Wednesday, August 23, 2017

கிருஷ்ணனும் கால் யவனனும்

மகாபாரத்ததில், கிருஷ்ணர் கம்சனை கொன்றபிறகு, கம்சனின் மாமனார் ஜராசந்தன், கிருஷ்ணனை கொல்ல சபதம் எடுக்கிறார், மகதநாட்டு மன்னனான தன்னால் தனியாக கிருஷ்ணனுடன் போரிட முடியாது என்று, கால் யவனன் என்ற மேற்கு திசை மன்னனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, இருவரும் ஒரே நேரத்தில் மதுரா நகரை தாக்குகிறார்கள்.

இவர்களின் தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாத கிருஷ்ணன் தன் மக்களை கடலில் உள்ள தீவு நகரமான துவாரகைக்கு பாதுகாப்பாக அனுப்பிவைத்து விட்டு தப்பி ஓடுகிறான்,

இப்படி போரிலிருந்து ஓடியவன் என்ற பொருள் படும்படி, கிருஷ்ணன் “ரன்சோதிராய்” என்னும் சிறப்பு பெயரால் பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறான்.

அப்படி ஓடிய கிருஷ்ணன், ஒரு குகைக்குள் நுழைந்து, அங்கே நீண்ட நாளாக உறங்கிகொண்டிருக்கும், முசுகுந்த சோழன் உடலில் தன் மேல் துணியை போர்த்திவிட்டு, அந்த சோழனின் பின்னே ஒளிந்துகொள்கிறான்.

முசுகுந்த சோழனுக்கு ஒரு வரம் உண்டு, அவன் உறங்கும் போது யாராவது அவனது உறக்கத்தை கலைத்தால், அவனது கோவப்பார்வை பட்டால் எழுப்பியவர் எரிந்து சாம்பாலாகிவிடுவார்கள்.

இது தெரியாமல் பின்தொடர்ந்த கால் யவனன், படுத்திருப்பது கிருஷ்ணன் என்று எண்ணி எட்டி உதைக்க, சோழன் எழுந்து முறைக்க, எரிந்து சாம்பலாகிறான் கால் யவனன்.

பின் கிருஷ்ணன் துவாரகைக்கும், சோழன் தன் நாட்டிற்கும் செல்கின்றனர்.

இப்போது கேள்வி என்னவென்றால்,
இந்தியாவில் அல்லது தற்போதைய இந்தியாவின் மேற்கு பகுதியில் எந்த யவன மன்னன் இருந்தான் என்பதே.

வடஇந்திய ஆரியருக்கு கிமு300-இல் அலேக்சாண்டர்க்கு முன் யவனர்கள் பற்றி எதுவும் தெரியாது, எந்த வேதநூல்களிலும் யவனர் பற்றிய எந்த குறிப்பும் கிடையாது,

அலேக்சண்டரின் கவர்னர் ஆனா செலுக்கஸ் நிகேடாரின் வம்சமாக வந்து இந்தியாவின் மேற்கு பகுதியை, தற்போதைய ஆப்கானிஸ்தான் பகுதியில் பாக்டீரியா நகரை தலைநகரமாக கொண்டு ஆண்டவர்கள் குஷானர்கள்,

அவர்கள் எப்போதும் தங்களை யவனர்களாகவே அடையாளம் காட்டி கொண்டனர் அவர்களது பொற்காசுகளில், கிரேக்க மொழியையே பயன்படுத்தினர்.

கால் யவனன், ஒரு யவனமன்னன் என்று மகாபாரத்ததில் தெளிவாக சொல்லப்படுகிறது,

அப்படியானால், கீழ் கண்டவற்றில் எது சரி என்று வதம் செய்ய வாருங்கள்:
  1. மகாபாரதம் நடந்த காலம் குஷனர்கள் காலம் – அதாவது கிமு300 - கிபி 230 வரை
  2. மகாபாரதம் 5000 – 10,000 வருடத்துக்கு முன் நடந்தது என சொல்லப்படுவது உடான்சு
  3. அதெல்லாம் இல்லை, இந்த ஒரு பகுதி மட்டுமே பின்னாளில் சேர்க்கப் பட்டிருக்கலாம் என்ற வாதம் வைக்க நீங்கள் முன்வந்தால், அடுத்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்
  4. அப்படியானால் மகாபாரதம் முழுக்க முழுக்க இது போல பல பகுதிகள் சேர்க்கப்பட்ட உடன்சு கதைகளின் புரட்டு புராணம் என்பதை ஒப்புகொள்கிறீர்களா
  5. மகாபாரதம் 5000 வருடம் முன்னரே நடந்தது, எழுதிய வியாசர் தான் பிற்காலத்தை சேர்ந்தவர், என்பது உங்கள் வாதம் என்றால்  
  6. அப்படியானால் வியாசர் வேத காலத்தை சேர்ந்தவர் இல்லை, குஷானர் காலத்துக்கு பின்னர் வந்தவர் என்பது உண்மை என்று நீங்கள் ஒப்பு கொள்ள வேண்டும் 
  7. வியாசர் மகாபராதத்தை சொல்ல சொல்ல விநாயகர் எழுதினர்,  
  8. விநாயகர், முதல் முதலில் இந்திய வரலாற்றில் வருவதே, நரசிம்ம பல்லவன் கிபி 650-ல் வாதாபி நகரத்தின் மீது படை எடுக்கு போது தான். அப்போது தான் அப்படி ஒரு கடவுள் இருப்பதே, இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு தெரியவருகிறது.  
  9. எனவே வியாசர் கிபி 600-ஐ சேர்ந்தவர்,  
  10. மகாபாரதம் எழுதப்பட்டதும் கிபி600-களில் தான்
இனி அறிவுக்கும், விஞ்ஞானப் பார்வைகும் ஒவ்வாத,

அவர்களுக்கு மட்டுமே தெரிந்த வாட்சப் புள்ளி விவரங்களை அள்ளிதெளித்து கோலம் போட்டு விளையாட வேத வரலாற்று வல்லுனர்களை அன்புடன் அழைக்கிறோம்.

No comments:

Post a Comment

Book Wrapper

இந்த நூலை  வாங்க  விரும்பினால்  இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்     விலை ரூ.200 மட்டுமே