியாக, பெரும் செல்வத்துடன், சுவர்ணதீவு பகுதிக்கு(இன்றைய தாய்லாந்து) வணிகம், செய்ய செல்கிறான்.

இந்த காலகட்டத்தில் கம்போடியா மன்னன் முதலாம் சூர்யவர்மன், தன் எதிரியான தாம்பரலிங்க தேச மன்னனுடன், போராட ராஜேந்திரசோழனின் உதவி கேட்டு தூது அனுப்புகிறான். தாம்பரலிங்க தேச மன்னனுக்கு, ஸ்ரீவிஜய தேசத்து மன்னன் உதவியாக இருக்கிறான், ஸ்ரீவிஜய தேசமே இன்றைய இந்தோனேசியா

அப்போது சோழநாட்டு வணிகர்கள், ஐநூற்றுவர் மற்றும் ஆயிரத்தைநூற்றுவர் என்ற இருகுழுவினராக செயல்பட்டுவந்தனர், சுவேதணன் ஆயிரத்தைநூற்றுவர் குழுவின் தலைவன்.

இந்த இரு வணிககுழுவினரும், ஸ்ரீவிஜய தேசத்தருகே தொடர்ந்து கடற்கொள்ளையரால், தாக்கப்பட்டு வந்தனர். அவர்கள் ஸ்ரீவிஜய தேச மன்னனிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த பலனும் இல்லாமல் போக, ராஜேந்திரசோழனிடம் நேரடியாக சென்று சுவேதணன் தலைமையில் முறையிட்டனர்.

ராஜேந்திரசோழனும், கம்போடியா மன்னன் முதலாம் சூர்யவர்மனுக்கு உதவியும் செய்தது போலவும் இருக்கும், நம் நாட்டு வணிகருக்கு தொல்லை தீர்ந்தது போலவும் இருக்கும் என்று, தெற்காசிய கடல் பகுதிக்கு படையெடுக்க கிபி 1020-ல் முடிவெடுக்கிறார். இந்த போரின் முடிவே ராஜேந்திர சோழனுக்கு கடாரம் கொண்டான் என்ற பட்டதை கொடுத்தது

அப்போது சோழநாட்டில் இருந்த பெரிய துறைமுகம் காவிரிபூம்பட்டினம் மட்டுமே, எனவே ஒரு பெரும் படைக்கான வீர்கள் மற்றும் கப்பல் கட்டும் தொழிலாளிகள், போர் சார்ந்த மற்ற பணியாளர்கள், என்று ஒரு மிகப்பெரிய குடியேற்றம் காவிரிபூம்பட்டினம் துறைமுக நகரில் நடைபெறுகிறது.

அங்கே ஏற்கனவே குடியிருந்த அனைத்து வணிகர்களும் வேறு இடத்துக்கு இடம் மாறும்படி வற்புறுத்தப்படுகிறார்கள். அந்த வணிகர்களும் வேறு வழியின்றி காவிரிபூம்பட்டினத்தை விட்டு வெளியேறுகின்றனர். வணிகர்களின் வெறுப்பு, முழுமையாக சுவேதணன் மீது திரும்பி அவன் தலைமையை ஏற்க மறுகின்றனர்.

எல்லா வணிகரின் வீடுகளும், வீர்கள் தங்க அரசால் கைப் பற்றபடுகிறது. இந்த காலகட்டத்தில் தான் இந்த வணிகர்கள் எல்லாம் தற்போதைய காரைக்குடி பகுதிக்கு குடியேறினர், அவர்கள் அந்த பகுதியை தேர்ந்தெடுக்க காரணம், அங்கே ஆறுகளோ, கடலோ கிடையாது, எதுவம் விளையாது, அரசு அந்த பகுதியை எந்த காலத்திலும் கைப்பற்றவேண்டிய நிலையே வராது என்பதால் தான்.

சுவேதணன், வீடு வாசல் எல்லாம் இழந்து தன் மக்களின் வெறுப்புக்கு ஆளாகி நின்றான். சுவேதணனின் சகோதரி தன் தாயுடன் மற்ற வணிகர்கள் குடியேறிய புதிய பகுதிக்கு சென்று விடுகிறாள். இந்த கலவரத்தில் சுவேதணனின் மனைவியும் இறந்துவிடுகிறாள்

இப்போது சுவேதணனின் ஒரே நம்பிக்கை வணிகம் செய்ய சுவர்ணதீவு சென்ற மகன் மருதவாணன் மட்டுமே, ஆனால் அவனது மகன் சுவர்ணதீவில்(Bankok-இல்) பெண்களுடன் உல்லாசமாக இருந்து எல்லா பணத்தையும் இழந்து, தந்தைக்கு பயந்து தலைமறைவாகிறான்.

ஒரே நேரத்தில், ஊர்த்தலைவன் என்ற பட்டத்தை இழந்து, ஊர் மெச்சிய மரியாதையை இழந்து, சொத்துகளை இழந்து, மனைவியை இழந்து, மகனை இழந்து, அவன் மூலமாக கடைசியாக இருந்த பணத்தையும் இழந்து, தெருவிற்கே வந்துவிட்ட சுவேதணன், கிட்டத்தட்ட பைத்தியமாகி, ஊர் ஊராக கிழிந்த ஆடைகளோடு சுற்றி திரிகிறான். கடைசியாக சென்னை அருகே உள்ள திருவொற்றியூர் வருகிறான், அங்கிருந்த கோயில் வாசலில் எப்போதும் படுத்தே கிடப்பான், எப்போதாவது திடீரென தன பழைய நிலையை நினைத்து பாடல் போல புலம்புவான், யாராவது உணவளித்தால் உண்பான். பின் ஒருநாள் இறந்தும் போனான்.

சுவேதணன், யாரோ உண்ண கொடுத்த கரும்பை, கடைசிவரை உண்ணாமல் கையிலேயே வைத்திருந்ததை யாரோ பார்பனன், சுவேதணனை புதைத்த இடத்தில் ஒரு சிறு கோயிலை கட்டி, இவர் யார் தெரியுமா? காவிரிபூம்பட்டினத்தில் இருந்த வந்தவர், எல்லா செல்வமும் வேண்டாம் என்று ஈசன் அருள் நாடி சித்தரானவர், பட்டினத்தில் இருந்து வந்தவர் என்பதால் நாம் இவரை பட்டினத்தார் என்று அழைக்கவேண்டும் அவரது புராணம் பின்வருமாறு என்று கூறினான். 

//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
அந்த கதை

செல்வத்துக்கு அதிபதியான குபேரனுக்கு ஞானம் கிட்ட வேண்டியும், மண்ணுலக இன்பங்களை அனுபவிக்க வேண்டியும் ஈசனை வேண்ட அவ்வாறே மண்ணுலகில் பிறக்க அருளுகிறார் ஈசன். ஆனால் குபேரனாயிற்றே. செல்வத்துக்கு அதிபதி அல்லவா? ஏழைக்குடும்பத்திலே பிறக்க முடியாது என்பதால் காவிரிப் பூம்பட்டினத்திலுள்ள மிகப் பெரிய செல்வக் குடும்பத்தில் பிறக்கிறான் குபேரன்.

திருவெண்காடு சென்று பெற்றோர் பிள்ளைவரம் வேண்டிய பின்னர் பிறந்ததால் திருவெண்காடர் என்ற பெயரை வைக்கின்றனர். ஒரே சகோதரி இருக்கிறாள். திருவெண்காடருக்கு ஐந்து வயதாக இருக்கையில் தகப்பனார் இறந்து போக இவர் அதுமுதல் வணிகத்தைக் கவனித்து வருகிறார்.

ஒருநாள் இவர் கனவில் ஈசன் தோன்றித் திருவெண்காட்டிற்கு வரும்படி பணிக்க அங்கே செல்கிறார். அங்கே ஈசன் இவரை ஒரு அந்தணர் உருவில் வந்து சந்தித்துச் சிவ தீட்சை கொடுத்துவிட்டு ஒரு சம்புடத்தையும் கொடுக்கிறார். (No one knows why this extra bit)

அந்தச் சம்புடத்துக்குள்ளாக விநாயகர் சிலையும், ஒரு சிவலிங்கமும் இருக்கவே நாள் தோறும் அதற்குப் பூஜைகள் செய்து வருகிறார். தக்க பருவம் வந்ததும் சிவகலையைத் திருமணம் செய்து கொள்கிறார். நாட்கள் கடக்கின்றன. குழந்தை பிறக்கவில்லை.

அப்போது திருவிடைமருதூரில் வாழ்ந்து வந்த சிவசருமன், சுசீலை என்னும் அந்தணத் தம்பதியருக்கு(Note this point) வறுமை பொறுக்க முடியாமல் இருந்து வந்தது. சிவசருமர் கனவில் ஈசன் தோன்றி, தாம் கோயிலின் தீர்த்தக்கரையில் ஒரு மருத மரத்தடியில் குழந்தையாக இருப்பதாகவும், சிவசருமர் அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தில் பெருவணிகராய் உள்ள திருவெண்காடரிடம் சேர்ப்பிக்குமாறும் அவர் குழந்தைக்கு ஈடாகக் கொடுக்கும் பொருளால் வறுமை தீரும் எனவும் கூறவே விழித்தெழுந்த சிவசருமர் மறுநாள் அவ்வாறே நடக்கக்

குழந்தையை எடுத்துச் சென்று திருவெண்காடரிடம் கொடுக்க அவரும் ஈசன் ஆணை என அறிந்து குழந்தையைப்பெற்றுக் கொண்டு சிவசருமருக்குப் பொருள் கொடுத்து உதவுகிறார். மருத மரத்தடியில் கிடைத்த குழந்தைக்கு மருதவாணன் என்று பெயரிட்டு அருமையாகச் சீரோடும், சிறப்போடும் வளர்த்து வருகிறார்.

மருதவாணராகத் தம்மிடம் வந்து வளர்வது இறைவனே என்ற உண்மை பட்டினத்தாருக்குத் தெரியவில்லை. பையனை வணிகத்தில் ஈடுபடுத்துகிறார். வணிகக் கப்பல்களோடு வணிகம் செய்ய வெளிநாடுகளுக்கும் அனுப்பினார். வணிகம் முடிந்து மருதவாணன் திரும்பி வந்தான்; திரும்பி வந்த மகன் கப்பல் நிறையப் பொருட்களைக் கொண்டு வந்திருப்பான் என எதிர்பார்த்தார் திருவெண்காடர். ஆனால் அவருக்கு வந்து சேர்ந்ததோ ஓலைத் துணுக்கு ஒன்றும், காதற்ற ஊசி ஒன்றும் தான். கப்பலிலும் எருவிராட்டியும், தவிடுமாகவே நிரம்பி இருந்ததை அறிந்தார். கோபம் கொண்ட பட்டினத்தார் அந்த ஓலையை எடுத்துப் படிக்கையில் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என அதில் எழுதப் பட்டிருந்ததைப் படித்தார். அதைப் படித்த பட்டினத்தாருக்குத் தூக்கி வாரிப் போட்டது. இத்தனை செல்வம் சேர்த்தும் என்ன பயன்! எதைக்கொண்டு போகப் போகிறோம். எதுவும் இல்லை.

அனைத்துச் சொத்துக்களையும், ஆடம்பரமாளிகையையும், விட்டுவிட்டு உடனடியாகத் துறவு மேற்கொண்டார். வீட்டை விட்டு வெளியேறித் துறவியாகத் திரிந்த அவரால் தனக்கும், அவர் மூலம் கிடைத்த சொத்துக்களுக்கும் பங்கம் ஏற்படுமோ என நினைத்த அவர் சொந்தத் தமக்கையார், அப்பத்தில் விஷம் வைத்துக் கொடுக்க அதை அறிந்த பட்டினத்தடிகள், அந்த அப்பத்தை வீட்டுக் கூரையில் செருகிவிட்டு, “தன் வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்” எனக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகல, வீட்டுக்கூரை தீப்பற்றி எரிந்தது. அதைக் கண்ட உறவினர் பட்டினத்தாரின் சக்தியை அறிந்து கொண்டனர். இவர் ஒரு சித்தர் எனப் புரிந்து கொண்டனர்.

தன் அன்னையிடம் அவர் இறக்கும் தருவாயில் எங்கிருந்தாலும் தான் வந்து எரியூட்டுவதாய்க் கூறி இருந்தார் பட்டினத்தார். அவ்வாறே அவர் அன்னையார் இறந்துவிடப் பட்டினத்தார் சரியான நேரத்துக்கு அங்கே வந்து சேர்ந்தார். இவர் வந்து எரியூட்டக் கூடாதென உறவினர்கள் அதற்குள்ளாகச் சிதையைத் தயார் செய்திருந்தனர் ஆனால் சுடுகாட்டிற்குப் போய்ச் சேர்ந்த பட்டினத்தார் காய்ந்த கட்டைகளால் அடுக்கப் பட்டிருந்த சிதையை அகற்றிவிட்டுப் பச்சை வாழைமட்டைகளையும், வாழை இலைகளையும் அடுக்கினார். பின்னர் "ஐயிரண்டு திங்களாய் " என தொடங்கும் பாடல்களைப் பாடி அன்னையின் மரணத்திற்குத் தன் துயரத்தை வெளிப்படுத்தினார்.அவ்வளவில் பச்சை வாழை மட்டை பற்றி எரிந்தது. சுற்றிலும் இருந்தவர் திகைத்துப் பார்க்கையிலேயே அங்கே எதையும் வேண்டாமல் அங்கிருந்து சென்றார் பட்டினத்தார்.

இதற்கு அப்புறம் சம்மந்தம் இல்லாமல் இவர் உஜ்ஜையினி நகரத்துக்கு சென்றதாகவும் அங்கே இருந்த அரசன் பத்ருஹரியை தன் சீடனாக மாற்றி அழைத்துவந்துவிட்டார் என்றும் தனி டிராக் ஒன்று உண்டு (அதை கூகிள் செய்து படித்துகொள்ளவும்)

பட்டினத்தார் தனக்கு முக்தி கொடுக்குமாறு ஈசனை வேண்ட, ஈசன் அவரிடம் ஒரு கரும்பைக் கொடுத்தார். அதன் நுனி இனிக்கும் இடத்தில் அவருக்கு முக்தி கிடைக்கும் எனக் கூறினார். அந்தக் கரும்பை எடுத்துக் கொண்டு பட்டினத்தார் மீண்டும் திருவெண்காடு, சீர்காழி போன்ற பல தலங்களுக்குச் சென்றார். அங்கெல்லாம் நுனிக்கரும்பு இனிக்கவில்லை. (இப்படி பல நாளாய் சுற்றினாலும் அந்த கரும்பு காய்ந்து போகாது. - because it is divine miracle )

பின்னர் அவர் திருவொற்றியூர் வந்தார். அங்கே தான் கரும்பு இனித்தது. இங்கேயே தனக்கு முக்தி என்பதை உணர்ந்து கொண்ட பட்டினத்தார், அங்கு இருந்த சிலரை அழைத்துத் தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி வேண்ட அவர்களும் அப்படியே மூடினார்கள். மூடப்பட்ட பட்டினத்தார் லிங்க வடிவாக மாறினார். முக்தியும் பெற்றார். பின்னாட்களில் இங்கே கோயில் எழுப்பப் பட்டது. வங்காளவிரிகுடாக் கடலைப் பார்த்த வண்ணம் காட்சி தரும் பட்டினத்தார் தனிச் சந்நிதியில் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் காட்சி தருகிறார்.

ஆக மொத்தத்தில் எல்லாம் இழந்து பைத்தியமாக சுற்றி திரிந்த ஒருவனை சித்தர் ஆக்கிவிட்டனர் இந்த பார்பனர்.

இது எதோ ஆயிரம் வருடத்திற்கு முன் நடந்தது, என் எண்ணுவோருக்கு, நமது சமகாலத்தில் நடந்த ஒரு நிகழ்வை சொல்லுகிறேன்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், ஊர்சுற்றி பார்க்க குஜராத்தில் இருந்து வந்த ஒரு குடும்பம், புத்திபேதலித்த நிலையில் இருந்த ஒரு முதியவரை திருவண்ணாமலையில் விடுவிடு சென்றுவிட்டனர்.

அந்த முதியவர், தனது நிலை அறியாமல், அங்கும் இங்குமாக திரிவார், யாராவது உணவு கொடுத்தால் சாப்பிடுவார், இல்லையென்றால் கோயில் மண்டபத்திலே படுத்துகிடப்பார்.

கடைசியில், சில பார்பனர் மற்றும் பிரபல எழுத்தாளர்களின் பரப்புரையாலும், அந்த புத்திபேதலித்த முதியவரை யோகி ராம்சூரத்குமார் என்ற பெயரில் சித்தராக்கிவிட்டனர்

யோகி ராம்சூரத்குமார் ஆசிரமம் என்ற பெயரில் இப்போது கொடிகளில் பல கேடிகள் புரள்கிறார்கள்.

அந்த புத்திபேதலித்த முதியவரின் குடும்பத்துக்கு இந்த ஆசிரமம் பற்றி தெரியுமா என்று தெரியவில்லை, தெரிந்தால் அவர்களும் வந்து பங்கு கேட்கலாம்

ஆண்ட பரம்பரை – ஓரு சிறப்பு பார்வை

சமீபகாலமாக, முகநூலில் மட்டுமல்ல, போதுவெளிகளிலும், நான் கவனித்த ஒரு போக்கு என்னவென்றால்.
ஆங்கிலேயன் வருவதற்கு முன் நாங்கள் எல்லோரும் சாதி என்றால் என்னவென்றே தெரியாமல் ஒற்றுமையாக வாழ்ந்தோம் அவன் வந்து தான் சட்டம் போட்டு, எங்களை இப்படி பிரித்துவிட்டான் தெரியுமா என்பது ஒரு சாராரின் வாதம்
இந்துமதத்தின் மூலமுமாக தமிழுக்கு பார்பனர் எவ்வளவு தொண்டு செய்திருக்கிறார்கள் என்பது ஒரு சாராரின் வாதம்
எல்லோருமே, யாரை பார்த்தாலும் நாங்கெல்லாம் அந்த காலத்துல ஆண்டபரம்பரை தெரியுமா என்ற ஒரு முரட்டு வாதம் வைக்கிறார்கள்.
சரி முன்னோர் பெருமை பேசுகிறார்கள் என்று நினைத்தால், எல்லோருமே சொல்வது நாங்க மட்டும் தான் ஆண்டபரம்பரை மற்றவர்கள் எல்லாம் எங்களுக்கு அடிமை பணி செய்த பரம்பரை என்று வேறு ஒரு வாதத்தை வைக்கிறார்கள்.
இவர்கள் எல்லோருமே, பார்பானை திட்டினால் கண்டிப்பாக பார்பானுக்கு முன்னால் ஒடிவந்து உனக்கு என்னடா தெரியும் என்று கேட்கிறார்கள்.
மொத்தத்தில் நான் புரிந்து கொண்டது என்னவென்றால், தமிழர்கள் என்று தன்னை, ஆண்டபரம்பரையாக அடையாளப்படுத்தி கொள்ள இந்துமதம் அடையாளமாக தேவைபடுகிறது, அந்த மதபுராணக் கதைகள் சொல்லிகொடுக்கும் பார்பனன், தன் பாரம்பரிய காவலனாக தமிழர்கள் கண்களுக்கு தெரிகிறான்.

பிராமணன் என்று தனக்கு மேலே ஒருவன் இருப்பதை ஒப்புக்கொண்டால் தான் தன்னை ஆண்டபரம்பரை சத்திரியன் என்று சொல்லிக்கொள்ள முடியும் என்றாலும் பரவாயில்லை, அதற்காக நான் பார்பானுக்கு ஆதரவு கொடுப்பேன் என்பதே இவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது. 

சரி பார்பானின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது என்று பார்ப்போம், வெறும் அனுமானங்கள் மூலம் அல்ல வரலாற்று பூர்வமாக பார்ப்போம்.
1600-களில் மாவீரன் சத்திரபதி சிவாஜியையே சத்திரியன் அல்ல, அவனுக்கு மன்னனாக பட்டம் சூட்ட மாட்டோம் என்று சொன்னவர்கள் தான் இந்த திருட்டு பார்பனர்,

மாவீரன் சிவாஜி, தவிர வேறு யாருமே அவுரங்கசீபை எதிர்த்து போராடவும் இல்லை வெற்றி பெறவும் இல்லை, அவனுக்கே பார்பனரால் அந்த கதி என்றால் மற்ற ஆண்ட பரம்பரைகளை என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்
(இது பற்றி விரிவாக படிக்க எனது சத்ரபதி சிவாஜியின் - தெரியாத பக்கங்கள் பகுதியை  பாருங்கள்)

குப்தர்கள் காலத்திலிருந்து மொகலாயர் காலம் வரை பார்பனருக்கு தங்கள் மனுதர்ம நாலு வருண விதிகளை மக்கள் மேல் செலுத்தி நோகாமல் வாழ எந்த தடையும் ஏற்படவில்லை.
ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் அது முடியவில்லை, அவர்கள் குழந்தை திருமணம் முதல் பெண்களை உயிருடன் எரிக்கும் உடன்கட்டை ஏரும் வழக்கம் வரை பலவற்றை தடுத்து சட்டம் போட்டார்கள்,

அவர்களிடம் பார்பனரின் பருப்பு வேகவில்லை.
1837-ல் கிழக்கிந்திய கம்பனி ஆட்சியில், கிருஸ்துவர்களுக்கு இங்கிலாந்து நாட்டின் சட்டம், இஸ்லாமியர்களுக்கு ஷரியத் சட்டம் உள்ளது
இந்துகளுக்கு ஏற்ற மாதிரி எப்படி சட்டம் இயற்றுவது என்று ஆங்கிலேயர் பார்பனரை கேட்டார்கள்.
இது நடந்ததது 1837 முதல் 1928 வரை
பார்பனர் சொன்னது இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 1 
பார்பனர்களின் வாதம், இந்துகளில் பிராமணர், சத்திரியர்கள் இருவரை தவிர யாருக்கும் சொத்துகளை வாங்கவோ விற்கவோ உரிமையில்லை,
மனுதர்மபடி பிராமணர் மற்றும் சத்திரியர் மட்டுமே சொத்துகளை வைத்து கொள்ள உரிமை உண்டு.
புராண காலத்தில் பரசுராமர், தன் தந்தையை ஒரு சத்திரியன் கொன்ற கோபத்தில் இந்தியாவில் எல்லா சத்திரியர்களையும் கொன்றுவிட்டார், எனவே இந்தியாவில் இப்போது மீதம் இருப்பவர்கள் அனைவரும் பார்பனர், சூத்திரர், பஞ்சமர் என்ற பிரிவுகளில் மட்டுமே வருவார்கள், மனு தர்மப்படி இவர்களில் பார்பனரை தவிர வேறு யாருக்கும் சொத்து வைத்து கொள்ள உரிமையில்லை,

எனவே, பார்பனரை தவிர வேறு யாருக்கும் சொத்து வைத்து கொள்ள உரிமையில்லை என்று சட்டமியற்ற கோரி கிழக்கிந்திய கம்பெனி அரசுக்குக்கு 1837-ல் பார்பனர் மனு கொடுத்தனர்.

நல்லவேளை கிழக்கிந்திய கம்பெனியின் பிரைவி கவுன்சில் இப்படி ஒரேஅடியாக உங்கள் புராணக்கதைகளை ஏற்றுக்கொண்டு வேறு யாருக்குமே சொத்து வைத்து கொள்ள உரிமையில்லை என்றெல்லாம் ஒத்துகொள்ளமுடியாது, நிச்சயம் சத்திரியர்கள் இருப்பார்கள் ஏன்று சொல்லி அந்த முதல் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 2 – ஆங்கிலேயரின் சட்ட ஆவண எண் (I.L.R.10 மற்றும் I.L.R.12) 1886

இந்த வழக்கு வரும் போது கம்பெனி ஆட்சி முடிந்து பிரிட்டிஷ் ஆட்சி வந்துவிட்டது.

பார்பானுக்கு சிப்பாய் கலக்கம் பற்றியெல்லாம் கவலை இல்லை, இந்தியாவில் சத்திரியர்கள் யாருமே இல்லை என்பதை நிருபணம் செய்ய மீண்டும் போராடுகிறான்

இந்த வழக்கு வழக்கம் போல பார்பனருக்கும், வங்காள கயஸ்தா மற்றும் பீகாரின் கயஸ்தா பிரிவினர் இவர்களில் யார் சத்திரியர் என்று பிரிட்டிஷ் கோர்ட்களில் நடைபெறுகிறது 

இந்த வழக்கில் வங்காளத்தில் உள்ள கயஸ்தா பிரிவினர் சத்திரியர் தான் என்று தீர்ப்பு பிரிட்டிஷ் கோர்ட்களில் வழங்குகிறார்கள்

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 3 – ஆங்கிலேயரின் சட்ட ஆவண எண் (1916) 20 Cal. W.N.901 
1916-ல் மறுபடியும் பார்பனர் வழக்கு தொடர்ந்து வங்காளத்தில் உள்ள கயஸ்தா பிரிவினர் சத்திரியர் அல்ல என்று ஆங்கிலேய கோர்டில் தீர்ப்பை பெறுகிறார்கள். இந்த வழக்கு 1926-ல் தான் முடிகிறது.

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 4 – ஆங்கிலேயரின் சட்ட ஆவண எண் .L.R.
(1928) 52 Bom.497
மறுபடியும் சிவாஜி பரம்பரையை விடாமல் வம்புக்கிழுத்த  பார்பனர், 1926-ல் வெங்கோஜி அல்லது எக்கோஜி என்று அழைக்கப்பட்ட சிவாஜியின் தம்பியின் வழி வந்தவர்கள் தஞ்சை மன்னர்களாக இருக்கிறார்கள் அவர்கள் சத்திரியர்கள் அல்ல சூத்திரர்கள் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்கள். 

அந்த வழக்கின் 229 பக்க தீர்ப்பில், மகாராஷ்டிரத்தில் உள்ள சிவாஜி வம்சம் என்று சொல்பவர்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம் (long gap from 1600-1900)
  1. முதல் ஐந்து குடும்பங்கள் 
  2. இரண்டாவது 96 குடும்பங்கள் 
  3. மற்றவர்கள் 

என்று பிரிக்கலாம், இவர்களில் முதல் இரண்டு பிரிவினரும் சத்திரியர்கள், அதனால் வெங்கோஜி அல்லது எக்கோஜி என்று அழைக்கப்பட்ட சிவாஜியின் தம்பியின் வழி வந்தவர்கள் சத்திரியர்களே என்று பிரிட்டிஷ் கோர்ட்டு தீர்ப்பு வழங்குகிறது

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 5 
மதுரையை சேர்ந்த யாதவர்கள் 1927-ல் நாங்களும் யாதவ குலத்தில் பிறந்த கிருஷ்ணனின் வம்சம் நாங்களும் சத்திரியர்கள் தான் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க, எதிர்த்து வாதாடிய பார்பனர் அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வைக்கிறார்கள்.

இப்படியாக ஆங்கிலேயர் காலத்திலும் பார்பனர் நிறுவ முயன்றது என்னவென்றால், இந்தியாவில் சத்திரியன் என்று யாரும் இல்லை.

இந்து மனு தர்மப்படி பிராமணன் மட்டுமே சொத்து வைத்து கொள்ளலாம் படிக்கலாம், இன்னும் பிற பிற லாம் லாம் லாம்

ஆகவே, தன்னை ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படும் எல்லோரும் ஒன்று புரிந்து கொள்ளுங்கள்,

 பார்பான்  உங்களை நேரில் பார்க்கும் போது ஆமா அய்யா நீங்கள் எல்லாம் எவ்வளவு பெரிய ஆண்டபரம்பரை என்றுதான் சொல்லுவான்

ஆனால் உங்களை சூத்திரன் ஆக்க சட்டப்படி எல்லா வேலையும் செய்வான்.

எல்லா சாதியிலும் உங்கள் சொந்தகாரன் (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்) உங்களை ஆண்டபரம்பரையில் சேர்க்க பல டகால்டி வேலை செய்வான் அதையெல்லாம் காதில் போட்டுகொள்ளாதீர்கள்

உண்மையில் உங்களுக்கு உங்கள் சாதி உங்கள் சமுகத்தின் மீது அன்பு இருந்தால், ஆண்ட பரம்பரை, புராண கதை சொல்லி பெருமை பேசுவதை விட்டு விட்டு, உங்கள் சமுகத்தில், கல்வியில், அறிவில் நாம் இப்போது என்ன செய்கிறோம் என்று சிந்தியுங்கள்

குறைந்த பட்சம் உங்கள் சொந்த சமுகத்தில், உள்ள ஏழை மாணவர்கள் படித்து முன்னற உதவுங்கள், பணமாக முடியவில்லை என்றாலும் உங்கள் நேரத்தை கொடுங்கள், படிப்புக்காக வங்கியில் கடன் வாங்க உதவுங்கள்  

ஆண்ட பரம்பரை கதை பேசினால், பார்பான் உண்டியல் மட்டுமே நிரம்பும், அப்போதும் நீங்கள் ஆண்ட பரம்பரை இல்லை என்று அவன் எங்காவது கோர்டில் கேஸ் போட்டு கொண்டுதான் இருப்பான்.

Book Wrapper

இந்த நூலை  வாங்க  விரும்பினால்  இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்     விலை ரூ.200 மட்டுமே