நீட் என்னும் இந்த பிசாசு நாம் விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும் நம் வாசல் வந்து பல குழந்தைகளின் கனவில் மண்ணை போட்டதும்
அல்லாமல், ஒரு உயிர் பழியும் வாங்கிவிட்டது.
டில்லி சர்வாதிகாரிகளுக்கு நம் பலம் தெரியவில்லை.
- இந்தியாவிலேயே அதிக சதவீகித மாணவர்கள் +2 வரை பள்ளி கல்வியில் இறுதி வரை கொண்டு வருவது நமது தமிழக கல்வி முறை மட்டுமே
- கடந்த ஆண்டு +2 தேர்வு எழுதியோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 9 லட்சம், அதில் 92.5% பேர் தேர்ச்சி பெற்றவர்கள்
- 1813 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றவர்கள் அதில் 292 அரசு பள்ளிகளும் அடங்கும்
- 1171 மாணவர்கள் 1180 மதிப்பெண்கள் எடுத்தவர்கள்
- கடந்த ஆண்டு 200/200 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 10,000 – காமர்ஸ் எகானாமிக்ஸ் உட்பட
- கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியோர் 83,859 பேர் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் வெறும் 32,000 பேர்கள் மட்டுமே
எங்கள் பிள்ளைகள் எதிலும் சோடை போனவர்கள் அல்ல,
இந்த நீட் பிசாசு வராது வராது என்று அரசியல் சாக்கடைகள் சொன்னதை நம்பி
ஏமாந்தவர்கள் தானே தவிர எந்த விதத்திலும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை.
ஆயுதம் இன்றி பயிற்சி இன்றி சண்டை போடு என்றால் என்ன
செய்வார்கள், நம் பிள்ளைகள்.
நீட்-ஐ எதிர்த்து இந்த பிள்ளைகளுக்கு ஆயுதமும்
பயிற்சியும், கொடுப்போம்.
சில அரசு பள்ளி ஆசிரியர்களிடம் பேசியுள்ளேன்,
அவர்கள் நீட் வினாவிடைகளை தமிழில் மொழிபெயர்க்க ஒப்புக்கொண்டுள்ளார்கள். சுமார்
10,000 வினாவிடைகள் தயார் செய்ய உத்தேசம்
NEET FREE
TRAINING.COM பெயரில் ஒரு இலவச ஆன்லைன்
பயிற்சி வலைத்தளம் அமைப்பது என்று முடிவு செய்துள்ளேன். இந்த வலைதளத்தில் ஆங்கிலம்
மற்றும் தமிழ் ஆகிய இரண்டு வழிகளில் பயிற்சி கொடுக்கப்படும்.
இந்த வலைதளத்தில் தமிழ் நாட்டு மாணவர்கள்
மட்டுமே சேர்த்துகொள்ளப்படுவார்கள். முழு சேவைகளும் வசதிகளும் இலவசமாக கொடுக்கப்படும்.
அடுத்த ஆண்டில் அவர்கள் நீட் வைக்கட்டும் நம் பிள்ளைகள்
சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டு அதில் 10,000 பேர் முதல் மதிப்பெண்கள்
பெற்று
தமிழ் நாட்டு கல்லூரிகள் மட்டுமல்லாமல் மற்ற மாநில
கல்லூரிகளையும் இடம் பிடித்து,
இன்னும் இரண்டு ஆண்டுகளில் நீட் தேர்வே வேண்டவே வேண்டாம் என்று அவர்களை ஓட
வைப்போம்.
ஆனால் இதற்கு பணம் வேண்டுமே என்ன செய்வது என்று
சிந்தித்த போது, ஒரு யோசனை தோன்றியது.
ஏற்கனவே பல நண்பர்கள், நமது “தெரிந்த வரலாற்றின்
தெரியாத பக்கங்கள்: தொடரை புத்தகமாக கொண்டு வாருங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
தற்போது ஏற்கனவே எழுதியவை, மற்றும் இந்த மாதம்
எழுத இருக்கும் ஆதிசங்கரன் பற்றிய பதிவுகளையும் சேர்த்தால், சுமார் 25
அத்தியாயங்கள் வருகிறது. இதை புத்தகம் ஆக்க விசாரித்த போது, செலவு ஒரு
புத்தகத்துக்கு ரூ.60 ஆகும் என்றார்கள்.
இந்த புத்தகத்தை, ஒரு பிரதி ரூ.160, என்ற
விலையில் தருகிறேன். அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடுகிறேன். இன்றே முன் பதிவு
செய்யுங்கள்,
இதில் ஒரு புத்தகத்துக்கு ரூ.100 லாபம் கிடைக்கும் அதை மேலே சொன்ன இலவச நீட்
பயிற்சி வலைதளத்துக்காகும் செலவுக்கு பயன்படுத்துவோம்.
நீங்கள் புத்தகம் வாங்குவதாக நினைக்க வேண்டாம், இலவச
நீட் பயிற்சி வலைதளம் உருவாக்க கொடுக்கும் நன்கொடையாக நினைத்து கொடுங்கள்,
உங்கள் நன்கொடைகள் ரூ.160-ன் மடங்குகளாக
இருக்கட்டும், உதாரணமாக ரூ.1600 நன்கொடை தரும் நண்பருக்கு 10 பிரதிகள் புத்தகம்
அனுப்பிவைக்கிறேன் அதை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கலாம்.
குறைந்த பட்சமாக ரூ.160 நன்கொடை அளிக்கும் நண்பர்களுக்கு 1 பிரதி புத்தகம் அனுப்பிவைக்கிறேன்
நீங்கள் கொடுக்கும் ரூ.160 நீட்-க்கு, எதிராக
நாம் முன்னெடுக்கும் இந்த முயற்சிக்கு பெரும் உதவியாக நிச்சயம் இருக்கும், அதற்கு
நேரடி பலனாக உங்களுக்கு புத்தகமும் கிடைக்கும், அதனால் நான் இந்த பணத்தை சேகரித்து
கொண்டு ஓடிவிடிவேன் என்று எண்ண வேண்டாம்
நன்கொடை வழங்கி புத்தகங்களை பெற கீழே உள்ள
லிங்கை கிளிக் செய்யவும்
இதை மேலும் சரியான முறையில் செய்ய நண்பர்களின்
ஆலோசனைகளையும் வரவேற்கிறேன், வாருங்கள் ஊர்கூடி நீட்-ஐ எதிர் கொள்ள நம் பிள்ளைகளை
தயார் செய்வோம்
No comments:
Post a Comment