Sunday, August 27, 2017

அமரகோசம் - விநாயகர்


இந்த விநாயக சதுர்த்திக்கு வெறும் ஒரு வேடிக்கை பதிவு மட்டுமே போதும் என்று தான் தேவமைந்தன் பிறந்த நாள் பதிவை போட்டேன். இப்போது வேறு வழியில்லை, சீரியசான பதிவு போட்டும் தான் ஆகவேண்டும்

நேற்று பக்தாள் டீமில் உள்ள ஒருவர், பிள்ளையார் ஒன்றும் புத்த கடவுள் அல்ல, என்று காட்டமாக எழுதியிருந்தாராம், வேறு ஒரு நண்பரிடம் ScreenShot வாங்கி தான் பார்த்தேன், நான் அவர் பக்கத்தை பார்க்க முடியாது, நம் மீது அவருக்கு அவ்வளவு அன்பு.

அந்த பதிவில் விநாயகர் புத்த கடவுள் எல்லாம் கிடையாது, நாந்திகளை கேட்டால் அயோத்திதாசர் சொன்னார் என்று சொல்கிறார்கள், அயோத்திதாசர் எந்த துறை வல்லுனரும் கிடையாது, என்றெல்லாம் காட்டமாக எழுதியிருந்தார். பதிவு போட்டவர் எந்த துறை வல்லுநர் என்று அவருக்கே வெளிச்சம், குறைந்தபட்சம் அயோத்திதாசர் எத்தனை நூல்கள் எழுதிஉள்ளார் என்றாவது தெரியுமா என்பதும் தெரியவில்லை

இது போக அருமையாக ஒரு புது வரலாறை வேறு அவர் கண்டுபிடித்திருந்தார்,

புத்த மதம் நகரங்களில் இருந்தது. இந்து மதம் தலைமையிடம் என்று எதுவும் இல்லாமல் கிராமங்களில் இருந்தது, அதனால் தான் இஸ்லாமியர்கள் இந்தியா வந்த போது நகரங்களில் இருந்த புத்த மதம் அழிக்கப்பட்டது, கிராமங்களில் பார்பன பூசாரிகளால் இந்துமதம் அமைதியாக வைக்கப்பட்டு காப்பாற்றப்பட்டது என்று சொல்லிருந்தார். ஒருவேளை சோமநாதபுரம் கோயில் புத்த கோயில் என்பதால் தான் இஸ்லாமியர்கள் 17முறை வந்து இடித்தார்கள் போல

அதற்கு ஒரு ஆங்கில புத்தகத்தை வேறு ஆதாரமாக காட்டியிருந்தார், உண்மையில் அந்த புத்தக ஆசிரியரால் சொல்லப்பட்டது, நாலந்தா ஒரு கல்வி கூடம் என்பது தெரியாமல் வழிபாட்டு இடம் என்று என்று நினைத்து இஸ்லாமியர் இடித்துவிட்டார்கள் என்ற ஒரே ஒரு வரி மட்டும் தான்

இறுதியாக நான்காம் நூற்றாண்டை சேர்ந்த அமரகோசம் என்ற நூல் கணேசனுடைய எட்டு பெயர்களை சொல்கிறது, எனவே கணேசர் பல நூற்றாண்டுகளாக இந்து கடவுளாக தான் இருந்துவருகிறார், அவரை புத்த மத்ததில் இருந்து எடுத்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று முடித்திருந்தார்.

இந்த முடிவு தான் உச்சகட்ட காமடி.

இதை, “நுழலும் தன் வாயால் கெடும்” என்ற தமிழ் பழமொழிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக வைத்து கொள்ளலாம்

அந்த பதிவரும் அவரது அடிப்பொடி ஆழ்வார்களும், அமரகோசம் என்பது ஒரு புராண நூல் என்று நினைத்துகொண்டார்கள் போல, அரைகுறையாக விக்கியில் படித்து பதிவு போட்டால் இப்படித்தான்
  1. முதலில் அமரகோசம் என்பது ஒரு நூல் அல்ல, அது ஒரு சமஸ்கிருத அகராதி – அதாவது Thesarus or Dictionary
  2. அந்த அகராதியை எழுதியவர் அமரசிம்கா
  3. இந்த அமரசிம்கா ஒரு மகாயான புத்தமத துறவி,
  4. மகாயான காலத்தில் புத்த நூல்கள் பாலி மொழியிலிருந்து சமஸ்கிருத மொழிக்கு மாற்றப்பட்டது
  5. இந்த நூலில், இன்று இந்து கடவுள்கள் என்று நாம் நினைக்கும், கணேசன் பெயர் உட்பட, பல லட்சுமிகள், குபேரன், என இன்னும் பல புத்த கடவுள்களின் பெயர்களும் அந்தபெயருக்கு உண்டான பொருளும் சொல்லப்பட்டுள்ளது
  6. இந்த நூலின் கடவுள்களை பற்றிய பகுதியின் முதல் பாடல் எது தெரியுமா (பாடல் எண் 1.1.30)

“”சா சாக்கியசிம்ஹா சர்வார்த்த சித்தார்த்தா ஸௌத்தோடநிஷச் சாஹ்
கௌத்தமஸ் சாரக பந்து மாயாதேவியுட் ஆஷா சாஹ்”
     7. அந்த சமஸ்கிருத பாடலின் வரிவடிவத்தை தமிழில் கொடுத்துள்ளேன், தமிழில் அர்த்தம் எல்லாம் சொல்லவேண்டாம் என்று நினைக்கிறன், நண்பர்களுக்கு எளிதில் விளங்கும்
   8. ஆக மொத்தத்தில் பதிவர் அப்பன் கணேசன் குதிருக்குள்ளே இல்லை என்று அவரே ஒப்புக்கொண்டுவிட்டார்.

Saturday, August 26, 2017

நீட் – வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லுதல் – கல்வியை கேலி செய்தல் - இன்றும் சில எலைட்டுகள் தன் விஷ நாக்குகளை வைத்து செய்யும் திரிப்பு வேலைகள்.



இந்த பதிவில் உள்ள படத்தை நன்றாக பாருங்கள், பிறகு மேலே சொன்ன தலைப்புக்கும் பிறகு நான் சொல்லவிருக்கும் கருத்துக்கும் உள்ள தொடர்பு நன்றாக புரியும்.

கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ, எல்லோராலும் பகிரப்படுகிறது. அதன் தலைப்பே ஏன் தமிழர்கள் இந்தி பேச மாட்டார்கள் என்று அதில் பெரிய எழுத்தில் இருக்கும்.

அந்த வீடியோவில் பேசும் நபர் தொடங்கும் போதே, நாங்கள் தமிழர்கள், நாங்கள் இந்தி தெரியாது என்பதால் பேச மறுப்பதில்லை, வடஇந்தியர்களான உங்களை வெறுப்பேற்றுவதற்காகவே நாங்கள் பேச மறுக்கிறோம், என்று தொடங்குவார்.

அதை கேட்ட உடன் நமது தமிழன் எல்லோரும், தமிழன்டா என்று நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி அந்த வீடியோவை பகிர்வது எனது சமுதாய கடமை என்று பகிரத்தொடங்கிவிட்டார்கள்.

ஆனால் இது என்ன வீடியோ, அதன் பின்னணி என்ன என்று பகிர்வதற்கு முன் தமிழர்கள் அதன் பின்னணியை அறியவேண்டும்.

அதை பற்றி விளக்குவதற்க்கு முன், அந்த படத்தில் உள்ள இரண்டாவது நபர் யாரென்று தெரிகிறதா என்று பாருங்கள், சில மாதங்களுக்கு முன் விஜய் டிவியில், ஜீனியஸ் என்ற பெயரில் பள்ளி குழந்தைகளுக்கான ஒரு வினாவிடை நிகழ்ச்சி தொகுப்பாளர் அவர்.

அந்த படத்தில் உள்ள மூன்றாவது நபர், யாரடி நீ மோகினி திரைப்படத்தில் இரண்டாம் கதாயகனாக நடித்தவர். சில மாதங்களுக்கு முன் பாடகி சுசித்திரா வெளியிட்டதாக திரைஉலகின் பிரபலங்களின் அந்தரங்க படங்கள் வெளியானதே அந்த பாடகியின் கணவர் தான் இந்த கார்த்திக் குமார்

இவர்கள் எல்லாம் யார் என்றால், இவர்கள் எல்லாம் முன்னாள் மென்பொறியாளர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள், உண்மையாகவும் இருக்கலாம் மறுக்கவில்லை. ஆனால் இவர்கள் அனைவருக்கும் வேறு ஒரு போது தொடர்பு உண்டு, இவர்கள் எல்லோரும் மைலாபூர் சேர்ந்தவர்கள் அல்லது சார்ந்தவர்கள் என்பது தான் அது

ஆனால் இவர்களது வேலை தற்போது என்ன என்று பார்த்தால்

இவர்களது கூட்டம் இந்தி எதிர்ப்பை பற்றி பேசுபவர்கள் என்று நம்பி ஏமாந்து விடாதீர்கள்

இவர்கள், ஸ்டான்டப் காமடி என்ற பெயரில் காசு வாங்கி கொண்டு, பப்புகள் மற்றும் தனியார் பார்டிகளில்
மிக அருவருப்பான செக்ஸ் ஜோக்குகள் அடிப்பதை தொழிலாக கொண்ட ஒரு எலைட் கூட்டம்

அப்படி ஒரு எலைட் குருப் இருப்பதே இங்கு நம்மில் பலருக்கு தெரியாது.

மேல சொன்ன விஜய் டிவி வினாவிடை நிகழ்ச்சி தொகுப்பாளராக அந்த நபர் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவர் மிகச்சிறந்த கல்வியாளர் என்பதாலா அல்லது அந்த எலைட் குர்ப்பை சேர்ந்தவர் என்பதாலா அல்லது மிக சிறந்த செக்ஸ் ஜோக்குகள் சொல்லும் திறமை படைத்தவர் என்பதாலா என்று விஜய் டிவிக்கே வெளிச்சம்

இந்த எலைட் கலாச்சாரம் வடஇந்தியாவில் தொடங்கி, இப்போது தமிழ் நாட்டு பப்புகளிலும் பார்டிகளிலும் வந்து விட்டது, இந்த மூவர் மட்டுமே இந்த கலாச்சாரத்தின் முன்னோடிகள் அல்ல,
வடஇந்தியாவில் ரஜ்னிஷ் கப்பூர், அதிதி மிட்டல் போன்றவர்கள் மிக மிக பிரபலம்,
ஒரு அரைமணிநேரம், பெண்ணின் மார்பகத்தை பற்றி எவ்வளவு கொச்சையாக காமெடி என்ற பெயரில் பேசவேண்டுமோ அந்த அளவுக்கு பேசிவிட்டு இறுதியில் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக்காக தான் இவ்வளவு நேரம் பேசினோம் என்பார்கள்.

நம் தமிழ் நாட்டு குருப்பில் உள்ள ஒரு நபர் குண்டி என்ற வார்த்தையை பயன் படுத்தி 15 நிமிடம் பேசினார். மற்றொருவர், ஐரோப்பியர்கள் தங்களை காக்கேசியன் என்று சொல்லிக் கொள்கிறார்கள், நான் அதை வன்மையாக கண்டிக்கிறேன், உண்மையில் நாங்கள் தான் ஏசியன் எங்களிடமும் தான் ................... இருக்கிறது அதனால் நாங்கள் தான் காக்கேசியன் என்பார்.

இவர்களுக்கு கார்பொரேட் உலகில் எல்லாம் கிடைக்கும், இவர்கள் தான் இந்த எலைடுகள்.

இவர்கள் சிலநேரம் பார்பனரை ஏன் மோடியை கூட கலாய்ப்பார்கள், அதற்காக இவர்கள் போராளிகள் என்று தவறாக நினைத்துவிடாதீர்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கூட அடிவிழும் கணத்துக்கு முன்னால் வரை நீங்கள் இவர்களை அங்கே பார்க்கலாம்.

எப்போதாவது சரக்கடிக்கும் போது யூ-டியுபில் இவர்களது காமநெடிகளை கண்டு ரசியுங்கள். இவர்களது வேலையை ஆங்கிலத்தில் Soft Porn Standup show என்று சொல்லலாம்

அதற்கு மேல் எந்த வோர்த்தும் இல்லை, ஆனால் இந்த ஸ்டான்டப் ஷோக்களில் இவர்களது பேச்சுகள் முழுக்க முழுக்க செக்ஸ் பூசப்பட்டிருந்தாலும், இந்த பதிவின் தலைப்பில் சொன்ன விஷயங்களே அடிநாதமாக இருக்கும்

சம்பந்தம் இல்லாமல் மார்பியஸ், நீயோ பெரியார் படம் இந்த பதிவில் ஏன் என்று

புரியாமல் கேட்பவர்கள், ராஜ் டிவியில் மதியம் கைகொடுப்பாள் கற்பகாம்பாள் படம் போடுவார்கள் அதை பார்த்து அமைதியாக உறங்கவும்

புரிந்தவர்கள் உங்களை நீங்களே முதிகில் தட்டிகொடுத்துகொள்ளவும்

Thursday, August 24, 2017

தேவ மைந்தனின் பிறந்தநாள்



இந்த சம்பவம் நடந்தது கிமு44-ல், ஏசு உண்மையில் பிறந்தது இன்று எல்லோரும் சொல்லும் சைபர் வருடத்தில் அல்ல. அதற்கு 44 வருடங்களுக்கு முன்னரே அவர் பிறந்து விட்டார்.

இதை கிரிகோரியன் காலேண்டர் என்று நீங்கள் கூகிளில் தேடி பார்த்தால் அறிந்து கொள்ள முடியும்.     

அந்த கிமு44-ல் நடந்த சம்பவம் பற்றியதே இந்த பதிவு.

அப்போது யஹோவா என்ற ஆதி கர்த்தர்,

மேரியை கடத்திக் கொண்டு வந்து ஓர் பனி படர்ந்த மலையில் ஒளித்து வைத்திருந்தார், ஏசு என்ற தேவ மைந்தனை, அவளுக்கு கொடுப்பதற்காக

அதாவது  பதின்ம வயதில் உள்ள பெண்ணின் வயிற்றில் ஒரு குழந்தையை  உருவாக்கும் நல்ல எண்ணத்துடன்.

ஒரு வேளை இந்த ஆதி கர்த்தர் பதின்மவயதில் இருந்த மேரியை கற்பம் ஆக்காமல் அவளை திருமணம் செய்து கொள்ள ஒத்து கொண்ட யோசப்பை  கர்ப்பம் ஆக்கி காட்டியிருந்தால், அவனது வயிற்றில் இருந்து ஒரு தேவ மைந்தனை பிறக்க வைத்து கட்டியிருந்தால்  நானும் கர்த்தர் நல்லவர் மகிமை செய்யப் படவேண்டியவர் என்று ஒத்து கொண்டிருப்பேன்

ஒரு டீன் ஏஜ் பெண்ணை கடவுளின் பெயரால் கர்ப்பம் ஆக்குவது உலகம் முழுவதும் எந்த காலத்திலும், என் இன்றும் செய்வது சுலபமான வேலை. அதற்கு மகிமையான கர்த்தர் தேவையில்லை, தெருவோர கோயிலின் பூசாரியே போதும்.

ஆனால் எங்கள் ஊர் மகாவிஷ்ணு அதையும் நாரதர் மூலம் ஒருமுறை அல்ல 60 முறை செய்து காட்டி விஞ்ஞான கடவுள் என்று ஏற்கனவே பெயர் வாங்கி விட்டார், அந்த குழந்தைகள் தான் 60 தமிழ் வருடங்களின் பெயர்கள் 

ஆதி கர்த்தரை விட மகாவிஷ்ணு knows more science

MY ANCHESTORS ARE NOT IDIOTS

ஆயினும் கர்த்தர் இப்படியாக மேரியை கடத்தி கொண்டு வந்து ஒரு பனிமலையில் ஒளித்து வைத்து விட்டு வேறு வேலையாக எங்கோ சென்று விட்டார்.

திரும்பி வந்த ஆதி கர்த்தரான யஹோவா பார்த்தால், மேரிமாதா அந்த பனி பிரதேசத்தின் குளிரில் இருந்து தன்னை காத்து கொள்ள தன் விரல்களில் மருதாணி வைத்திருந்தார்

மருதாணி நன்றாக கைகளில் ஒட்டிக்கொண்ட உடன், அந்த காய்ந்த மருதாணியை உடைத்து  போட்டார்.

அந்த மருதாணி துகள்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து ஒரு குழந்தையாக மாரிவிட்டது.

வேட்டைக்கு சென்ற திரும்பி வந்த சிவபெருமானான சுடளிமாட சாமியான யஹோவா கோபமாக நான் இல்லாமல் எப்படி ஒரு குழந்தை பிறந்தது என்று கேட்டு அந்த குழந்தையின் தலையை வெட்டி விடுகிறார்  

மேரி மாதா, உடனே எப்படி குழந்தை பிறந்தது என்று நீங்கள் உங்கள் நண்பரான  நந்தியிடம் தான் கேட்க வேண்டும்

ஆனால் ஏன் நீங்கள் சோம பானம் குடித்து விட்டு வந்து என் குழந்தையை ஏன் கொன்று போட்டீர்கள் என்று கேட்க

யஹோவா, கவலை வேண்டாம் மேரி, உன் மகன் என் மகன்

இதில் நடுவில் நந்தியை எல்லாம் சாட்சிக்கு அழைக்க வேண்டாம்

இன்று இறந்த நம் மகன் மூன்றாம் நாள் உயிர்த் தெளுவான் என்று சொல்லி, மேரியை சமாதானம் செய்து விட்டு

தன் பூதகணங்களுக்கு எல்லாம் ஒரு கட்டளை போட்டார், ஏதாவது ஒரு லூசு வடக்கு பக்கம் NEET EXAM நடக்குதுன்னு தூங்கி கொண்டு இருப்பான், அவன் வடக்கு பக்கம் தலை வைத்து படுத்திருப்பான் அவன் தலையை வெட்டி கொண்டு வா என்று சொல்லி அனுப்பினார்.

ஆனால் தமிழ் நாட்டில் எல்லா லூசுகளும் வடக்கு பக்கம் தளி வைத்து தூங்கி கொண்டிருந்ததை பார்த்த பூத கணங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தனர், பாவம் அந்த பூதங்கள் எல்லாம் சமச்சீர் கல்வி கற்றவர்கள்.      

அப்போது யஹோவா கவலை வேண்டாம் அங்கே ஒரு யானை படுத்திருகிறது பாருங்கள் என்று சொல்லி, அதன் தலையை வெட்டுங்கள் என்று சொல்ல அந்த பூத கணங்கள் யானையின் தலையை கொண்டு வந்து கொடுக்க,
செத்து போன பிள்ளையின் உடலில் ஓட்டவைக்கிறார் யஹோவா 

இப்படியாக யார் பிள்ளை என்று தெரியாத காரணத்தால் அவர் பிள்ளையார் என்றும்

யஹோவாவின் பூத கணங்கள் அவர் மறு பிறவி எடுக்க காரணமாக இருந்ததால் கணபதி என்றும்              

நமது பாவங்களுக்கு மன்னிப்பு தரும் வினைகள் தீர்ப்பவர் என்பதால் வினை தீர்க்கும் நாயகன் என்றும்

இன்னும் பல பெயர்களில் அழைக்கப்படும் நமது பிள்ளையார், கிபி 500-ல் வாதாபியில் தன்னை வழிபட்ட சாளுக்கியன் கெட்டவன் என்பதால்


படையெடுத்து வந்த நல்லவன் நரசிம்மனோடு தமிழகம் வந்தவர் வீர விநாயகன்

சங்க காலத்தில் ஒரு இளம் பெண்ணாக இருந்த, பெண் புலவரான அவ்வையாரை கிழவியாக மாற்றி Work Place Sexual Harrasment-ல் இருந்து காப்பாற்றிய Feminist – ஆன கணேசனை

பெயர் மாற்றி இயேசு மூன்றாம் நாள் உயிருடன் வந்தார் போய் கதை பரப்பும் வெள்ளையர் புரட்டை நம்பாமல்

வீர விநாயகனை வணங்குவோம்

இந்த தேவ மைந்தனின் பிறந்த தினமான இன்று எல்லோருக்கும் ஹாப்பி பிள்ளையார் டே என்று சொல்லிக் கொள்கிறேன்

இன்னும் நம்பிக்கை இல்லையென்றால் இந்த பதிவில் உள்ள படத்தை பாருங்கள் ஏசு பிறந்தததாக சொல்லப்படும்  கிமு 44 December 25,  வளர்பிறை சதுர்த்தி நாள் தான் பிள்ளையார் பிறந்த தினம்  

இப்போதாவது என் முன்னோர்கள் யாருமே மூடரில்லை என்று புரிந்து கொண்டு தேவ மைந்தனான பிள்ளையாரின் பிறந்தநாளை மகிழ்வோடு எல்லோரும் கொண்டாடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம்         

         

தமிழன் எப்போது துருக்கி சென்றான்

துருக்கி நாட்டில் யுபிரிடஸ் நதிக்கு மேற்கே உள்ள ஒரு பெரிய நகரத்தின் பெயர்

அதியமான்

துருக்கிய மொழியில் அதற்கு அர்த்தம் மிக கடினமான என்பதாகும் - இன்றும் அந்த ஊருக்கு அதியமான் என்றே பெயர்

அதியமானின் தலைநகரம் தகடூர் - இரும்பை மெல்லிய தகடாக அ்டித்து தட்டும் ஊர் என்று பொருள்

அந்த நகருக்கு அருகே உள்ள ஒரு பெரிய குகை தொடருக்கு பெயர்

பழன்லி (அ) பழனி,

இந்த குகையில் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் இருக்கிறதாம்.

பல கற்கால ஓவியங்கள் இந்த குகையில் பார்க்கலாம், இந்த குகையின் இன்னொரு பெயர் கப்படோசயா

இந்த கப்படோசயா-வின் பழைய பாரசீக பெயர் ஹஸ்படுயா, அதன் மூலச்சொல் கட்ட படுக்கை

இந்த கட்ட படுக்கை என்ற சொல்லின் பாரசீக அர்த்தம் தாழ்வான நிலம் அல்லது பகுதி என்பதாகும்

அப்படிஎன்றால் தமிழன் எப்போது துருக்கி சென்றான்

Wednesday, August 23, 2017

கிருஷ்ணனும் கால் யவனனும்

மகாபாரத்ததில், கிருஷ்ணர் கம்சனை கொன்றபிறகு, கம்சனின் மாமனார் ஜராசந்தன், கிருஷ்ணனை கொல்ல சபதம் எடுக்கிறார், மகதநாட்டு மன்னனான தன்னால் தனியாக கிருஷ்ணனுடன் போரிட முடியாது என்று, கால் யவனன் என்ற மேற்கு திசை மன்னனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, இருவரும் ஒரே நேரத்தில் மதுரா நகரை தாக்குகிறார்கள்.

இவர்களின் தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாத கிருஷ்ணன் தன் மக்களை கடலில் உள்ள தீவு நகரமான துவாரகைக்கு பாதுகாப்பாக அனுப்பிவைத்து விட்டு தப்பி ஓடுகிறான்,

இப்படி போரிலிருந்து ஓடியவன் என்ற பொருள் படும்படி, கிருஷ்ணன் “ரன்சோதிராய்” என்னும் சிறப்பு பெயரால் பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறான்.

அப்படி ஓடிய கிருஷ்ணன், ஒரு குகைக்குள் நுழைந்து, அங்கே நீண்ட நாளாக உறங்கிகொண்டிருக்கும், முசுகுந்த சோழன் உடலில் தன் மேல் துணியை போர்த்திவிட்டு, அந்த சோழனின் பின்னே ஒளிந்துகொள்கிறான்.

முசுகுந்த சோழனுக்கு ஒரு வரம் உண்டு, அவன் உறங்கும் போது யாராவது அவனது உறக்கத்தை கலைத்தால், அவனது கோவப்பார்வை பட்டால் எழுப்பியவர் எரிந்து சாம்பாலாகிவிடுவார்கள்.

இது தெரியாமல் பின்தொடர்ந்த கால் யவனன், படுத்திருப்பது கிருஷ்ணன் என்று எண்ணி எட்டி உதைக்க, சோழன் எழுந்து முறைக்க, எரிந்து சாம்பலாகிறான் கால் யவனன்.

பின் கிருஷ்ணன் துவாரகைக்கும், சோழன் தன் நாட்டிற்கும் செல்கின்றனர்.

இப்போது கேள்வி என்னவென்றால்,
இந்தியாவில் அல்லது தற்போதைய இந்தியாவின் மேற்கு பகுதியில் எந்த யவன மன்னன் இருந்தான் என்பதே.

வடஇந்திய ஆரியருக்கு கிமு300-இல் அலேக்சாண்டர்க்கு முன் யவனர்கள் பற்றி எதுவும் தெரியாது, எந்த வேதநூல்களிலும் யவனர் பற்றிய எந்த குறிப்பும் கிடையாது,

அலேக்சண்டரின் கவர்னர் ஆனா செலுக்கஸ் நிகேடாரின் வம்சமாக வந்து இந்தியாவின் மேற்கு பகுதியை, தற்போதைய ஆப்கானிஸ்தான் பகுதியில் பாக்டீரியா நகரை தலைநகரமாக கொண்டு ஆண்டவர்கள் குஷானர்கள்,

அவர்கள் எப்போதும் தங்களை யவனர்களாகவே அடையாளம் காட்டி கொண்டனர் அவர்களது பொற்காசுகளில், கிரேக்க மொழியையே பயன்படுத்தினர்.

கால் யவனன், ஒரு யவனமன்னன் என்று மகாபாரத்ததில் தெளிவாக சொல்லப்படுகிறது,

அப்படியானால், கீழ் கண்டவற்றில் எது சரி என்று வதம் செய்ய வாருங்கள்:
  1. மகாபாரதம் நடந்த காலம் குஷனர்கள் காலம் – அதாவது கிமு300 - கிபி 230 வரை
  2. மகாபாரதம் 5000 – 10,000 வருடத்துக்கு முன் நடந்தது என சொல்லப்படுவது உடான்சு
  3. அதெல்லாம் இல்லை, இந்த ஒரு பகுதி மட்டுமே பின்னாளில் சேர்க்கப் பட்டிருக்கலாம் என்ற வாதம் வைக்க நீங்கள் முன்வந்தால், அடுத்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்
  4. அப்படியானால் மகாபாரதம் முழுக்க முழுக்க இது போல பல பகுதிகள் சேர்க்கப்பட்ட உடன்சு கதைகளின் புரட்டு புராணம் என்பதை ஒப்புகொள்கிறீர்களா
  5. மகாபாரதம் 5000 வருடம் முன்னரே நடந்தது, எழுதிய வியாசர் தான் பிற்காலத்தை சேர்ந்தவர், என்பது உங்கள் வாதம் என்றால்  
  6. அப்படியானால் வியாசர் வேத காலத்தை சேர்ந்தவர் இல்லை, குஷானர் காலத்துக்கு பின்னர் வந்தவர் என்பது உண்மை என்று நீங்கள் ஒப்பு கொள்ள வேண்டும் 
  7. வியாசர் மகாபராதத்தை சொல்ல சொல்ல விநாயகர் எழுதினர்,  
  8. விநாயகர், முதல் முதலில் இந்திய வரலாற்றில் வருவதே, நரசிம்ம பல்லவன் கிபி 650-ல் வாதாபி நகரத்தின் மீது படை எடுக்கு போது தான். அப்போது தான் அப்படி ஒரு கடவுள் இருப்பதே, இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு தெரியவருகிறது.  
  9. எனவே வியாசர் கிபி 600-ஐ சேர்ந்தவர்,  
  10. மகாபாரதம் எழுதப்பட்டதும் கிபி600-களில் தான்
இனி அறிவுக்கும், விஞ்ஞானப் பார்வைகும் ஒவ்வாத,

அவர்களுக்கு மட்டுமே தெரிந்த வாட்சப் புள்ளி விவரங்களை அள்ளிதெளித்து கோலம் போட்டு விளையாட வேத வரலாற்று வல்லுனர்களை அன்புடன் அழைக்கிறோம்.

Book Wrapper

இந்த நூலை  வாங்க  விரும்பினால்  இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்     விலை ரூ.200 மட்டுமே