Wednesday, September 6, 2017

7-ஆம் நூற்றாண்டில் பார்பனர் நடத்திய படுகொலைகள்

கிபி 6 முதல் 7-ஆம் நூற்றாண்டில் பார்பனர் நடத்திய படுகொலைகள் பல பல, அதில் தமிழ் நாட்டில் நடந்த சம்பவம் குறித்து பார்ப்போம்  

கிபி 321 550, வரை வடஇந்தியாவில் பாடலிபுத்திரம் நகரை தலைநகராக கொண்டு குப்தர்கள் ஆண்டார்கள். இவர்கள் தமிழ் நாட்டில் காஞ்சி வரை கூட படை எடுத்து வந்தார்கள். ஸ்ரீகுப்தன் தொடங்கி ஸ்கன்தகுப்தன்  சுமார் 7 மன்னர்கள் சிறப்பானவர்கள் அவர்களுக்கு பின் அதிக சிறப்பு இல்லாத சுமார் 8 குப்தர்கள் ஆண்டார்கள்,


கிபி 480 முதல் 550 வரை தொரமணன் மற்றும் அவனது மகன் மிஹிரகுலன்(சீன வம்சாவழியினர்) என்ற இரு ஹுன இனத்தவர்களின் சுமார் 70 ஆண்டுகள் தொடர்ச்சியான படையெடுப்புகளில் குப்தர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது  


இந்த கால கட்டத்தில் வடஇந்தியா 90% மேல் இந்து மயம் ஆக்கப்பட்டது, மிஹிரகுலன் என்ற சீன வம்சாவழி வந்தவனை சத்திரியன் ஆக்கி பார்பனர் வடஇந்தியாவில் புத்த கோயில்களை அழித்த வரலாறும் உண்டு       

இதன் தொடர்ச்சியாக இந்த கால கட்டத்தில் கங்கை கரையில் மௌகாரிகள், இன்றைய மகாராஷ்டிரத்தில் மைத்ரகர், தற்போதைய ஆந்திர பிரதேசத்தில் சாளுக்கியர்கள் மற்றும் தமிழ் நாட்டில் பல்லவர்கள் தனி அரசர்களாக தலையெடுக்க தொடங்கினர்.


இந்திய வரலாற்றில் கிபி 600 – 650 ஒரு முக்கியமான காலகட்டம், ஒரே நேரத்தில் மூன்று பேர் திறமைசாலியாக இருந்தால் என்ன நடக்குமோ அது நடந்த காலகட்டம், அது மட்டமல்ல சீன யாத்திரிகர் யுவான் சாங் இந்தியாவில் பயணம் செய்த காலகட்டமும் இதுதான்.
1.    

  1. வடக்கே கன்னோஜ் நகரை தலைநகராக கொண்ட மௌகாரிகள் வழி வந்த ஹர்ஷவர்தன் பலம் பொருந்தியிருந்தான், இவன் முதலில் பௌத்தனாக இருந்து பின் வைஷ்ணவ மதம் மாறியவன்
  2. மத்தியில் வாதாபி நகரை தலைநகராக கொண்ட சாளுக்கியர்  வழி வந்த இரண்டாம் புலிகேசி பலம் பொருந்தியிருந்தான், இவன்  பௌத்த மதம் சேர்ந்தவன்
  3. தெற்கே  காஞ்சி நகரை தலைநகராக கொண்ட பல்லவர்கள் வழி வந்த மகேந்திரபல்லவன் பலம் பொருந்தியிருந்தான்  இவன் முதலில் சமண மதத்தில் இருந்து பின் சைவ மதம் மாறியவன்       

இந்த காலகட்டமே பல மன்னர்கள் தற்போதைய இந்து மதத்திற்கு மாறிய காலம். பௌத்தம் மற்றும் சமணம் அழியத்தொடங்கிய காலம். 

அன்றைய சூழ்நிலை மூவருமே தங்கள் பகுதிகளை மேற்கொண்டு விரிவாக்க முடியாமல் நெருக்கடியை கொடுத்தது,
1.       ஹர்ஷவர்தனால் வடக்கே இமயம் தாண்ட முடியவில்லை, தெற்கே புலிகேசியை தாண்ட முடியவில்லை
2.       புலிகேசியால் வடக்கே ஹர்ஷவர்தனை தாண்ட முடியவில்லை, தெற்கே மகேந்திரபல்லவனை தாண்ட முடியவில்லை
3.       மகேந்திரபல்லவனால் வடக்கே புலிகேசியை தாண்ட முடியவில்லை தெற்கே கடல் தாண்ட முடியவில்லை

இந்த மூவரில் அதிகஅளவில் ஆர்வமும் முயற்சியும் உடையவன், இரண்டாம் புலிகேசி என்று தான் சொல்லவேண்டும்.

அவன் தான் முதலில் பல்லவர்கள் மீது படை எடுத்து வந்தான், காஞ்சி நகரில் இருந்து சுமார் 25கிமி தூரத்தில் உள்ள புள்ளலூர் என்ற இடத்தில் இரண்டாம் புலிகேசிக்கும் மகேந்திரபல்லவனுக்கும்  மிகப்பெரிய போர், 

இதில் பல்லவன் படைகள் தோல்வி அடைந்து காஞ்சி நகருக்குள் தஞ்சம் அடைந்தது காஞ்சி கோட்டையை முற்றுகை இட்ட புலிகேசி, படையின் மற்றுமொரு பிரிவுடன் பாண்டிய நாடு வரை சென்றான், அங்கே ஜயந்தவர்ம பாண்டியனை வென்றான். இதில் புலிகேசி செய்த தவறு என்னவென்றால் அவன் முற்றுகை இட்ட காலம் நல்ல கோடை காலம், காஞ்சியில் கோடையில் இன்றும் தண்ணீருக்கு திண்டாட்டம் தான், அதனால் இதை வெற்றி என்றோ தோல்வி என்றோ சொல்லமுடியாத நிலையில் ஊர் திரும்பினான்.


சரி தெற்கே சரிவரவில்லை இப்பொது வடக்கே சென்றால் என்ன என்று நர்மதை நதிக்கரையில் ஹர்ஷவர்த்தனுடன் போர், இந்த போரில் ஹர்ஷவர்த்தனின் யானை படைகள் பெரும் அளவில் சேதம் அடைந்தாலும் இதையும் பெரும் வெற்றி என்று சொல்ல முடியாது, இருவரும் அமைதி ஒப்பந்தம் போட்டு கொண்டு ஊர் திரும்பினர்.

சிலகாலத்துக்கு பிறகு சும்மா இல்லாமல், ஏற்கனவே கோட்டையில் ஒளிந்து கொண்டவர்கள் தானே பல்லவர்கள், அதிலும் தற்போது மகேந்திரபல்லவனின் மகன் சிறுவயதுடைய நரசிம்மன் தானே அரசன் இப்போது எளிதில் வென்றுவிடலாம் என்ற எண்ணத்துடன் பல்லவ நாட்டின் மீது படை எடுக்கிறான் இரண்டாம் புலிகேசி.


அது தான் அவன் செய்த மிகப்பெரிய தவறு, காஞ்சிக்கு கிழக்கே மணிமங்கலத்தில் நடந்த போரில் புலிகேசியின் படைகள் நரசிம்மனால் அடித்து விரட்டப்படுகிறது.

இந்த வெற்றியால் உந்தப்பட்ட நரசிம்மபல்லவன், ஒரு பெரும் படை திரட்டுகிறான், அருகில் இருந்த எல்லா குறுநிலமன்னர்களின் உதவியையும் நாடுகிறான், பிற்காலத்தில் சோழர்கள் என அறியப்பட்ட வேளிர்கள், சிங்களத்தில் தன் அரசுரிமைக்காக போராடிய மானவர்மன், பாண்டியன் சுந்தர பாண்டியன் ஆகியோர் இதில் அடங்கும். இந்த சுந்தர பாண்டியன் பற்றியது தான் நாம் இன்று பார்க்கும் வரலாறு.


இப்படி பல படைகளை கழுகுமலையில் திரட்டிய நரசிம்மபல்லவன், சாளுக்கியர் தேசம் நோக்கி படையெடுத்து சென்று இறுதியில் அவர்களது தலைநகரான வாதாபியை எரித்து சாம்பாலாக்கி தான் திரும்புகிறான்.

ஆனால் இந்த படையெடுப்பில் சுந்தர பாண்டியனின் படைகளை எடுத்துக்கொண்ட நரசிம்மன், சுந்தர பாண்டியனை தன் நாட்டிலேயே இருந்துகொள்ளும்படி சொல்கிறான் ஏனெனில், பாண்டியன் அப்போது தான் திருமணம் செய்து கொண்டவன்.

இந்த சுந்தர பாண்டியனின் முழு பெயர் அரிகேசரி பாராங்குச மாறவர்மன், இவன் சமண மதத்தை சேர்ந்தவன், இவன் பார்வைக்கு மிக அழகானவன் என்பதால் சமணர்கள் இவனை சுந்தரபாண்டியன் என்று அழைப்பார்கள், இவன் மிக  உயரமாகவும் இருப்பான், உயரம் அதிகம் உள்ளவர்கள், மற்றவர்களை பார்க்க பேச எப்போதும் சற்று குனிந்த நிலையில் இருப்பார்கள் அதனால் பார்பனர்கள் இவனுக்கு வைத்த பெயர் கூன்பாண்டியன்.

இவன் திருமண செய்த பெண் வேளிர் குலத்தை சேர்ந்த மங்கையர்க்கரசி என்ற சோழவம்ச இளவரசி, இவள் பாண்டியனை திருமணம் செய்துகொண்ட போது வேளிர் மன்னனின் மந்திரியின் மகனான குலச்சிறை என்பவனும் பாண்டிய நாடு வருகிறான், பாண்டியன் இந்த குலச்சிறையை தன் மந்திரிகளில் ஒருவன் ஆக்குகிறான்.

சுந்தர பாண்டியன் சமண மதத்தில் இருந்தாலும், மங்கையர்க்கரசி, மற்றும் அவள் தோழன் குலச்சிறை இருவரும் சைவ சமயத்தில் தொடர எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. உலகிலேயே திருமணம் ஆன இளவரசிக்கு மந்திரி மகனை துணையாக அனுப்பிய வரலாறு நான் வேறு எங்கும் படித்ததில்லை.

இந்த காலகட்டத்தில் ஞானசம்பந்தன் என்ற பார்பனன், மதுரைக்கு வருகிறான், ஞானசம்பந்தனின் மதம் பரப்பும் வேலைகளை பற்றி அறிந்த சுந்தரபாண்டியன் அவனை மதுரைக்கு உள்ளே வர அனுமதி மறுத்துவிடுகிறான். ஞானசம்பந்தனை குலச்சிறை தனியே சந்தித்து என்ன செய்வது என்று கேட்க ஒரு சிறு குளிகையை அவனிடம் கொடுத்து, இதை   மன்னனின் உணவில் கலந்துவிடு அவரது மனதில் மாற்றம் வரும் என்கிறான். குலச்சிறையும் மங்கையற்கரசியின் துணையுடன் அப்படியே செய்கிறான்      


அது நாள் வரை நல்ல உடல் நலத்துடன் இருந்த பாண்டியன், திடீரென்று வெப்பு நோய் தாக்கி தீராத வயிற்று வலியால் துடிக்கிறான், உடனிருந்த சமண மருத்துவர்கள் ஒவ்வொரு மருந்தாக கொடுத்து பார்க்க ஒன்றும் உடனடியாக வேலை செய்யவில்லை. விஷம் எது என்று அறிந்தால் தானே அதை முறிக்கும் சரியான மருந்தை கொடுக்க முடியும்  


இந்த நேரத்தில் குலச்சிறையும் மங்கையர்கரசியும், ஞானசம்பந்தர் மந்திரத்தால் அற்புதம் செய்வார் அவரை ஊருக்குள் வர அனுமதி கொடுங்கள் என தொடர்ந்து வற்புறுத்த, எப்படியோ வயிற்று வலி தீர்ந்தால் போதும் என்ற நிலையில் இருந்த பாண்டியன் அனுமதி கொடுக்கிறான்.

அரண்மனை வந்த ஞான சம்பந்தன், மன்னன் சைவ சமயம் மாறுவதற்கு ஒப்புகொண்டால் சிவனின் அருளால் நோயை குணப்படுத்த முடியும் என்கிறான், மன்னனும் ஒப்புகொள்ள, மன்னனுக்கு சிறிது திருநீரை தண்ணீரில் கரைத்து குடிக்க கொடுத்து,   


மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப் படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர் வாய் உமை பங்கன், திரு ஆலவாயான் திருநீறே.

என்ற திருஆலவாய் – திருநீற்றுப்பதிகம் பாடிமுடித்தவுடன் மன்னனின் வெப்பு நோய் மறைகிறது. விஷம் கொடுத்தவனுக்கு தானே முறிக்கும் மருந்து எது என்று தெரியும்.

மன்னன் சைவ சமயம் மாறியவுடன், ஞான சம்பந்தன் அரசனே உங்கள் சமண மதத்தவர் போற்றும் அருகதேவன் பெரியவனா அல்லது சிவன் பெரியவனா என்று போட்டி வைத்து பார்ப்போம், தோற்றவர்களை கழுவில் ஏற்றி கொல்லவேண்டும் என்று சவால் விடுகிறான்.

மறுநாள் சமண துறவிகள், ஞான சம்பந்தனுடன் வாதம் செய்வதற்காக எல்லா சமண மத நூல்களையும் எடுத்து கொண்டு தயாராய் வந்தனர். அப்போது அங்கு வந்த ஞான சம்பந்தன் சொன்ன போட்டி என்ன தெரியுமா? வாதம் செய்வது அல்ல போட்டி. அவன் சொன்னது வேறு இரண்டு போட்டிகள்

போட்டி – 1
ஞான சம்பந்தன் ஒரு ஓலையில் சிவனை பற்றி பாடல் எழுதி நெருப்புக்குள்  நுழைத்து காட்டவேண்டும் அதே போல சமணர்கள் அருகதேவனை பற்றி பாடல் எழுதி ஓலையை நெருப்புக்குள் நுழைத்து காட்டவேண்டும் யார் எழுதிய ஓலை நெருப்பில் எரியாமல் இருக்கிறது என்று பார்க்க வேண்டும்     
          
போட்டி – 2
ஞான சம்பந்தன் ஒரு ஓலையில் சிவனை பற்றி பாடல் எழுதி நீரில் நுழைத்து காட்டவேண்டும் அதே போல சமணர்கள் அருகதேவனை பற்றி பாடல் எழுதி ஓலையை நீரில் நுழைத்து காட்டவேண்டும் யார் எழுதிய ஓலை நீரில் நனையாது  இருக்கிறது என்று பார்க்க வேண்டும்               

அறிவுக்கு ஒவ்வாத இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று சமணர்கள் மறுத்தாலும், விடாப்பிடியாக, ஞானசம்பந்தன், தான் ஏற்கனவே கொண்டு வந்த ஓலையில் ஒன்றை நெருப்பில் நுழைத்து காட்ட அது நெருப்பில் எரியவில்லை. மீண்டும் ஏற்கனவே கொண்டு வந்த வேறு ஒரு  ஓலையில் ஒன்றை நீரில் நுழைத்து காட்ட அது நீரில் நனையவில்லை.


இங்கே ஞான சம்பந்தன் செய்தது அற்புதமெல்லாம் ஒன்றும் இல்லை, கெமிக்கல்கள் விற்கும் கடைகளில் போராக்ஸ் என்ற வெள்ளை நிற பொடியை வாங்கி, நீரில் கட்டியாக கரைத்து அதில் ஒரு காகிதத்தை நன்றாக நனைத்து பின் உலரவைத்து கொள்ளுங்கள், அதே போல கடைகளில் விற்கும் ஆலம் என்ற கரைசலை வாங்கி நீர் சேர்த்து கொதிக்கவைத்து அதில் ஒரு காகிதத்தை நன்றாக நனைத்து பின் உலரவைத்து கொள்ளுங்கள்.


இரண்டு காகிதத்திலும் உங்கள் பெயரை எழுதி வைத்து கொண்டு பின் யாராவது சில ஏமாளிகளை கூப்பிட்டு, முதல் காகிதத்தை நெருப்பில் நுழைத்து காட்டுங்கள், இரண்டாவது காகிதத்தை நீருக்குள் நுழைத்து காட்டுங்கள், உங்கள் அற்புத சக்தியில் மயங்கி அவர்கள் உங்களுக்கு சீடராக கூடும், இந்த வித்தையை செய்யும் போது காவி உடை அணிதல் இந்த வித்தைக்கு மேலும் சிறப்பு தரும். அப்படியே ஆசிரமம், மடம் இறுதியில் ஜெயில் என்று படிப்படியாக முன்னேறி செல்லுங்கள்.
       
ஆகவே போட்டியில் தானே வென்றதாக அறிவித்து கொண்ட ஞானசம்பந்த பார்பான், மதுரையில் இருந்த சமணர்கள் சுமார் 8000 பேரை கழுவில் ஏற்றி கொன்றான் கழுவில் ஏற்றுவது எப்படி என்று படத்தில் உள்ளது.  


அதே காலத்தில் இந்தியாவில் இருந்த யவான் சாங் தன் புத்தகத்தில், சமணர்களை கொல்ல பாண்டிய மன்னனை வெகுவாக வற்புறுத்திய ஒரு இந்து இராணியை பற்றி தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பார்பனர்கள் சமணர்களை அதிகஅளவில் அடையாளம் காட்டி கொன்றதில் இருந்து தான்

“வெளியே செல்லும் போது ஒற்றை பார்பானை பார்த்தல் நல்லதல்ல”

என்ற சகுனம் பார்க்கும் முறையே ஏற்பட்டிருக்கவேண்டும், ஏனெனில் அந்த காலத்தில் ஒரு சமணர் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எதிரில் பார்பானை பார்த்தால் அவன் வீடு திருப்ப முடியாது, பின் தொடர்ந்து வரும் பார்பான் எங்காவது ஒரு வீரனிடம் அவனை சமணன் என்று அடையாளம் காட்டி அவன் கைது செய்யப்பட்டு கழுவில் ஏற்றப்படுவான்,  பின் பார்ப்பானே தன்னை பற்றி கேவலமாக ஒரு பழமொழியை சொல்லிக்கொள்வானா.  


சமணம் பார்த்தல் என்ற வார்த்தையே பிற்காலத்தில் சகுனம் பார்த்தல் என்று மாற்றம் அடைந்திருக்கும், இன்றும் நெல்லை குமரி மாவட்டங்களில் வயதானோர் சமணம் பார்த்தல் என்ற சொல்லாடலை பயன்படுத்துவதை பார்த்துள்ளேன்.


இதே ஞானசம்பந்தன், தன் உடன் மதம் பரப்ப வந்த நாவுக்கரசரை, பார்பனர் அல்ல என்பதால் அவரை தன் பல்லக்கை தூக்கும்படி செய்தது, செல்லும் வழியில் வயாதான முதியவர் நாவுகரசறை காலால் எட்டி உதைத்தது, நாவுக்கரசர் கடைசி காலத்தில் சமண மதம் திரும்பியது போன்ற சம்பவங்களை வேறு ஒரு பதிவில் காண்போம்      


ஆக நரசிம்மபல்லவன்,  சுந்தர பாண்டியனை வாதாபிக்கு சண்டை போட  அழைத்து சென்றிருந்தால், 63 நாயன்மார்களில் மூன்று பேர் குறைந்திருப்பார்கள்

8 comments:

  1. பாண்டிய மன்னன் திருமணத்துக்குபிறகுதானே காஞ்சியில் தங்குகிறான் அவனுடன் வேளிர்குல மந்திரி உடன்மதுரை சென்றதற்கும் நரசிம்மன் அவனை போர்தவிர்த்த காரணத்திற்கும் என்ன ஙம்பந்தம் அவன்போருக்கே சென்றிருந்தாலும் பின்நாடுதிரும்புகையில் மாமனார்வழியில் எப்படியும் வேளிர்குல மந்திரிசென்றிருப்பான்தானே

    ReplyDelete
  2. Thank you very much for distorting!
    By the way, you said he was called as Koon Pandiyan because he spoke with everyone in stooped position, as he was tall. But the fact is, no human speak in stooped position. We can speak in such position only if we are speaking with a little child. So, what about another name of Koon Pandiyan, Nindra seer Nedumaran which he got after his hunch-back was cured? You people should have said something like, as he was taller than Brahmins, Brahmins cut his leg out of jealous. Then there is no need for stooping. So he got his name, Nindra Seer Nedumaran. LOL. The fact is he was called by the name koon pandiyan because he had hunch back, as he got the name Nindra seer nedumaran, once his hunch back was cured.

    You said Sambandar visited Pandiya country. But the fact is, he visited pandiyan country only after he was invited by Mangayarkarasi. The Thirumurai hymn structures of him clearly reveals that, as after Vedaranyam, he visited Alavayan.

    You also said Koon pandiyan started suffering from fever only after the visit of Sambandar. Again wrong. Before sambandar visited his palace, he suffered from disease. So, Sambandar didn't give any kind of slow poison to the pandiyan king.

    Regarding that matches, you said, sambandar Used Borox and Alam. I agree that borox can make the paper fireproof, but the thing is, paper was not widespread at the time of Nayanmars. amaya k6u5r5avar5 only 6used palm leaves to compose.

    And the final thing is very fUNNIER. I can't stop laughing. If there is only one concept of seeing single brahmin while going outside is bad omen,then there is a logic. But coming of two shudras while moving OUTside is also a bad omen. What about attributing this in favour of jains, like you did for "வெளியே செல்லும் போது ஒற்றை பார்பானை பார்த்தல் நல்லதல்ல”

    ReplyDelete
  3. இதில் சில மாற்றம் செய்ய வேண்டும்

    அணல் வாதம், புணல் வாதம் செய்தாாா்கள்

    நீங்கள் இரண்டாவதாக குறிப்பிட்டது மட்டும் தவறு

    அது ஆற்றில் ஏடுகளை விட சொன்னார்கள் அப்போது எந்த ஏடு தண்ணிரின் திசைக்கு எதிரே செல்கிறதோ அது வெற்றி பெற்றதாக கருதப்படும்

    அப்போது சைவர்கள் சூழ்ச்சி செய்து நீரிலழிஞ்சி வேரை ஏடுகளுடன் மறைத்து கட்டி ஆற்றில் விட்டனர் அது தண்ணீரின் எதிர் திசைக்கு சென்றது

    சாதாரணமாக ஏடுகளை விட்ட சமணர்களின் ஏடு ஆற்றோடு போய் விட்டது

    சமணர்கள் போட்டியில் தோல்வி கண்டதால் பாண்டிய மன்னன் துனையுடன் திருஞானசம்பந்தர் என்னும் அயோக்கியன் தலைமையில் மதுரையில் 8000 சமணர்களை கழுவேற்றி படுகொலை செய்தான் அதை பார்த்து ரசித்தவன் திருஞானசம்பந்தர்

    கழுவேற்றம் நடந்த இடம் சமணரத்தம் என்ற ஊர் பெயர் மருவி சாமநத்தம் என்றாகி விட்டது

    அங்கே திருஞானசம்பந்தருக்கு கோயில் இன்றும் உள்ளது

    மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வாக கழுவேற்ற திருவிழா இன்றும் சாமநத்தத்தில் கொண்டாடபடுகிறது

    ReplyDelete
    Replies
    1. கழுவேறற்ம் நடந்தது மேலகழுவேற்றம் இன்று மேலக்கால்
      ஏடு எடுப்பு நடந்த இடம் திருஏடகம் இன்று திருவேடகம் இந்த இரண்டு ஊர்களும் சோழவந்தான் அருகே உள்ளது.

      இந்த நிகழ்வில் திருஞானசம்மந்தர் என்பவர் சில நிகழ்வுகளை நாகர்தீர்த்தம் என்று இடத்தில் இருந்து தான் துவங்கியுள்ளார்.

      Delete
  4. Actually it was jains themselves who agreed to kill themselves if they failed in the debate, as they failed they accepted the defeat and killed themselves as they promised. so you cannot say they were all murders done by brahmins.

    ReplyDelete
  5. தமிழக வரலாறு அறிய முடியாத ரகசியம் இது...ஆனால் ஏழாம் நூற்றான்டில் வாழ்ந்த "திருஞான சம்பந்தர் " சாக்கியர்களையும் சமனர்களையும் வசை செய்வார்.
    திருஞான சம்பந்தர் பாடிய அனைத்து பதிகங்களிலும் (பத்து பாடல்கள் அடங்கியது பதிகம் ) 385 பதிகங்களில் உள்ள பாடல்களில் பத்தாவதாக உள்ள பாடல் சமனர்களையும், சாக்கியர்களையும் சாடுகிறது. மேலும் அவர்களின் கொடுஞ்செயல் குறிப்புகளையும் கூறுகிறது. ஆனால் தமிழ் உலகம் பக்தி இலக்கியமாக பார்ததே அன்றி தமிழர் சரித்திரத்தையும் கூறுவதை ஏனோ வெளிப்படுத்த தவறி விட்டார்கள்.
    ஏழாம் நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டு வரை தமிழரின் பெருங்காப்பியங்களான சைவத்தின் திருமுறைகளும் வைனவத்தின் பாசுரங்களும் ....இந்த சமன மற்றும் புத்த மத கொடுங்கோலர்கள் செய்த கொடுமைகளை கூறும் சரித்திர குறிப்புகள் . இவைகளை தில்லை அந்தனர்கள் செய்த சதியால் பல ஆண்டுகள் சிதம்பரத்தில் மறைத்து வைக்கப்பட்டது . பின் இராச இராச சோழன் என்ற தமிழ் அரசரால் மீட்கப்பட்டது. இல்லையெனில் இதை அழித்திருப்பார்கள். திருஞான சம்பந்தரின் பாடல்களில் பக்தியை தாண்டி பல சரித்திர குறிப்புகள் உள்ளன அவற்றை முறையாக ஆராயுமா நம் தமிழ்ச் சமூகம்.

    ReplyDelete
  6. வரலாற்றை மாற்றிய உம்மை சைவர்கள் வயித்தெறிச்சல் சும்மா விடாது

    ReplyDelete

Book Wrapper

இந்த நூலை  வாங்க  விரும்பினால்  இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்     விலை ரூ.200 மட்டுமே